Thursday, April 22, 2010

வோட்காவுடன் ஒரு நாள்.

இந்த பதிவை படித்த பிறகு என் மீது இருக்கும் உங்கள் அபிமானம் மாறிப் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..

காரணம் முதன் முதலில் நான் தண்ணியடிக்க (அட பைப்பில் இல்லைங்க) காரணமாக இருந்த சம்பவத்தைத்தான் இங்கே..............

இனி கச்சேரி ஆரம்பம்..

சிறுவயதில் அங்கே இங்கே இடம் மாறி, மூன்றாவது படிக்கும் போதுதான் என் மாமா வீட்டில் அடைக்கலம் ஆனேன்.. ஊர் கொத்துக்காரர் என் மாமா.. நான் பிளஸ் டூ படிக்கும் வரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.. அப்புறம் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டல் போய் வந்த பிறகு, சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். ஆனால் அவர் தண்ணியடித்து அதாவது எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் சாராயம் குடித்ததில்லை... அந்த ஏரியா பக்கமே போக மாட்டார். இதனாலேயே எங்க மாமாவுக்கு ரொம்ப மரியாதை.. அவர் வீட்டிலேயே நான் வளர்ந்ததால் எனக்கும் தண்ணியடிப்பவர்களை பிடிக்காது.. பார்க்கவே அறுவருப்பாக இருக்கும்.. (எல்லாம் என் கையில் ஒரு வோட்கா பாட்டில் வரும் வரைதான்).

ஆனால் என் அப்பா அப்படியில்லை.. டீ குடிச்சா நல்லாயிருக்கும்ன்னு அவர் சொன்னாலே தண்ணியடிக்கப் போகிறார்ன்னு அர்த்தம்.(அவரோட கோட் வேட் அது)... தினமும் டீ குடிக்காம அவரால்  இருக்க முடியாது... அவர் நட்பு வட்டமும் அப்படித்தான்..

அவரை நான் சந்திக்கும் சமயமெல்லாம் தண்ணியடிப்பதை பார்த்திருக்கிறேன்.. வளர்ந்த பிறகு, அப்பாவுக்கு முட்டை வறுத்து தந்திருக்கிறேன். அவர் தண்ணியடிக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து சிப்ஸீம், சிக்கனும் சாப்பிட்டிருக்கிறேன்..

என் பெரியம்மாவிற்கு மூன்று மகள்கள்.. ஒற்றை பெண்ணான நான் அவர்களை என் சொந்த சகோதிரிகளாகத்தான் நினைப்பேன்.. நான்  பிளஸ் ஒன் படிக்கும் போதுஎன் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகியிருந்தால், விடுமுறைக்குச் செல்ல எனக்கு நிறைய வீடுகள் இருந்தன..அப்படி ஒரு மே மாதத்தில் தான் நான் தண்ணியடிக்க கற்றுக் கொண்டது..

அட... எங்க மாமா தண்ணியடிப்பார்... நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.. எங்க வீட்டில் யாரும் அப்படி ஒன்றும் மொடாக் குடியர்கள் இல்லை.. ஒரு லார்ஜ் வரை தான்.. ஒயின் ஷாப்பில் போய் தண்ணியடித்து, அதை தெரிந்தவர்கள் பார்ப்பது, பக்கத்து டேபிள்க்காரனிடம் வீண் சண்டை இதை தவிர்க்க, வீட்டிலேயே தண்ணி அடிப்பதில் தப்பில்லை என்பது எங்கள் குடுமபத்தின் கருத்து.. வீட்டு ஆண்கள் மொத்தமாய் சேர்ந்து மாடியிலோ, தோட்டத்திலோ தண்ணி அடிக்க, பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்.. அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..

போகப் போக எனக்கும் சைட்டிஸ் செய்து தருவது பழகிவிட்டது.. நானே உருவாக்கிய சைட்டிஸ் ஒன்றின் ரெசிபி சொல்லட்டுமா?
பொறி, பெப்பர், சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, இதையெல்லாம் பதமாக வருத்து எடுத்து முட்டை பொரியலுடன் கலந்து சாப்பிட,.. அட சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

சரி.. நான் தண்ணியடிக்க நேர்ந்த கதையை சொல்கிறேன்...

