Tuesday, June 1, 2010

பரிட்சை என்றாலும் பயம் எமக்கு....

 இது நான் எழுதப் போகும் ரெண்டாவது தொடர்பதிவு.. முதல் பதிவான ‘பேருந்தில் காதல் பதிவு” க்கு பனித்துளி சங்கர் அழைத்திருந்தார்.. ஓவர் பில்டப் குடுத்து ஆரம்பித்துவிட்டு, ‘சாரிங்க மக்கா.. எனக்கு அப்படி எந்த சம்பவமும் நடவக்கவில்லை.. நானெல்லாம் நல்ல பொண்ணாக்கும்ன்னு தப்பிச்சாச்சு..

இப்போ, அகல்விளக்கு ‘நான் கடந்து வந்த தேர்வுகள்”ங்கிற தலைப்பில் எழுத அழைத்திருக்கிறார்.. இதுக்கு மறுக்கமுடியாதே.. ஏன்னா நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்.. சரியா..

‘எங்கம்மா பிரேமா ஸ்கூல் டீச்சர்...(இப்போ அம்மா மட்டுமல்ல, பெரியம்மா பொண்ணுங்க மூணு பேரும், மாமா பொண்னு, பையன் அவங்க மனைவி-ன்னு குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்).  அதனால ரெண்டு வயசில இருந்தே ஏ.பி.சி.டி படிக்க வேண்டிய கட்டாயம்.. தோசை சாப்பிடும் போதுகூட ஒன்.டூ. திரி-ன்னு சொல்லிக்கிட்டே சாப்பிடணும்..
அது கூட பரவாயில்லை, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு யார் வந்திட்டாலும் போதும், ‘ பாபா பிளாக்‌ஷீப் ரைம்ஸ் சொல்லு.. ஐந்து கரத்தனை’ பாட்டு பாடுன்னு நம்மை வெச்சு ஒரு மினி எக்ஸிபிஷனே நடத்துவாங்க..

ஊரில் நான் யூ.கே.ஜி படிச்ச ஸ்கூலில் எங்கம்மாவும் டீச்சரா இருந்தாங்க.. அப்போல்லாம் டிக்டேஷன் -ன்னு ஒரு டெஸ்ட் இருக்கும். அதாவது மிஸ் இங்கிலீஷ்-ல ஒரு வார்த்தையை சொல்லுவாங்க.,. அதுக்கு ஸ்பெல்லிங் நாம எழுதணும். கொஞ்ச நேரம் முழிச்சிட்டு, மிஸ் வாட்டர் குடிக்க போறேன்னு ஜகா வாங்கிட்டு, நேரா எங்கம்மா கிளாஸ் ரூம்க்கு ஓடிப் போய், சரியா ஸ்பெல்லிங் கேட்டு எழுதுக்கிட்டு வந்திருவேன்.. எப்பூடி? 

ஆனா அன்னிக்கு ஆரம்பிச்சு காலேஜ் படிக்கிற வரைக்கும் எனக்கு இங்கிலீஷில் பீ என்ற வார்த்தைக்கும் டீ என்கிற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாது.. b எழுத வேண்டிய இடத்தில் d எழுதிவேன்.. அதுக்காக எங்கம்மாக்கிட்ட முட்டி தேயற வரைக்கும் அடி வாங்கியிருக்கேன்.. பரிட்சை பேப்பரில் மிஸ் சரியா, அந்த வார்த்தைகளை மட்டும் தேடிப் புடிச்சு முட்டை சுழிப்பாங்க.. நம்ம பத்தித்தான் ஸ்கூலுக்கே தெரியுமே... இருந்தாலும் நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. இல்லாட்டி பிரேமாக்கிட்ட யார் வாங்கிக் கட்டிக்கிறது..

என்னதான் ஜாலியாக எழுத ஆரம்பித்தாலும், தேர்வு என்றால் எனக்கு ஒருவித பயமும் சோகமும் வரத் தான் செய்கிறது.. காரணம் என் வாழ்வில் நடந்த சம்பவங்கள்.. உண்மை சில சமயம் சுடும். எனக்கும் அப்படித்தான்..

`எங்க சயின்ஸ் டீச்சர் விமலாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.. அதென்னவோ தெரியவில்லை.. எப்போதும் என்மீது ஒரு வன்மத்தோடே திரிந்தார்.. பத்தாம் வகுப்பு மாடல் தேர்வில், இங்கிலீஷ் செகண்ட் பேப்பரில் எனக்கு பின்னால் உட்காந்து எழுதிய லலிதா என்னைப் பார்த்து ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுத, அன்று சூப்பர்வைஸராக வந்திருந்த விமலாவின் கண்களில் மாட்டிக் கொண்டோம்..

