ஒரு காதல்
பகிர்வை விட கடினமானது
விடை பெறும் தருணம்...
இன்று என்னுடனானது அது!
உறவுகளை விட்டு
அயல் தேசம் போகிறேன்
அன்பைத் தேடும் அகதியாகி!
தவழ்ந்து நடைபழகி
நான் நிமிர்ந்து நின்ற
இந்திய மண் வழியனுப்புகிறது
வேறொரு நாட்டிற்கு
தத்துப் பிள்ளையாக!
இனி என் எல்லை
கடக்கும் விமானத்தில்
அம்மாவுக்கான முத்தங்களையும்
நட்புகளுக்கான பிரியங்களையும்
ஏக்கங்களுடன் அனுப்பி வைப்பேன்!
ஐ.பி.எல் கிரிக்கெட்டும்
தேர்தல் கலவரமும்
நான் குடியேறிய பிரதேசத்தில்
பெட்டிச் செய்தியாக,
காணும் இந்திய முகங்களில்
என் உறவுகளின்
சாயலைத் தேடுவேன்!
முதன் முதலான சைக்கிள்,
மாமர நிழல்,
சோளக் காட்டு நேசம்,
மல்லிகைப் பூ வாசம்,
செம்மண் சாலை,
தென்னங் காற்று,
மரப்பாச்சி பொம்மை
அத்தனையும் வழியனுப்புகின்றன
என் சம்மதம் கேட்காமலே!
ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!
33 comments:
///இனி என் எல்லை
கடக்கும் விமானத்தில்
அம்மாவுக்கான முத்தங்களையும்
நட்புகளுக்கான பிரியங்களையும்
ஏக்கங்களுடன் அனுப்பி வைப்பேன்!//
ஒவ்வொரு முறையும் ஏர்போர்ட்டினை கடக்குகையில் எனக்குள் தோன்றும் எண்ணங்கள் உங்களின் அழகிய வரிகளில் பிரதிபலிக்கிறது!
//ஒரு காதல்
பகிர்வை விட கடினமானது
விடை பெறும் தருணம்...//
ஆரம்ப வரியே அசத்தலான தொடக்கம்...!
//ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!//
உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ‘வலைப்பூ’ வீட்டில் எல்லாரும் ஒன்றாகத்தானே குடியிருப்போம்.
வாழ்த்துகள்.
மனதை கனக்க வைத்து விட்டீர்கள்...
நல்லவொரு வாழ்க்கை காத்திருக்கிறது...
சென்று வாருங்கள்...
:-(
ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!
மௌனமாய் அல்ல,
எந்த தேசம் போனாலும்
நலமாய்,
வளமாய் வாழ வாழ்த்துகிறேன்..
- அன்புடன்
jaiselvam ராம்குமார்.
ஊர் கூட்டிப் பெயர் வைத்துக் கொண்டவள் என்ற பதத்தில் ஒரு ஊரே ஞாபகம் வருது ப்ரேம்,, ...நைஸ்..
எல்லா வளமும் நலமும் செழிக்கட்டும்! வாழ்த்துக்கள்!
ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!
வரிகள் அருமை
நீங்கள் நலமுடன் வாழ்க்கை வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்
best of luck
எங்கிருந்தாலும் எங்கள் ஈரோட்டு மண்ணின் மகளாகவே....
(அதனால ரொம்ப சீன் போட விடமாட்டோம்....)
எல்லா வளங்களும் பெற்று மிகச் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்ந்திட வாழ்த்துகள் லாவண்யா....
இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள். வருத்தப்படவேண்டாம். இந்த உலகின் எந்த மூலைக்கு போனாலும் அங்க சில/பல இந்தியர்கள் கட்டாயம் உண்டு.
எங்க போனாலும் குறைஞ்சது ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வரமுடியும் . கவலைப்படாம போயிட்டு வாங்க :)
அப்போ நாங்கெல்லாம் தப்பிச்சிட்டமா?
........
வாழ்த்துக்கள் நல்லபடியா போயிட்டு வாங்கம்மணியோவ்
happy journy, பிரேமா மகள்!
//உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ‘வலைப்பூ’ வீட்டில் எல்லாரும் ஒன்றாகத்தானே குடியிருப்போம்.//
இதேதான்...
have a success! -)
எண்ணங்கள் யாவும் இனிதாய் அமையட்டும்.வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
ரொம்ப அடிக்காதிங்க, எதா இருந்தாலும் பேசி தீர்த்துகனும்!
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
படத்தெல்லாம் போட்டு ஃபீல் பண்ண வச்சிடலாம்னு மட்டும் நெனைக்காதம்மா....
கவிதையின் கனம் அதிகமுங்க !
வாழ்த்துகள். ஃபீல் பண்ணாதீங்க சிஸ்டர், கொஞ்ச நாள்ல சரியாயிடும்.
எல்லா மண்ணிலும் தமிழ் உண்டு. வருக வருக என வரவேற்கிறோம்.
TAKE CARE... HAPPY LIFE :)
கனமான கவிதை. கலங்காமல் புறப்படுங்கள். அனைவரின் வாழ்த்துக்களும் இருக்கும் உங்களோடு.
\\ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ
விடை பெறுகிறேன்//
இதை கண்டிப்பா நம்ப மாட்டேன் ...
நெகிழ்ச்சியாக விடை கொடுக்கிறோம்.
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ வாழ்த்துகிறோம்
நட்புடன்
சந்துரு
உங்கள் வாழ்வில் சந்தோஷம் அதிகமாக துக்கம் குறைய அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் தோழி , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எண்ணங்கள் யாவும் இனிதாய் அமையட்டும்.வாழ்த்துகள்.
//காணும் இந்திய முகங்களில்
என் உறவுகளின்
சாயலைத் தேடுவேன்!//
well said subi dear, dont worry maams a partha intha feel ellam odi poirum
Nice....
உங்கள் ஆசீர்வாதத்துடனும் வாழ்த்துகளுடனும் இனிதே லண்டன் வந்து சேர்ந்து விட்டேன் நான்! உங்கள் வாழ்த்துக்கள் என்னை வாழ வைக்கட்டும்! நன்றிகள் பல..!
வாழ்த்துக்கள்....
இனி வரும் நாட்கள் இனிதே அமையட்டும். வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
பிரிவின் வலி தெரியுதம்மா உன் கவிதையிலே..
Post a Comment