தமிழ் வருட பிறப்பிற்கு அடுத்த நாள், எங்க அலுவலகத்தின் சார்பில் மூனாறு டூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ( டூர் என்றால், எங்களுக்கு பைசா செலவில்லை.. எல்லாமே ஆபீஸ் ஸ்பான்ஸர்) சென்னையில் இருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.. மொத்தம் 120 பேரில் எட்டு பேர் மட்டுமே பெண்கள். அடுத்த நாள் காலையில் உடுமலைப்பேட்டையில் காலை உணவு சாப்பிட்ட போது, எல்லார் கையிலேயும் ஒரு வெள்ளை பேப்பர் தரப்பட்டது..
அதாவது, அன்று இரவு பயர் கேம்பில் தண்ணியடிக்க யார் யாருக்கு என்ன பிராண்ட் வேண்டும் என்பதை எழுதித் தர வேண்டும்.. எங்க ஆபிஸில் இருக்கும் எல்லா ஆண்களும் தங்களுக்கு பிடித்த பிராண்ட் பெயரை எழுதித் தந்தார்கள்.. எங்கள் பெண்கள் குழுவிடம் மட்டும் அந்த வெள்ளை தாள் தரப்படவில்லை.. இது தெரிந்து நாங்கள் கேட்டதும், வேண்டா வெறுப்பாக எங்களிடம் தர, எல்லா பெண்களும், பெப்சி, கோக் என்று எழுதி தர, நான் மட்டும் ஒரு வோட்கா பாட்டிலும் செவன் அப்-பும் என்று எழுதி தந்தேன்..

அப்போதே எல்லோரும் என்னை கிண்டல் செய்ய, அதென்ன ஆணுக்கு ஒரு நியாயம் பெண்க்கு ஒரு நியாயமா, மத்த ஆண்கள் எழுதி தந்தா மட்டும் எதுவும் சொல்லவில்லை-ன்னு வாயாடிக்கொண்டிருந்தேன்..

மதிய உணவின் போது, எங்க சீனியர் ‘கண்டிப்பா உனக்கு வோட்கா வேண்டுமா’ என்றார்... நிஜமாகவே வேண்டும் என்றேன் நான்..

அன்று பயர்  கேம்ப் முடிந்ததும், இரவு உணவு பப்பே முறையில்... எங்க ஆபீஸ் அட்டண்ட் போன் பண்ணி, ‘மேடம் உங்களுக்கு ஒரு பாட்டில் தரச் சொன்னாங்க” என்று பம்மியபடியே, ஒயின் பாட்டில் ஒன்றை மறைத்து மறைத்து குடுத்தார்.. நான் கொஞ்சம் கூட சங்கடப் படாமல், அந்த பாட்டிலை என் டேபிள் மேல் வைத்துவிட்டு சாப்பிட, (அட டின்னர்ங்க) ஒட்டு மொத்த ஆபீஸீம் அதிர்ச்சியாகிப் பார்த்தது .
நானோ கூலாக, மறுபடியும் எங்க அட்டண்டருக்கு போன் பண்ணி, நான் கேட்டது வோட்கா, நீங்க ஏன் ஒயின் குடுத்தீங்க,, என்னை ஏமாத்தறீங்களா, என்று கேட்டேன்.. அவர் மறுபடியும் எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல, என்னை தேடி வந்தது வோட்கா பாட்டில்....

அதற்கும் பூசணிக்கா,(எங்க ஆபீஸில் எனக்கு வைத்த செல்ல்ல்ல்ல்ல பெயர்) வோட்க்கா பாட்டில் வாங்கிடுச்சாம் என்று ஒட்டு மொத்த டூர் டீம்க்கும் தகவல் போய்விட்டது.. பக்கத்தில் இருந்தவர்கள், என்னை அதிர்ச்சியாய் பார்க்க, தொலைவில் இருந்தவர்கள், கேரளா ரோம்மிங்கையும் தாண்டி எனக்கு போன் பண்ணி விசாரித்தார்கள்..