`அவ என்னைப் பார்த்து எழுதறான்னு எனக்கு தெரியாது-ன்னு என்று நான் சொல்ல, இல்ல, அவளுக்கு தெரியும் என்று லலிதா சொல்ல, ஹெட் மாஸ்டர் முன்னால் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்... அவளுக்கு பேப்பர் காட்டிய காரணத்துக்காக, எனக்கு 15 மார்க் குறைக்கப்பட்டது.. ஆனால் லலிதாவுக்கோ பத்து மார்க் தான் குறைக்கப்பட்டது.. அன்றைய நாளில் இருந்து எக்ஸாமில் யார் பக்கமும் திரும்பி பார்க்காமல் கடமையே கண்ணாக எழுதி பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன்..

அதன் பிறகு எங்க வீட்டில் மிகப் பெரிய பஞ்சாயத்து நடந்தது.. பஸ்ட் குரூப் எடு.. என்ஜினியரிங் படிக்கலாம்ன்னு என்று அக்காக்களின் ஆலோசனை.. ஓக்கேசனல் குரூப் எடு.. நிறைய மார்க் வரும்.. டீச்சர் டிரைனிங் சேரலாம் என்பது மாமாவின் ஆலோசனை.. நான் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கிறேன் என்று சொன்னபோது குடும்பமே கதறி தீர்த்தது.. என்னை எந்த குரூப்பில் சேர்ந்துவது என குலசாமி கோயிலில் குறி கேட்டார்கள்.. சாமியாடி ஒருத்தரிடம் வாக்கு கேட்டார்கள்..


 ஒருவழியாக சயின்ஸ் குரூப் எடுக்கிறேன் என ஒத்துக் கொண்டு, ஸ்கூல் சேரப் போன சமயம், ஹெச்.எம்மிடம் நான் அரசியல் அறிவியல் குரூப்பில் சேர்கிறேன் என ஸ்பாட்டில் வைத்து சொல்ல, நான் ஏ.3 எனப்படும் குரூப்பில் சேர்ந்தேன்.. அதன் பிறகு வீட்டில் பூசை வாங்கியது தனிக்கதை.. நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..

இவ்வளவு தூரம் போராடி ஏ.3 யில் சேர்ந்திருக்கிறோம்.. சாதித்து காட்ட வேண்டும் என்று வெறியோடு படிக்க ஆரம்பித்தேன்.. நைட் பன்னிரெண்டு மணி வரையிலுமோ, காலை மூணு மணிக்கோ எங்க ஊரில் யாராவது முணகும் சத்தம் கேட்டால், சத்தியமாய் நான் படிப்பதாய் அர்த்தம்.. அந்தப் படிப்பாளி நான்.. மிக அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தேன்.. ஆனால் நான் பிளஸ் டூவில் எடுத்தது ஆயிரத்து ஆறு மார்க்.. அந்த ஏமாற்றம் என்னை விரக்தியில் தள்ள, தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன்..

அப்போது எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை லா காலேஜில் சேர வேண்டும் என்பதுதான். என் சிறுவயது முதல் கொண்ட கனவல்ல, வெறி அது.. டி.வியில் வக்கீல்கள் வரும் சீன்கள் மட்டும்தான் எனக்குப் பிடித்தமானது..அந்தளவுக்கு வெறி.. எண்ட்ரன்ஸ் எக்ஸாமீக்கு என்னை தயார் செய்து கொண்டிருந்த நேரம், அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்.. கருப்பை நீக்க வேண்டி ஆப்ரேஷன் செய்யச் சொல்லிவிட்டார்கள்.. அம்மாவுடன் நான் மட்டுமே.. ஆப்ரேஷனுக்கு முந்தி, பிந்தி என 20 நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசம்.. அம்மாவை பெட்டில் படுக்க வைத்துவிட்டு, ஹாஸ்பிட்டல் வராந்தாவில் உட்கார்ந்து நான் எண்ட்ரஸ் எக்ஸாமீக்கு படித்ததை என்னாலும் சரி, அந்த மருத்துவமனை கட்டிடங்களாலும் சரி மறக்க முடியாது.. படிக்கிற புள்ளை என நாங்க தங்கியிருந்த வராண்டாவில் எப்போதும் லைட் போட்டு வைப்பார் சசி நர்ஸ்.. கடந்து செல்லும் போது தலை தடவிக் தருவார் சுப்பராயண் டாக்டர். சமயங்களில் காபி போட்டுத் தருவார்கள்.

