தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பெரிய பட்டாளக் குடும்பத்தில் தங்கையாய் பிறந்திருப்பேன்.. எனக்கு முன் வரிசையாய் அண்ணன்கள் இருப்பார்கள், அராஜகம் நிறைந்தவர்கள், கட்டுப்பாடான குடும்பம் என நினைத்தால், மக்கா அதுக்கு நான் பொறுப்பில்லை..
சுப்பிரமணி பிரேமா தம்பதிக்கு பிறந்த ஒற்றை மகள் நான்.. ('குட்டிச்சாத்தான் வந்து எனக்கு பொண்ணா பொறந்திருக்கு'.. இது பிரேமாவின் டயலாக்).
தமிழ் சினிமாவில் சண்டைப் போடும், கொஞ்சிக் குழாவும் அண்ணன் தங்கைகளை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அண்ணன் என்ற உறவு மீது தீராத ஏக்கம் இருந்தது... இருக்கிறது... மிக அழகான அந்த பந்தத்தை நான் நேசிக்கிறேன்.... சந்திக்கும் ஆண்களிடம் நன்கு பழகிய பிறகு, அவர்கள் மீதுள்ள பாசத்தால் அண்ணா என்று உரிமை கொண்டாடுவேன்... என்னுடன் பிறக்காவிட்டாலும், சொந்த தங்கையைப் போல அன்பு செலுத்தும் என் பக்கத்து வீட்டு முருகன்னா, பள்ளியில் கெளரி சங்கர் அண்ணா, கல்லூரியில் ராஜேஷ் அண்ணா, (உடல்நல குறைவினால் என் கல்லூரி இறுதி ஆண்டில் இறந்துவிட்டார்), வேலை பார்க்கும் இந்த அலுவலகத்தில் பிரபு அண்ணா, பிளாக்கில் என் அன்பு அண்ணாச்சி பாலாசி இவர்களைத் தாண்டி, சொல்லிக் கொள்ளும் உறவுகள் எனக்கில்லை..
சரி இதுக்கும் 'அண்ணன் என்பவன் ஒழிக' என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது..... அதை என் கொசுவர்த்தி சுருள் பிளாஸ்பேக்கில் சொல்கிறேன்..
பிளாஸ்பேக் 1.
கல்லூரியில் காலெடுத்துவைக்கும் வரை, அந்நிய ஆண்மகன்களின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காத, குட்டிப்பாப்பா நான்... படிப்பு மார்க் என்று 18 வயது வரை புத்தக புழுவாக இருந்த நான், கல்லூரியில் முதல் வார விடுமுறையில் வீட்டுக்கு வருதற்கும், எங்கள் ஊரில் குத்து விளக்கு பூஜை நடப்பதற்கும் சரியாக இருந்தது..
நட்பு வட்டாரத்துடன், மாலை ஏழு மணி பூஜைக்கு, பகல் 3 மணிக்கே ஆஜர். (அங்கேதான் முதன் முதலில் நான் அண்ணன் என்ற வார்த்தையை வெறுக்கத் துவங்கினேன்..) கோயிலுக்குள் போய் செட்டில் ஆன கொஞ்ச நேரத்துக்குள்ளேயே, என்னை சீண்ட ஆரம்பித்தான் அவன்.... எங்க கூட்டத்தில் எல்லா பெண்களிடமும் அர்ச்சனை கூடை தந்தான், என் முறை வந்த போது சிரித்துகொண்டே போய்விட்டான்.. அடுத்து 'எண்ணையும் திரியும் தர முடியாது' என மறுத்தான்.. 'காலேஜ் சேர்ந்திட்டா, நீ என்ன பெரிய இவளா' என்று வெளிப்படையாகவே வம்பிழுத்தான்.. அவன் செய்கை பார்த்து நான் விழிக்கவும் 'போடி போடி யாரை வேண்டுமானாலும் கூட்டி வா.. என்னைக் கேட்கட்டும், பதில் சொல்லிக்கிறேன்' என்று வீறாப்பு காட்டினான்.... முதன் முதலால் ஒரு அந்நிய ஆண் என்னை டீ போட்டு கூப்பிடுகிறான்.. நியாயமாய் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெட்கம் வந்தது.. பாரதி ராஜா பட ஹீரோயின் மாதிரி, என்னை முதன் முதல் சீண்டயவனை பிடித்திருந்தது.. என் பார்வைகள் அவனையே சுற்றி சுற்றி வந்தன..