அப்படியே இரவு தூங்குவதற்காக, ஹோட்டலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டேன்.. நோட் தி பாயிண்ட். அந்த வோட்காவும் ஒயினும் என் ஹேண்ட் பேக்கினுள். அறையில் என்னுடன் வேலை செய்யும் மற்ற இரு பெண்கள்.ஆக களை கட்டியது அரட்டை கச்சேரி..  மறுபடியும் அட்டண்டருக்கு போன் பண்ணி சைட்டிஸ் கேட்டேன்.. அவர் ஒரு சோடா பாட்டிலும் மிக்ஸர் பாக்கெட்டும் தந்தார்.
அதன் பின் பரபரப்பு தொற்றிக் கொண்டது.... குடிக்கலாமா வேண்டாமா, என மனசு குதியாட்டம் போட்டது.. இதற்கு முன் டேஸ்ட் பார்த்தது இல்லை என்றாலும், சின்னதாய் ஒரு ஆர்வம்.. அதற்கு ஆப்பு வைக்க வந்தது ஒரு போன்..
என்னுடன் வேலையை செய்யும் பிரபு அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லோரிடமும் என் அண்ணா என்று அறிமுகம் செய்வேன்.. அவர் போன் பண்ணி தூங்கிட்டியாம்மா என விசாரிக்க,, நான் ஆர்வக் கோளாறில், அண்ணா என்கிட்ட ஒரு ஒயின் பாட்டில் இருக்கு.. உனக்கு தர்றேன் என்று சொன்னதோடு, அப்போதே அட்டண்டர் மூலமாக அவர் அறைக்கு குடுத்து விட்டேன்.

அதன் பிறகு நானும் வோட்கா பாட்டிலும் மட்டுமே..

   நான் குடித்தால் உடன் இருக்கும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.. அதனால் பாட்டிலைப் பார்க்கிறேன்.. யோசிக்கிறேன்.. இந்த கால நேர நகர்தலில் மிக்சரும் சோடா பாட்டிலும் காலி யாகிவிட்டது.. இருப்பினும் அந்த வெள்ளை நிற திர வோட்கா என்னைப் பார்த்து சிரிக்கிறது.. மனசுக்கும் புத்திக்கும் யுத்தம் நடக்கிறது.. குழந்தை குணத்தில் ஒரு குட்டிச்சாத்தான் ஆட்டம் போடுகிறது.. மணி 12‍யை தாண்டி விட்டது.. ஹோட்டல் அறை முழுவதும் நிசப்பதம்.. என் அறையில் இருந்தவர்களும் தூங்கி விட்டார்கள்.. இதுதான் சமயம் என வோட்கா பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன்....

இனி ஓவர் டூ அடுத்த நாள்..

காலை டிபன் சாப்பிடும் போதே, எல்லோரும் ஆர்வமாய், ’வோட்கா குடிச்சியா’  என்று கேட்க, சிரித்து மட்டும் வைத்தேன்.. நீ தண்ணியடிச்சிருக்க, உன் கண்ணைப் பார்த்தாவே தெரியுது என ஏகப்பட்ட கேள்விகள்.. ஆனால் எதற்கும் பதிலில்லை என்னிடம்.... அன்றிறவு டின்னருடன் டூர் முடியப் போகிறது.. பஸ் ஏறினால் அடுத்த நாள், சென்னையில் கொண்டு வந்து விடுவார்கள்.. எல்லோரும் சாப்பிட்டு முடித்து, டூர்க்கு செண்ட் ஆப் குடுக்க போகிற நேரம், கை தட்டி எல்லோர் கவனத்தையும் திருப்பினேன்..

‘’என் கிட்ட ஒரு வோட்க்கா பாட்டில் இருக்கு.. ஆபீஸ்ல இருந்து எனக்கு தந்துதான் என்றதும் எல்லோரும் என்னை உற்று நோக்கினார்கள்.. அப்ப நீ தண்ணி அடிக்கலையான்னு எல்லா விழிகளும் என்னைக் கேட்டன.  ஏனெனில் வாங்கிய எல்லா பிராண்ட் சரக்கும் காலியாக, டூரை முடிவை கொண்டாட அவர்கள் காத்திருந்த சமயம் அது..

நான் வோட்கா பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி, இதை எனக்கு பிடிச்சவங்களுக்கு தரப் போறேன் என்று சொன்னேன்.. என்னை சைட் அடிக்கும் ஆண்களும் நான் சைட் அடிக்கும் ஆண்களும் ஆர்வமாய் பார்க்க, ரெண்டு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு, இதை என் பிரபு அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று என் அண்ணனிடமே அந்த பாட்டிலை தந்துவிட்டேன்..
அப்புறம் டூர் முடிந்து எல்லோரும் ஊருக்கு வந்து விட்டோம்..

