Tuesday, April 27, 2010

நீ கடல்.. நான் அலை..

.'நட்பா காதலா'
அலை பாய்ந்த‌ தருணம் அது!
கரையில் பதிந்த‌
என் காலடி தடத்தை,
'மணலில் ஒரு கவிதை"
என பெயரிட்டாய்.
ஒரு சிப்பிக்குள்
முத்து கண்ட
அத்தருணத்தில் தான் 
கடல்   என் கடவுளானது!
  மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத்துளியில்
ஆழிப் பேரழை
உருவானது
என் இதயத்தில்!..
 கடற்கரையோர
நடை பயணத்தில்
தெரியாமல்
விழப் போவேன் நான்!
அரவணைத்துக் கொள்ளும்
உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்.!

ஒவ்வோரு
விடைபெறுகையிலும்
என் முகத்தில்
ஒட்டிக்கிடக்கும்
உப்பு காற்றின் வாசம்!
என் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
உன் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..
வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்.
சென்று வரும்
பேரழையில்
கரைந்து போகின்றன‌
என் ஏக்கங்கள்!

29 comments:

Shankaran er said...

//சென்று வரும்
பேரழையில்
கரைந்து போகின்றன‌
என் ஏக்கங்கள்.!//

அற்புதம் :)

r.v.saravanan said...

உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்.!


வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்.

அருமை அருமை

நசரேயன் said...

//அத்தருணத்தில் தான்
கடல் என் கடவுளானது!//

இது கடலுக்கு தெரியுமா ?

sathishsangkavi.blogspot.com said...

//என் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
உன் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..//

சிலிர்த்தது கடல் மட்டுமல்ல

கவிதையை படித்த நாங்களும் தான்.....

ஈரோடு கதிர் said...

ஹை...

கடைசி போட்டோ
எங்க ஆன்டியோடதே!!!

ஈரோடு கதிர் said...

கவிதை கலக்கல் சுபி

settaikkaran said...

ஒரு மாலைப்பொழுதில் மணற்பரப்பில் அமர்ந்து அலைகளை ரசித்தது போலிருக்கிறது உங்கள் கவிதை!

தமிழ் உதயம் said...

பிடிபடாத ஏக்கத்தை சுமந்தப் படி கவிதை. நன்றாக இருந்தது கவிதை.

ரோகிணிசிவா said...

போடா,
என்னத்த சொல்ல காதல் கடலாய் பொங்குகிறது,சூப்பர் சுபி !

க.பாலாசி said...

முதல் கவிதைய படிக்கும்போது ரொம்ப பிடிச்சது... அடுத்தடுத்து படிக்கும்போது ஒன்னவிட இன்னொன்னு பெட்டரா இருந்துச்சு... எத எடுத்து பின்னூட்டம் போடுறதுன்னு ஒரு குழப்பம்..

கடைசியொன்னு சுமார்தான்...

நல்லா எழுதியிருக்கம்மா....

வால்பையன் said...

கடைசி போட்டோவுல இருக்குற ஆண்ட்டி யாரு?

prince said...

//'நட்பா காதலா'
அலை பாய்ந்த‌ தருணம் அது!//
ஆரம்பமே அமர்க்களம்!!!



[அலைகளுக்குள்ளும் அடிதடி யார் உன்னை முதலில் தொடுவது என்று]எப்புடி! நாங்களும் எழுதுவோமில்ல

S Maharajan said...

ஆர்பரித்த அலை போல
மனதை அள்ளி சென்றது
உங்கள் கவிதை.
அற்புதம் :)

ரசிகன்! said...

அட்டகாசம்!!!

beautiful பிரேமா...!!!

முதல் பத்தியை படித்ததும்... அதை பற்றிய எண்ணங்களை சொல்லலாம் என்றவாறு அடுத்த பத்தியை நோக்கினேன்....
இரண்டில் எது சிறந்தது... எதை பற்றி கூறலாம் என்றபோது.. அதுத்தடுத்த பத்திகள் சூழ்ந்து கொண்டன!!!

ஆம்... நிறைவான ஒரு கவிதை... புகைப்படங்களோடு ஊர்ந்து செல்கின்றன....

இன்று மிகவும் ரசித்து படித்ததில் அழகான ஒரு பதிவு!!!