குத்து விளக்கு பூஜை முடிந்தது.. நான் வாங்கிய பிரசாதத்தை உரிமையோடு எடுத்து சாப்பிடும் போது சரியாக வந்து சேர்ந்தார் என் தூரத்து உறவு பெரியம்மா.. ''பார்க்கணும், அவக்கிட்ட பேசணும்ன்னு சொன்னியே. இப்போ கேளு" என்று அவர் நிக்க வைத்து பேச, அவனோ என் கண்ணை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். எனக்ககோ எதுவுமே புரியவில்லை. '..உனக்கு பாலாவைத் தெரியலையா.. ஆமா, கல்யாணத்துக்கு கூட நீ வரலையே? உன்கிட்ட பேசாம இருக்கான் பாலா" என்றார் பெரியம்மா.. 'என்னது இத்தனை நேரம் என்னை சீண்டியவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று நான் முளிக்க, அதுசரி, வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தா இப்படித்தான் அண்ணன் தம்பியைக் கூட தெரியாம போய்டும்.. இதுதான் உன் பாலாண்னா... என் பையன்....' என்று அவனை அறிமுகம் செய்து வைத்ததோடு என் கையை பிடித்து அவன் கையில் தந்தார் பெரியம்மா.. மெல்ல உடைந்தது இதயம்..
பிளாஷ் பேக். 2..
பெரிய பெண்ணாக நான் வளர்ந்ததாக நினைத்துக் கொண்டிருந்த பிறகு,, அதாவது கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் நான் சென்ற கல்யாணம்.. என் கிளாஸ்மெட் சசியுடையது... மாப்பிள்ளை வீடும் எங்களுக்கு உறவுக்காரர்கள் என்பதால் களை கட்டிய கச்சேரி.. அப்போது நான் பார்த்தேன்.. அந்த ஹீரோ ஹோண்டாவின் நாயகனை.. கருப்பாய் களையாய் இருந்தான்.. பல முறை திரும்பி பார்க்க வைத்தான்.. ஒரு முறை சிரித்தேன்.. அவனும் சிரித்தான்.. எங்கே பார்த்த முகமாகவே இருந்தது.. கூட்டத்தில் அவனை மட்டுமே என் கண்கள் தேடின..
என் குடும்பம் மிக கலகலப்பான குடும்பம்.. டி.வியில் டி.ராஜேந்திர் பாட்டு ஓடினால், ஹே 'உன் மாமனாரு' என்றும் நயன்தாரா வந்தால், 'ஹே உன் அக்கா,' என்றும் சிம்பு வரும் போது வெளிப்படையாய் 'உன் சைட் வந்திருக்கான் பாரு' என்றும் நண்டு சிண்டில் இருந்து தாத்தா வரை கிண்டல் பண்ணுவார்கள்.. (அந்தளவுக்கு சிம்பு பைத்தியம்..ஏ.ஆர்.ரஷ்மான்-க்கு சொந்தமான ஸ்டூடியோவில் சிம்புவுடன் ஒரு மீட்டிங்.. அவன் சொல்லுங்க என்று என் பெயரை உச்சரித்ததுக்கே மூன்று நாள் சாப்பிடாமல் இருந்தவள் நான்.. அந்தளவுக்கு அவன் மீது பைத்தியம்). அந்த தைரியத்தில், என் அத்தையிடம் போய் 'யார் அத்தே அந்த பிகர்' என்று அவனைக் கைக் காட்டி கேட்டேன்.. 'ஹே உனக்கு மாமா வீட்டில் வளர்ந்தா சொந்த பந்தம் தெரியாம போய்டுமா? அவன் உங்கண்ணன் கார்த்தி.. பங்காளி வீட்டுப் பையன். முறைப்படி அவன் கல்யாணத்துக்கு நீ சீர் செஞ்சிருக்கணும்..சின்னப் பொண்னுன்னு விட்டிட்டோம்.. இப்ப அவனையே யாருன்னு கேக்குறியா" என்று அவர் திட்ட, நான் 'பிகர்'ன்னு சொன்னது காதில் விழுந்திருக்குமா இல்லையா என்ற பயம் எனக்கு.. இதற்கு இடையில் அவன் எங்கள் அருகில் வந்தான்.. பெரியதாய் சிரித்து என் கன்னத்தை கிள்ளி, 'நல்லாயிருக்கியாட்டா குட்டி' என்றான்.. மறுபடியும் உடைந்தது இதயம்..