இதுதான் மக்கா.. நான் முதன் முதலில் தண்ணியடிச்ச கதை.. சரி.. நீதான் வோட்கா பாட்டிலை மோர்ந்து பார்த்தியே‍ன்னு கேக்கிறீங்களா? அட அது மூடி மேல இருந்த லேபிள் கூட கிழிக்காம முகர்ந்து பார்த்தது..

விடுங்க மக்கா.. யார்கிட்டேவாவது, ‘தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்” பாட்டு இருந்தா தாங்களேன்.. ரிங் டோனா வைக்கணும்..

அட, இப்பெல்லாம் நான் ஹம் பண்ற பாட்டு என்ன தெரியுமா?

போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..

எங்க நீங்களும் பாடுங்க........

69 comments:

வால்பையன் said...

நடுவர் அவர்களே!

பீர்குடித்தால் தெரியும் தெரியாது வோட்கா
வுடன்நீர் சேர்ந்து விடின்!

நசரேயன் said...

//போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..//

வரவேற்கிறேன்

ஈரோடு கதிர் said...

//ஆறாவது பிளஸ் ஒன் படிக்கும் போது//

ஆறு வாட்டி பிளஸ் ஒன் படிச்சியா சுபி..

ஈரோடு கதிர் said...

//எங்கள் குடுமபத்தின் கருத்து//

சூப்பர் கருத்து...
கருத்து கந்தசாமி தோத்துடனும் போங்க

//அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..//

சரக்கையா!!!???

க.பாலாசி said...

அய்யய்ய... சரக்க பத்தியா... நான் வரல....

ரோகிணிசிவா said...

இப்படி பில்ட் அப் பண்ணியே நீயும் காலத்த ஓட்டற நாங்களும் மெனக்கெட்டு அதைப் படிக்கறது,இப்படியே பொழுது போகுது ,
all said u have an immense potential to describe situations, superb subi!!

பனித்துளி சங்கர் said...

ஏலே மக்கா எங்களின் முழுநேர பணியே அதுதான் . தவறில்லை தொடரட்டும் உங்கள் சேவை

பனித்துளி சங்கர் said...

ஏலே மக்கா எங்களின் முழுநேர பணியே அதுதான் . தவறில்லை தொடரட்டும் உங்கள் சேவை

Romeoboy said...

ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது...

ஈரோடு கதிர் said...

//எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல,//

ரொம்ம்ம்ப்ப்ப்ப நல்ல ஆபிஸ்டா சாமி

//இதுதான் சமயம் என வோட்கா பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன்....//

அதுக்கே மப்பு ஏறியிருச்சா!!

ஈரோடு கதிர் said...

//என்னை சைட் அடிக்கும் ஆண்களும் //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..

அடேய் பாலாசி...

இனிமே இந்த புள்ள பொய் பேசுச்சுன்னா.. மவனே பாசமலரு... கொலதாண்டி நீ

வால்பையன் said...

//என்னை சைட் அடிக்கும் ஆண்களும் //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..

அடேய் பாலாசி...

இனிமே இந்த புள்ள பொய் பேசுச்சுன்னா.. மவனே பாசமலரு... கொலதாண்டி நீ//


உங்களை ஜாமின் எடுக்க வேண்டியது என் செலவு! சுபிகிட்டயே கேளுங்க ஜாமின் எந்த மார்கெட்ல கிடைக்கும்னு!

VELU.G said...

வோட்காவா அப்படின்னா என்ன

எதுக்கு என்ற ஊட்டுக்காரிகிட்ட கேட்டுட்டு சொல்றனே

சாமி இந்த புள்ளைங்கெல்லா

Unknown said...

நாங்களும் ஜீப்ல ஏறிட்டமில்ல. அடுத்த வாட்டி வோட்கா கிடைச்சா எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க தாயி.

அகல்விளக்கு said...