இப்படியாக கடக்க, அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்த அடுத்த நாள் எனக்கு கோவையில் எண்ட்ரன்ஸ் எக்ஸாம். அம்மாவோ மயக்கம் தெரியாமல் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டு படித்திருக்கிறார்கள்.. காலை ஐந்து மணிக்கு பஸ் ஏறினால்தான் ஈரோடு போய் கோவைக்கு 9 மணிக்குள் போக முடியும்.. 10 மணிக்கு பரிட்சை.. அம்மாவிடம் சொல்லாமல் கிளம்ப எனக்கு மனமில்லை.. சொன்னாலும் புரியும் நிலையில் அம்மா இல்லை.. லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை.. என்ன செய்ய.. கலங்கிய கண்களுடன் கிளம்பி நின்றவளை, ஒட்டு மொத்த மருத்துவமனையும் `ஆல் தி பெஸ்ட்` சொல்லி வழியனுப்பியது.. எக்ஸாம் எழுதிவிட்டு திரும்பி வரும் போது அம்மா கண்விழித்திருந்தார்..

மறுபடியும் பஞ்சாயத்து, ஐந்து வருடம் லா படிக்க வைக்க முடியாது, காசு கரியாகும் என மாமா கொடி பிடிக்க, பெரியம்மா, அக்கா எல்லாரும் அதை வழி மொழிந்தார்கள்.. ஆனால் லட்ச ரூபாய் டெபாசிட் கட்டி என்னை டீச்சர் டிரைனிங்கில் சேர முன்வந்தார்கள். கேட்டால் அதில் வேலை நிச்சயம் என்றார்கள்.. அன்றில் இருந்துதான் எனக்கு டீச்சர்களையே பிடிக்காமல் போனது..

அப்புறம் எண்ட்ரன்ஸில் பாசாகு.. சீட் கிடைக்குதான்னு பார்ப்போம் என்றார்கள்.. ஒருவழியாக சீட் கிடைக்க, மறுபடியும் பஞ்சாயத்து.. டீச்சர் டிரைனிங் சேரு.. ரெண்டு வருஷத்தில் கோர்ஸ் முடிச்சிட்டு, மறுபடியும் லா படிக்க போ.. அதுக்குள்ள உனக்கு வேலையும் கிடைச்சிடும்.. உன் காசில் படிக்கலாம்ன்னு ஆளாக்குக்கு அட்வைஸ்.. ஆனால் நான் பிடிவாதமாய் நின்று கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை.. காரணம் நாமதான் லா சேர்ந்திட்டோம் என்பதாகவும் இருக்கலாம்,.. அதையும் தாண்டி கஷ்டப்பட்டு படிச்சதுக்கு பிளஸ் டூ ரிசல்ட் தந்த சூடாகவும் இருக்கலாம்.... பல அரியர் வைத்தேன். அதற்காக ஒருநாளும் வருந்தியது இல்லை.. ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..

நான்காம் ஆணு படிக்கும் போது, சென்னையில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர, பயிற்சி திட்டம் ஒன்று உண்டு.. அதில் தேர்வாக எட்டு கட்ட பரிட்சைகள் இருக்கும்.. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் மிக இயல்பாக அதில் கலந்து கொண்டு, அந்த வருடம் தேர்வு எழுதிய 2653  மாணவர்களுள் 32 பேரி ஒருவராக தேர்வு பெற்ற சமயம்தான் உணர்ந்தேன், வெறும் அல்ஜிப்ராவும், காம்பவுண்ட் செண்டன்ஸீம், நேர் நேர் தேமாவும் நம் வாழ்க்கையை தீர்மாணிக்கப் போவதில்லை என....

ஆக இப்படியாக நான் தேர்வுகளை கடந்து வந்தேன்.. சரி.. இதுக்கு நாம தொடர் பதிவு எழுத கூப்பிடலாம்ன்னா யாரும் சிக்க மாட்டீங்கறாங்களே.... யாரை மக்கா மாட்டி விடலாம்?

25 comments:

க.பாலாசி said...