பிளாஷ்பேக் 3.
கல்லூரி மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. விடுதியில் ஞாயிற்றுக் கிழமை, பத்துமணிக்கு வரைக்கும் தூங்கிய தூக்கத்தை கெடுத்தது அன்று வந்த போன் கால்.. பண்ணியது என் கிளாஸ்மெட் சசிகலா.. (இது வேறோரு சசி).. விசயம் இதுதான்.. காதலித்த பையனை ஓடிப் போய் கல்யாணம் பண்ணி ஐந்து நாள் ஆகிவிட்டது..எனக்கு தகவல் சொல்லத்தான் போன்.. நானே அவள் கேலி செய்கிறாள் என நம்ப மறுக்க, தன் கணவரின் கையில் தந்தாள் போனை.. 'நான் சசியோட ஹஸ்பெண்ட் பேசறேன்.. என் பேரு பிரபு. உன்னைப் பத்தி நிறையா சொல்லிருக்காடா. வீட்டில் பிரச்சனை அதான்.. உன்கிட்ட கூட சொல்ல முடியல" என்றவர் தன் செல்போன் எண்னைத் தந்தார். பிறகு அடிக்கடி அவங்களுக்கு போன் பண்ணி சசியிடமும் பிரபுவிடமும் பேசுவேன்.. எங்க ஊரு வழக்கப்படி, தோழியின் கணவரை அண்ணா என்று அழைத்து பேசுவேன்.. அவருக்கும் தங்கை இல்லாததால் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்.. நான்கைந்து மாதத்துக்குள் அந்த சசி அவள் பெற்றோருடன் சேர்ந்துவிட, அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது என்னை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.. நானும் அப்படியே சென்றேன்.. பஸ்ஸில் இருந்து இறங்கிய என்னை அழைத்துச் சென்றது சசிதான்... வீட்டுத் திண்ணையில் காலார நான் உட்கார, உள்ளே சென்றாள் சசி.. அப்போதுதான் வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் செல் போன் பேசிக்கொண்டு நடந்த அவனைக் கவனித்தேன்.. கிராமத்து ஆண்களுக்கு உரிய மிருக்கு.. கம்பீரமாய் இருந்தான்.. அவனோ செல் போனில் பேசுவதுமாய் என்னை பார்ப்பதுமாய் இருந்தான்.. நான் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சசி வெளியே வர, 'யார் டீ இது, உங்க ஊரில் இவ்வளவு அழகான பையன்" என்று நான் சொல்வதை காதில் வாங்காமல், ''ஏங்க உங்க தங்கச்சி வந்திருக்கா.. அவளை கவனிக்காம செல்போனில் யார் கூட பேசறீங்க" என்றவள் என்னிடம் திரும்பி 'உங்க பிரபு அண்ணன் எப்பவுமே இப்படித்தான்.. போனில் பேசிக்கிட்டே இருப்பார்" என்பதற்கும் அவன் என்னிடம் வந்து ஹாய் சொல்வதற்கும் சரியாக இருந்தது.. மறுபடியும் உடைந்தது இதயம்.