பீர்குடித்தால் தெரியும் தெரியாது வோட்கா
வுடன்நீர் சேர்ந்து விடின்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நான் இந்த ஆட்டைக்கு வரல...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..
அடேய் பாலாசி...
இனிமே இந்த புள்ள பொய் பேசுச்சுன்னா.. மவனே பாசமலரு... கொலதாண்டி நீ//

//வால்பையன் said...
உங்களை ஜாமின் எடுக்க வேண்டியது என் செலவு! சுபிகிட்டயே கேளுங்க ஜாமின் எந்த மார்கெட்ல கிடைக்கும்னு!//


பொத்தி பொத்தி வளத்த புள்ள பாரிஜாதம்.... அதுகிட்டப்போயி....அவ்வ்வ்வ்வ்வ்..........

க.பாலாசி said...

ஆகா... இங்கயே உள்ளுரிலேயே ஒரு குரூப்பு சுத்திகிட்டு இருக்கு போலருக்கே... தங்கச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சீ............

பிரேமா மகள் said...

அண்ணா.. என்னை காப்பாத்து.. உண்மையை சொன்னா, கதிர் அங்கிளும், வால் அங்கிளும் அடிக்க வர்றாங்க...

ஸ்ரீ.... said...

உண்மையத் தெளிவாச் சொல்லுங்க. குடிச்சீங்களா ? இல்லியா?

ஸ்ரீ....

r.v.saravanan said...

ஏங்க உங்களுக்குனு ஒரு பங்கு வாங்கி அதை அண்ணனுக்கு கொடுத்திருக்கீங்க

இதுக்கு இவ்வளவு பில்ட் அப் ஆ ....................



என்னை சைட் அடிக்கும் ஆண்களும் நான் சைட் அடிக்கும் ஆண்களும் ஆர்வமாய் பார்க்க

இது வேறேயா

பிரேமா மகள் said...

வால்பையன் said...

//நடுவர் அவர்களே!

பீர்குடித்தால் தெரியும் தெரியாது வோட்கா
வுடன்நீர் சேர்ந்து விடின்//

அப்படியா? சொல்லவே இல்லை?

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...

//ஆறாவது பிளஸ் ஒன் படிக்கும் போது//

//ஆறு வாட்டி பிளஸ் ஒன் படிச்சியா சுபி..//

சாரி.. அங்கிள்.. ஏதோ மயக்கத்தில் எழுதிட்டேன்... ஒரு வேளை வோட்கா வேலையா இருக்குமோ...

ஜாபர் ஈரோடு said...

\\ பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்..\\

எங்க ஊட்டுல இந்த பதிவை பிரிண்ட் எடுத்து கொடுக்கிரேன்

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

//அய்யய்ய... சரக்க பத்தியா... நான் வரல....//

அகல்விளக்கு said...


// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நான் இந்த ஆட்டைக்கு வரல.//

மக்கா... வாங்குற காசுக்கு மட்டும் நடிங்க போதும்../

பிரேமா மகள் said...

Blogger ரோகிணிசிவா said...

//இப்படி பில்ட் அப் பண்ணியே நீயும் காலத்த ஓட்டற நாங்களும் மெனக்கெட்டு அதைப் படிக்கறது,இப்படியே பொழுது போகுது //

இதற்கு தானே ஆசைப்பட்டாய் சுபி வண்யா??/////

பிரேமா மகள் said...

நன்றி நசரேயன்

நன்றி... பனித்துளி சங்கர்..

நன்றி ரெமோ

பிரேமா மகள் said...

~Romeo~~ said...

//ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது...//

அப்ப வோட்கா ஒத்துக்குமா?

பிரேமா மகள் said...

VELU.G said...

//வோட்காவா அப்படின்னா என்ன

எதுக்கு என்ற ஊட்டுக்காரிகிட்ட கேட்டுட்டு சொல்றனே//

jaffer erode said...

\\ பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்..\\

//எங்க ஊட்டுல இந்த பதிவை பிரிண்ட் எடுத்து கொடுக்கிரேன்//

அப்புறம் வீட்டில் பூரி கட்டை உங்ககிட்ட பேசிச்சின்னா, நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்...

r.v.saravanan said...

அவர் மறுபடியும் எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல, என்னை தேடி வந்தது வோட்கா பாட்டில்....

எங்க ஆபிசிலே டீ கொடுக்கவே யோசிக்கிறாங்க

இங்க என்னடா னா ட்ரிங்க்ஸ்

பிரேமா மகள் said...