நன்றி
ரசிகன்

ஹேமா said...

பொருத்தமான படங்களோடு ஒன்றைவிட ஒன்று போட்டி போட்டிருக்கிறது ஒவ்வொரு பந்தியும்.காதல் ரசம்.
அற்புதம் சுபி.

Romeoboy said...

:) Nice

Mythees said...

ஓகே ................

பனித்துளி சங்கர் said...

//////மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத்துளியில்
ஆழிப் பேரழை
உருவானது
என் இதயத்தில்!..////////


வார்த்தைகள் அனைத்தும் அலையாய், அழகாய் இதயம் நனைக்கிறது . மிகவும் அழகான கவிதை அருமை .
பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன்

பிரேமா மகள் said...

நன்றி பீமா

நன்றி சரவணன்

நன்றி சங்கவி

நன்றி கதிர் அங்கிள்

நன்றி சேட்டைக்காரன்

நன்றி தமிழ் உதயம்

நன்றி ரோகினி

நன்றி க.பாலாசி

நன்றி மஹாராஜன்

நன்றி ரசிகன்

நன்றி ஹேமா

நன்றி ரெமோ

நன்றி மைத்தீஸ்

நன்றி பனித்துளி சங்கர்

பிரேமா மகள் said...

VELU.G said...

//நல்லாயிருக்கே
இதெல்லாம் எப்ப நடந்துச்சு
சொல்லவே இல்லே..///

இன்னும் பதினைஞ்சு வருசம் கழிச்சு நடக்கப் போற விசயம் எனக்கு எப்படி அங்கிள் தெரியும்... நான் இப்பதான் லாலி பாப் வாங்க எங்கம்மா பிரேமா கூட கடைக்குப் போறேன்...

பிரேமா மகள் said...

நசரேயன் said...

//அத்தருணத்தில் தான்
கடல் என் கடவுளானது!

இது கடலுக்கு தெரியுமா ?//


என் காதலுக்கு தெரியும்... அது போதும்..

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...

//ஹை...

கடைசி போட்டோ
எங்க ஆன்டியோடதே!!!///

வால்பையன் said...

//கடைசி போட்டோவுல இருக்குற ஆண்ட்டி யாரு?//


மீம்... அது தெரியலை.. கூகுளில் அழகான பொண்னுன்னு போட்டோ தேடினேன்.. அந்த போட்டோ கிடைச்சது.. மற்றபடி அந்த போட்டோவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

// கடைசியொன்னு சுமார்தான்...//

எவ்வளவுக்கு எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொள்ளுங்களேன்..

பிரேமா மகள் said...

ப்ரின்ஸ் said...

//'நட்பா காதலா'
அலை பாய்ந்த‌ தருணம் அது!//
ஆரம்பமே அமர்க்களம்!!!

அலைகளுக்குள்ளும் அடிதடி யார் உன்னை முதலில் தொடுவது என்று எப்புடி! நாங்களும் எழுதுவோமில்ல//

ஏன் பிரின்ஸ்... பெங்களூரில் பீச் இருக்கா என்ன?

VELU.G said...

//
Blogger பிரேமா மகள் said...
VELU.G said...
//நல்லாயிருக்கே
இதெல்லாம் எப்ப நடந்துச்சு
சொல்லவே இல்லே..///

இன்னும் பதினைஞ்சு வருசம் கழிச்சு நடக்கப் போற விசயம் எனக்கு எப்படி அங்கிள் தெரியும்...
//

60 வயசுல கூட இப்படியெல்லாம் நடக்குமா. ஆச்சரியமாதான் இருக்கு

"உழவன்" "Uzhavan" said...
This comment has been removed by the author.
ஆரூரன் விசுவநாதன் said...

ம்ஹும்........

Thenammai Lakshmanan said...

யம்மா ப்ரேமா மகளே நீ காதலிச்ச கதையை விட தண்ணியடிச்ச கதை படிச்சு ஆஆஆஆடிப் போய் இருக்கிறேன்...

அதென்ன கரங்களுக்குள் தெரிந்து கொண்டே விழித்துக் கொள்ளும் காதல் மயக்கம் ரொம்ப அருமை டா அது ...நடத்து,,, கலக்கு

வயசுப் பிள்ளை இல்லையா அருமையா இருக்கு எல்லாம்

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html