பிளாஷ்பேக். 4
''எங்க ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா எனக்கு பிடிக்கும்.. காரணம் மஞ்சள் நீர் ஊற்றும் வைபவம்.. நமக்கு பிடித்தவர்கள் மீது மஞ்சள் நீ ஊற்றுவது மிக பிடித்தமானது... ஒவ்வோரு ஆண்டும் புதிதாய் நாம் யார் மீது தண்ணீர் ஊற்றுகிறோம்.. நம் மீது யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பதில்தான் பரவசம்.. ஊரில் இருந்தா எல்லா மாமன் மீதும் தண்ணீர் ஊற்றி விளையாடிய பிறகு, எதார்த்தமாய் பார்த்தேன் அவனை.. மஞ்சள் தண்ணீர் ஊற்ற ஆசை வர, அவனை நோக்கி நடந்தேன்.. என் நோக்கம் புரிந்து அவன் விலக, நான் தண்ணீருடன் ஓட, ஆனந்தமான நிமிடங்கள்.. அவை.. தேடிப் பிடித்து அவன் மீது மஞ்சள் நீர் ஊற்றிவிட்டு வெற்றிக் களிப்பில் மிதந்தேன்..
அன்று இரவு ஊர் கிணற்றில் விளையாடும் போது சுமதி என்னை நோக்கி வந்தாள்.. (அப்போது அவளுக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகியிருந்தது..உறவு முறையில் என் அத்தை மகள்)..' ஏன்டி உங்க விளையாட்டுக்கு அளவில்லாம போச்சா.. யார் மீது தண்ணி ஊத்தறதுன்னு இல்ல, உங்க அண்ணன் மீதா தண்ணி ஊத்துவ. அறிவிருக்கா உனக்கு.. அவரே கல்யாணத்துக்கு பிறகு இப்பத்தான் நம்ம ஊருக்கு வர்றாரு'.. என்றவாறு தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள்... நான் ஊற்றிய மஞ்சள் தண்ணீரில் திளைத்துக் கிடந்தவன், 'கழுதை, உனக்கு என்னை அடையாளம் தெரியல," என்றபடி தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைக்க, வலித்தது இதயம்.
பிளாஷ்பேக் 5.
இப்ப வரைக்கும் எங்க ஊர் திருவிழா, பண்டிக்கைக்கு போகும் போது,, அவனைப் பார்ப்பேன்.. அவனும் என்னைப் பார்ப்பான்.. பெயர் தெரியாது.. காரணம் எல்லோருக்கும் அவனை 'சித்ரா வீட்டுக்காரரு" என்று பெயரிட்டு அழைப்பார்கள்..
எங்கக்கா கீதா தான்.. ஒரு முறை சொன்னாள்.. சித்ராவை கட்டின முறையில், அந்தாளு நமக்கு அண்ணன் முறை'என்றாள்.. 'இப்ப அதுக்கு என்ன? அண்ணனாம், குன்னன்'கோபத்தில் கத்தினேன் நான்...
''உங்க ஊரில் எல்லா பொண்ணுகளும் என்கிட்ட பேசறாங்க.. ஆனா பிரேமா-க்கா பொண்ணு மட்டும் பேசறதில்லை.. ஏன் உங்க குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஆகாதா" என்று சித்ராவிடம் ஒரு நாள் கேட்டிருக்கிறான் அவன்,,, அதன் பிறகு அவனிடம் நான் பேச முயற்சிக்கவில்லை.. இனிமே என்ன ஆப்ரேஷன் பண்ணினாலும் தாங்காது மக்கா.. என் இதயம்..
இப்ப சொல்லுங்க... அண்ணன் என்பவன் ஒழிந்து போகட்டும்தானே,....
33 comments:
உங்க ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதே போன்று எல்லா அண்ணன்களும் இருக்கமாட்டார்கள். கட்டுரைகளில் சொன்ன பிளாஸ்பேக் விதம் அருமை...!
நீங்க சொன்ன அண்ணன்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள்...
உங்ககிட்ட இருந்து தப்பித்சிட்டாங்க....