தாமோதர் சந்துரு said...

//நாங்களும் ஜீப்ல ஏறிட்டமில்ல. அடுத்த வாட்டி வோட்கா கிடைச்சா எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க தாயி.//

கண்டிப்பா அங்கிள்...

பிரேமா மகள் said...

ஸ்ரீ.... said...

//உண்மையத் தெளிவாச் சொல்லுங்க. குடிச்சீங்களா ? இல்லியா?//

//அட அது தாங்க இந்த பதிவே.... சத்தியமா நான் குடிக்கலை..//

இளமுருகன் said...

அட வோட்காவோட மரியாதையே கெடுத்திட்டிங்களே...

settaikkaran said...

வோட்கா சரி, என்ன ஃப்ளேவர்? நம்மூருலே ஆப்பிள்,பைன் ஆப்பிள்,ஆரஞ்சுன்னு மூணு ஃப்ளேவரிலே கிடைக்குது. லெமனேடு மிக்ஸ் பண்ணியடிச்சா அந்த சுகமே தனி! மிஸ் பண்ணிட்டீங்கோ!

ஈரோடு கதிர் said...

//பிரேமா மகள் said...
தாமோதர் சந்துரு said...
கண்டிப்பா அங்கிள்...//

அல்ல்ல்லோவ்.... அவர தாத்தான்னு சொல்லு..

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
மக்கா... வாங்குற காசுக்கு மட்டும் நடிங்க போதும்..///

நீ எப்ப காசுகொடுத்தம்மா....

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அல்ல்ல்லோவ்.... அவர தாத்தான்னு சொல்லு..//

அப்டின்னா கதிர் தாத்தாவ என்னன்னு சொல்றது......

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
அண்ணா.. என்னை காப்பாத்து.. உண்மையை சொன்னா, கதிர் அங்கிளும், வால் அங்கிளும் அடிக்க வர்றாங்க...//

விடு..விடு.. அண்ணன்னோட பலம் என்னான்னு யாருக்கும் தெரியலப்போல.... நாங்கள்லாம் ஃபேன் காத்துக்குக்கூட அசையாத ஆளுங்க....

க.பாலாசி said...

யாரோ கேட்டாங்களே... படிக்காம எப்புடி கமெண்ட் போடுறதுன்னு... இப்ப நான் போடல.....

கவிதன் said...

கடைசி வரைக்கும் அடிச்சீங்களான்னு படிக்கிறவங்கள படுத்தியெடுத்து ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு நீங்க தண்ணியடிச்ச கதை....

ஜாபர் ஈரோடு said...

\\ அப்புறம் வீட்டில் பூரி கட்டை உங்ககிட்ட பேசிச்சின்னா, \\

அதுக்குத்தான் வோட்கா...

sathishsangkavi.blogspot.com said...

//ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்.. அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..//

ஆக சாப்பிடுவது மட்டும் தான் வேலைன்னு சொல்லுங்க....

விஜய் said...

மிக சுவாரஸ்யமான எழுத்து நடை சகோதரி

வாழ்த்துக்கள்

விஜய்

sathishsangkavi.blogspot.com said...

//என்னை சைட் அடிக்கும் ஆண்களும் //

நம்பிட்டங்க நாங்க எல்லாம் நம்பிட்டோம்.....இது உண்மைன்னு....

எப்படிங்க உங்களாள மட்டும் நடக்காத ஒரு விசயத்தை இவ்வளவு அழகா சொல்ல முடியுது...

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அப்டின்னா கதிர் தாத்தாவ என்னன்னு சொல்றது......//

எதுனாலும்.. பேசித் தீர்த்துகலாம்!!!

நோ...நோ டேமேஜ்... ப்ளீஸ்

மீ பாவம்

Nathanjagk said...

ஒண்டியா ​உட்கார்ந்து சைடு-டிஷ்​ஷை காலி பண்ணியதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா :)))

நல்லாருக்கு!

Radhakrishnan said...

நல்ல தலைப்பு, அதைப்போலவே நல்ல எழுத்து. வாசிப்பவர்களை ஏமாற்றாத நல்ல விவரிப்பு. நல்லா இருக்குங்க.

ராஜ நடராஜன் said...

