உன் அறிவிப்பை
கட்டியம் கூறும்
பெருங்காற்று
என் திசையுடன்
திரும்பி போகும்!
பின்னே
காதலன் வருவதையும்
காதல் நுகர்வையும்
அறியாதவளா நான்?
சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!
மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.
முதலில்
ஒரு முத்தம்..
அடுத்ததாய்
ஆரத் தழுவுகிறாய்!
சங்கமிக்கும்
பொழுதுகளில்
கட்டவிழ்க்கப்படுகிறது
என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!
அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!
''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!
33 comments:
//மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.//
அருமை...
//''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!//
மருமகளுக்கு என்ன பண்ணீங்க?
சாரல் படத்துடன்...
//உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென//
-கலக்கற சுபி ,
//மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து//
-மழைக்கு மாமியார் அருமை!!
உன் கவிதை காண இன்னும் மழை வரட்டும் !!
////////அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்! ///////////
ஒவ்வொரு கவிதையிலும் எப்பொழுதோ நழுவ விட்ட பனித்துளியாய் காதல் சொட்டிக் கொண்டிருக்கிறது .அருமை !
///////அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!/////
ஒவ்வொரு கவிதையிலும் எப்பொழுதோ நழுவ விட்ட பனித்துளியாய் காதல் சொட்டிக் கொண்டிருக்கிறது .அருமை !
இன்னும் ஒரு பத்து நாள் பல்லை கடிச்சிகிட்டு பொறுத்துகனும்!
:))
வால்பையன் correct !!
//''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து! //
கலக்கிட்டீங்க...
//5 கருத்து கந்தசாமிங்க சொன்னது//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பாருங்கய்யா அலப்பரைய....
குடையிருந்தும் நனைந்தது போலக் குளிரடிக்கிறதே! (எங்கே விக்ஸ் டப்பா?)
//அகல்விளக்கு said...
//5 கருத்து கந்தசாமிங்க சொன்னது//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பாருங்கய்யா அலப்பரைய..//
அலப்பரை இல்லீங்க ராசா... லொள்ளு....
சரி..சரி...
நல்லாத்தான் பீல் பண்றீங்க:-)
அனைத்தும் அருமை.
கவிதை அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாய் உள்ளது. மொத்தத்தில் "ஊனாகி உயிராகி மழையாகிறான்.." கவிதை ”புரிந்தும் புரியாமல்...”
கவிதை மழை யில் நனைந்தோம்
ஹச்ச்ச்ச்ச்ச்...................ஒண்ணுமில்லை தும்மல்
கலக்கல் சுபி
அந்த படங்கள்தான் கொஞ்சம் படிப்பதை டிஸ்டர்ப் பண்ணுது
ரசனையான வரிகள்
வாழ்த்துக்கள்
//மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து! //
ம்ம்ம்ம்.....
//பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!//
ஆஹா அருமை
//என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!//
இதோ பாரடா இன்னொரு மழை "ஸ்ரேயா"
//''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்//
பெண்மையின் உண்மை
கவிதைகள் அனைத்தும் அருமை
Good Poem and pictures :)
Superb kavithai & nice pics!
அப்ப உங்க
வீட்டுல
எப்பவும் மழைதான் !
''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!
...... எல்லா கவிதைகளிலும் மழைச்சாரல்......... சில்லுனு இருக்குது.
சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
///
சோ கியூட் !!! :)
''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!//
அடடா!!!
நல்ல கவிதை தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்
//''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!
//
ஆமாங்க அம்மினி
எல்லாம் முதல்ல நல்லாத்தான் இருக்கும்
பார்த்துக்குங்க
//''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!//
சூப்பர் நடை.. இப்போதுதான் உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வருகிறேன்.. தேர்ந்த கவிஞராக எழுதுகிறீர்.. தொடருங்கள்..
நன்றி..
ஆஹா கவித,கவித!!!!!!!!!
ஆஹா கவித,கவித!!!!!!!!!
//மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!//
இங்கயும் லொள்ளு தானா
கவிதை என்னையும் நனைத்தது....
பாராட்டுக்கள்.
என் மழைக் காதலை ரசித்து பாராட்டிய அனைத்து நாள் உள்ளங்களுக்கும் நன்றிகள்...
Post a Comment