படிக்க சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க
உங்க ஆதங்கமும் புரிகிறது
நல்லவேளை
சிலர்
தப்பித்து கொண்டார்கள்!
ஹா ஹா! பாவம் நீங்க. எதுக்கு இந்த அண்ணன்க எல்லாம் ஒழியனும், இந்த அண்ணன்களுக்கு மாப்பிளைக இருக்காங்களானு கேளுங்க. முக்கியமா பாலாசி அண்ணா கிட்ட அவருக்கு மாப்பிள்ளை இருக்காருனு கேளுங்க. ;) ரசிக்கும்படியாய் மிகவும் அருமையாக இருந்தது.
அருமையான பிளாஸ்பேக்
உண்மைய சொன்ன உங்க நேர்மையை பாராட்டுகிறேன்
அப்பாட அவங்க எல்லாரும் தப்பிச்சாங்க
நடக்கட்டும்; நடக்கட்டும்!! :-)
ரொம்ப ரசிச்சுப்படிச்சேன். :)
நல்லாத்தான் பீல் பண்றீங்க.... :-)
ஹாய்..
இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ கோவம் கூடாது.... :)
முதன் முதலால் ஒரு அந்நிய ஆண் என்னை டீ போட்டு கூப்பிடுகிறான்.. நியாயமாய் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெட்கம் வந்தது.. பாரதி ராஜா பட ஹீரோயின் மாதிரி//
இது ரொம்ப ரசிக்க வச்சுது..... :)
எல்லாமே நல்லா இருக்கு... ஒவ்வொரு flashbook வச்சு ஒரு படமே எடுக்கலாம் போங்க... :)
ரசிக்க வச்ச பதிவு! :)
எல்லா அண்ணனின் சார்பாகவும் இந்த அண்ணனின் வாழ்த்துகள்.
குட்டி பிசாசா?நீங்க...35 வயசுக்கு மேல ஆனவங்கல நாங்க பிசாசுனுதான் சொல்வோம்...:) கட்டுரைகளில் சொன்ன பிளாஸ்பேக் விதம் அருமை...!
மனசுக்கு பிடித்த அண்ணன்மார்கள்..
:))
//உடைந்தது இதயம்..//
ஆனாலும் உனக்கு.......
//ஏ.ஆர்.ரஷ்மான்//
இப்டி ஒருத்தர் இருக்காரா?
ம்ம்.... ஆஃப்டர் அப்ரூவல் ???
இந்த கொடுமையும் கொஞ்சம் சுவாரஸ்யமாதான் இருக்கு...நல்ல எழுதுறீங்க....வாழ்த்துக்கள்...
பிரவின்குமார் said...
. //கட்டுரைகளில் சொன்ன பிளாஸ்பேக் விதம் அருமை...!//
r.v.saravanan said...
//படிக்க சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க//
S Maharajan said...
//அருமையான பிளாஸ்பேக்
உண்மைய சொன்ன உங்க நேர்மையை பாராட்டுகிறேன்//
சேட்டைக்காரன் said...
// நடக்கட்டும்; நடக்கட்டும்!! ://
சின்ன அம்மிணி said...
//ரொம்ப ரசிச்சுப்படிச்சேன். :)//
*இயற்கை ராஜி* said...
// நல்லாத்தான் பீல் பண்றீங்க.... ://
ரசிகன்! said...
//எல்லாமே நல்லா இருக்கு... ஒவ்வொரு flashbook வச்சு ஒரு படமே எடுக்கலாம் போங்க... :)
ரசிக்க வச்ச பதிவு! ://
mythees said...
:))
கமலேஷ் said...
//இந்த கொடுமையும் கொஞ்சம் சுவாரஸ்யமாதான் இருக்கு...நல்ல எழுதுறீங்க....வாழ்த்துக்கள்...//
ஒரு பொண்ணு சைட் அடிச்ச கதையை சொன்னா, திட்டாம வாழ்த்தறீங்களே எப்படி மக்கா...
Sangkavi said...
//நீங்க சொன்ன அண்ணன்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள்...