சேட்டைக்காரனுக்கு மட்டும்தான் வோட்கா.மத்தவங்கெல்லாம் பீர் பாட்டில்.

S Maharajan said...

அப்ப கடைசிவரைக்கும்
நீங்க தண்ணி அடிக்கவே இல்லையா !
அடடா !

prince said...

//வீட்டிலேயே தண்ணி அடிப்பதில் தப்பில்லை என்பது எங்கள் குடும்பத்தின் கருத்து //
//போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..// &*$#$%!$#^%*&*((@!^$%^%&*^*

ஹேமா said...

இங்க எல்லாருமே தண்ணியடிச்சிட்டு உளறுறாங்களோ !நான் 50 ஆவதா வந்து என்னத்தை சொல்ல !

பா.ராஜாராம் said...

;-)

Unknown said...

//பிரேமா மகள் said...
தாமோதர் சந்துரு said...
கண்டிப்பா அங்கிள்...//

அல்ல்ல்லோவ்.... அவர தாத்தான்னு சொல்லு..

கதிர் அண்ணே நீங்களே இப்படிச் சொல்லலாமா. நாங்களும் யூத்துத்தானுங்கோ.

பிரேமா மகள் said...

இளமுருகன் said...

//அட வோட்காவோட மரியாதையே கெடுத்திட்டிங்களே..//

சேட்டைக்காரன் said...
//லெமனேடு மிக்ஸ் பண்ணியடிச்சா அந்த சுகமே தனி! மிஸ் பண்ணிட்டீங்கோ//

ராஜ நடராஜன் said...

//சேட்டைக்காரனுக்கு மட்டும்தான் வோட்கா.மத்தவங்கெல்லாம் பீர் பாட்டில்//

S Maharajan said...

//அப்ப கடைசிவரைக்கும்
நீங்க தண்ணி அடிக்கவே இல்லையா//

ஹேமா said...

//இங்க எல்லாருமே தண்ணியடிச்சிட்டு உளறுறாங்களோ//

ஹலோ.. எக்ஸ்கியூஸ் மீ.. ஒரு குட்டிப் பாப்பாக்கிட்ட பேசற பேச்சா இது..... ராஸ்கல்ஸ்..

KARTHIK said...

//எங்கள் குடுமபத்தின் கருத்து//

மாயாண்டி குடும்பத்தார் !!!!!!!

ஒன்னியும் சொல்லுரதுக்கில்லை

மச்சான் உன்ன நெனச்சா எனக்கு பாவமா இருக்குயா :-((

KARTHIK said...

// ஸ்ரீ.... said...

உண்மையத் தெளிவாச் சொல்லுங்க. குடிச்சீங்களா ? இல்லியா? //

என்னத்த குடிசியா இல்லையா ?


// கதிர் அண்ணே நீங்களே இப்படிச் சொல்லலாமா. நாங்களும் யூத்துத்தானுங்கோ.//

ஹெலோ நீங்களாம் யுத்தனா அப்ப நாங்ளாம் யாரு !!!!!!!!

ஆண்ட்டி நீங்க இதெல்லாம் கேக்குரதில்லையா :-(((((((((

கனவுதுரத்தி said...

நல்லா இருக்கு.....next time, try it for real.. Vodka results good when it is tasted with lime linger as mixture..

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...

//அல்ல்ல்லோவ்.... அவர தாத்தான்னு சொல்லு..//

தாமோதர் சந்துரு said...
// கதிர் அண்ணே நீங்களே இப்படிச் சொல்லலாமா. நாங்களும் யூத்துத்தானுங்கோ.//

கார்த்திக் said...

//ஆண்ட்டி நீங்க இதெல்லாம் கேக்குரதில்லையா //

பாலாண்ணே.. இந்த தாத்தாக்கள் தொந்தரவு தாங்க முடியலையே? என்ன பண்ணலாம்?

பிரேமா மகள் said...

நன்றி விஜய்

நன்றி ஜெகநாதன்,,

நன்றி ராதா கிருஷ்ணன்

நன்றி பா.ராஜாராம்

நன்றி கனவுதுரத்தி..

Ashok D said...