உங்ககிட்ட இருந்து தப்பித்சிட்டாங்க.//
வால்பையன் said...
// நல்லவேளை சிலர் தப்பித்து கொண்டார்கள்!//
S Maharajan said...
// அப்பாட அவங்க எல்லாரும் தப்பிச்சாங்க//
ஹலோ.. இப்படி ஒரு நல்ல உள்ளம் கிடைக்க அவங்களுக்குத்தான் கொடுத்து வைக்கல.. அதை புரிஞ்சுக்கங்க மக்கா...
V.Radhakrishnan said...
ஹா ஹா! பாவம் நீங்க. எதுக்கு இந்த அண்ணன்க எல்லாம் ஒழியனும், இந்த அண்ணன்களுக்கு மாப்பிளைக இருக்காங்களானு கேளுங்க.
''யோசிக்க வேண்டிய விசயம்தான்.. பட் காலம் கடந்து விட்டது.
//முக்கியமா பாலாசி அண்ணா கிட்ட அவருக்கு மாப்பிள்ளை இருக்காருனு கேளுங்க//
அண்ணன் நிச்சயம் தன் கடமையை செய்வார்....
அக்பர் said...
//எல்லா அண்ணனின் சார்பாகவும் இந்த அண்ணனின் வாழ்த்துகள்.///
என்ன சொன்னீங்க.. அண்ணனா.. அப்ப கல்யாண சீரா ரெண்டு பவுன் செயின் அனுப்பி வையுங்க.....
DG said...
//குட்டி பிசாசா?நீங்க...35 வயசுக்கு மேல ஆனவங்கல நாங்க பிசாசுனுதான் சொல்வோம்...:)//
என்னையா பிசாசுன்னு சொன்னீங்க.. இருங்க இருங்க... எங்க மிஸ் கிட்ட சொல்லி வைக்கிறேன்....
!
:-))) funny!
தாராபுரத்தான் said...
மனசுக்கு பிடித்த 'அண்ணன்மார்கள்..??????????????????\
அதுதானே தாத்தா இப்போ பிரச்சனை.....
க.பாலாசி said...
//ஏ.ஆர்.ரஷ்மான்//
//இப்டி ஒருத்தர் இருக்காரா?///
சாரி அண்ணாச்சி.. வழக்கம் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக்...
ஹாய் சுபிவண்யா..
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
ரொம்ப தைரியமா மனசில பட்டதை எல்லோரும் ரசிக்கும்படி நன்றாக எழுதுகிறிர்கள்.
உங்கள் பதிவுகள் கவிதைகள் எல்லாமே ரசிக்கும்படி நன்றாக இருக்கிறது.
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
நட்புடன்
ஜெய்செல்வம் ராம்குமார்.
உன்னோட இந்த தைரியமான பேச்சு தான் என்ன உன் பின்னால அலைய வெச்சுது வாணி.....
உன்னோட இந்த தைரியமான பேச்சு தான் என்ன உன் பின்னால அலைய வெச்சுது வாணி.....
jaiselvam said...
//ஹாய் சுபிவண்யா..
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.//
நன்றி... ஜெய செல்வம்..
vicky said...
//உன்னோட இந்த தைரியமான பேச்சு தான் என்ன உன் பின்னால அலைய வெச்சுது வாணி//
எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவார்.. பரவாயில்லையா?
//எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவார்.. பரவாயில்லையா? //
அண்ணங்கள் எல்லாம் ஒழிகன்னு சொல்லிபுட்டு அண்ணனை சப்போர்ட்டுக்கு கூப்பிட்டா எப்படியம்மா!?
விக்கி உங்க ரூட் கிளியரா தான் இருக்கு!
பின்னாடி சும்மா போகாதிங்க,
“எங்கேயோ போகின்ற மேகம் அழைக்குதுன்னு” பாட்டு பாடிகிட்டே போங்க!
சில நிதர்சனமான உண்மைகைளை நன்றாக எழுதி உள்ளீர்கள்
கலக்கல் ரொம்ப யதார்த்தமான பதிவு...
Post a Comment