நிறைவான பகிர்வு... :)

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
பாலாண்ணே.. இந்த தாத்தாக்கள் தொந்தரவு தாங்க முடியலையே? என்ன பண்ணலாம்? //

ஒரு ரெண்டு ரவுண்ட்....ரம் அடிங்க... எல்லாம் சரியாயிடும்....

DHANS said...

பொறி, பெப்பர், சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, இதையெல்லாம் பதமாக வருத்து எடுத்து முட்டை பொரியலுடன் கலந்து சாப்பிட,.. அட சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்... //

ithu enga oorla garam nu solvanga.... :)

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

//ஒரு ரெண்டு ரவுண்ட்....ரம் அடிங்க... எல்லாம் சரியாயிடும்...//

யூ டூ பாலாண்ணா??????????????

ரசிகன்! said...

hmmm

first unga family pazhakka vazhakkam sonneengala... adhukku oru kaithattal!!!

enakku romba pidichirundhadhu!!!

aduthu..

romba interesting ah kondu poneenga.. andha bottle kettu vaangandhu... very interesting...

adhuthu..

oru thrilling kondu vandheenga..
romba rasichan :)

ungala sight adikkaravanga and vice versa.. cool... :)

final touch...

puunnagaiyai vittu selgiren !!!


nanri,
Rasigan

தாராபுரத்தான் said...

ஒருகலக்கு கலக்கி போட்டுட்டே தாயீ.

See The Sea said...

Nice.............

G.Prabhu said...

இத்தனைக்கும் இருட்டுலதான் அந்த வோட்காவை வாங்கித் தொலைச்சேன். ஆனா அதுக்குள்ள எத்தனை பேர் கண்ணு பட்டுச்சோ தெரியலை. இன்னிக்கு வரைக்கும் மூடியைத் திறந்து மோந்து கூட பாக்க முடியலை. வீட்டு கம்ப்யூட்டர் யூ.பி.எஸ் பக்கத்துல அப்டியே இருக்கு. கம்ப்யூட்டர் பக்கத்துல போறேப்பெல்லாம் என்னைக் கேவலமாப் பாக்குது. அந்த பாட்டிலைதான் குடிக்க முடியலை. அதுக்கு அப்புறம் சில பல பாட்டில்களை கவுத்தியாசுன்றது தனிக்கதை. நோட் திஸ் பாயிண்ட். அப்போ கண்ணு பட்டிருக்குன்னுதான அர்த்தம். எந்தப் படுபாவி கண்ணு வெச்சானோ

பிரேமா மகள் said...

தாராபுரத்தான் said...

//ஒருகலக்கு கலக்கி போட்டுட்டே தாயீ.//



வோட்காவை வெச்சு வேற என்ன செய்ய முடியும்? சொல்லுங்க தாத்தா...

பிரேமா மகள் said...

G.Prabhu said...

//இத்தனைக்கும் இருட்டுலதான் அந்த வோட்காவை வாங்கித் தொலைச்சேன். ஆனா அதுக்குள்ள எத்தனை பேர் கண்ணு பட்டுச்சோ தெரியலை. இன்னிக்கு வரைக்கும் மூடியைத் திறந்து மோந்து கூட பாக்க முடியலை. வீட்டு கம்ப்யூட்டர் யூ.பி.எஸ் பக்கத்துல அப்டியே இருக்கு. கம்ப்யூட்டர் பக்கத்துல போறேப்பெல்லாம் என்னைக் கேவலமாப் பாக்குது. அந்த பாட்டிலைதான் குடிக்க முடியலை. அதுக்கு அப்புறம் சில பல பாட்டில்களை கவுத்தியாசுன்றது தனிக்கதை. நோட் திஸ் பாயிண்ட். அப்போ கண்ணு பட்டிருக்குன்னுதான அர்த்தம். எந்தப் படுபாவி கண்ணு வெச்சானோ //

அண்ணே.... அந்த கண்ணு வெச்சவன் கண்ணை குத்திடலாம்.. சரியா.... உங்களை வோட்கா குடிக்க விடாம பண்ணியவன் எப்படி இருக்கலாம்?

கண்ணகி said...

நீங்க பதிவு போட்ட அன்னிக்கே நான் படிச்சுட்டேன். பின்னூட்டம்தான் போடவில்லை...ஸாரி...இதோ இப்பப் போட்டுட்டேன்...கலக்கலோ...கலக்கல்..