நேத்தே நெனச்சேன் இந்த விபரீதம் நடக்கும்னு...

//‘எங்கம்மா பிரேமா ஸ்கூல் டீச்சர்...//

டீச்சர் வீட்டு பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க... சரிதான்.....

Mythees said...

இது கூட ஒரு வகை மொக்கைதான் ..

///வெறும் அல்ஜிப்ராவும், காம்பவுண்ட் செண்டன்ஸீம், நேர் நேர் தேமாவும் நம் வாழ்க்கையை தீர்மாணிக்கப் போவதில்லை என....///

இது உண்மை

VELU.G said...

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.....

S Maharajan said...

//பல அரியர் வைத்தேன். அதற்காக ஒருநாளும் வருந்தியது இல்லை..//

அதானே பார்த்தேன்!

//ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..//

நம்ம முடியலியே!சரி நம்புகிறேன்

sathishsangkavi.blogspot.com said...

// நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்..//

நம்பிட்டோம்....

//குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்//

தப்பியது நீங்க இல்ல நம் நாட்டு குழந்தைகள் தான்...

//நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. //

உங்க க்ளாஸ்ல மொத்தமா நீங்க மட்டும் தான் இருந்தீங்களா?

//நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..//

பரவாயில்லை சரியாத்தான் நினைத்து இருக்கிறாங்க

//அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை..//

தெரிந்ச விசயந்தானே...

settaikkaran said...

எல்லாரும் அவங்கவங்க படிப்பைப் பத்தி சொல்லுறதப் பார்த்தா, நான் தான் பெரிய அறிவாளியோன்னு தோணுதே, ஏன்?

பிரேமா மகள் said...

சேட்டைக்காரன் said...

//எல்லாரும் அவங்கவங்க படிப்பைப் பத்தி சொல்லுறதப் பார்த்தா, நான் தான் பெரிய அறிவாளியோன்னு தோணுதே, ஏன்?//

உண்மைதான் சேட்டை.. நீங்க பெரிய அறிவாளி(????????????????) தான்...

அகல்விளக்கு said...

உங்க தளராத தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.......

vasu balaji said...

:)) VELU.G said...
நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.....
/
அதான

அன்புடன் நான் said...

விமலா டீச்சரோட நேர்மைத்தான் பிடிச்சிருக்கு.

சசிகுமார் said...

///ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..//

எல்லாமே நம்மல போலவே இருக்காங்கப்பா

M.Rishan Shareef said...

:-)

அமுதா கிருஷ்ணா said...

ம்...

தாராபுரத்தான் said...

ரொம்ப நல்லா படித்திருக்கிறாய் பேத்தீ..

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

//டீச்சர் வீட்டு பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க... சரிதான்....//.

உங்க கூட சேர்ந்திட்டம்ல... வேற எப்படி இருப்போம்?

பிரேமா மகள் said...

VELU.G said...

//நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.....//

வானம்பாடிகள் said...

:)) VELU.G said...

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.....
/
//அதான//

நீங்களெல்லாம் என்ன விஜயகாந்த் ரசிகர்களா?

பிரேமா மகள் said...

S Maharajan said...


//ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..//

//நம்ம முடியலியே!சரி நம்புகிறேன்//

அட என்னாலேயே நம்ம முடியலைங்க..

பிரேமா மகள் said...

Sangkavi said...
// நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்..//

நம்பிட்டோம்....

//குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்//

தப்பியது நீங்க இல்ல நம் நாட்டு குழந்தைகள் தான்...

//நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. //

உங்க க்ளாஸ்ல மொத்தமா நீங்க மட்டும் தான் இருந்தீங்களா?

//நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..//

பரவாயில்லை சரியாத்தான் நினைத்து இருக்கிறாங்க

//அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை..//

தெரிந்ச விசயந்தானே...//


இன்னிக்கு உங்க டைம் பாஸ்.. என் பிளாக்கா மக்கா??

பிரேமா மகள் said...

சி. கருணாகரசு said...

//விமலா டீச்சரோட நேர்மைத்தான் பிடிச்சிருக்கு.//

ஆனா அவங்க ஹஸ்பெண்டுக்கு அவங்களை பிடிக்கலையாம்..

பிரேமா மகள் said...

சசிகுமார் said...
///ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..//

எல்லாமே நம்மல போலவே இருக்காங்கப்பா//

இப்ப நீங்க படிப்பாளின்னு சொல்லறீங்களா இல்லை அரியர் கேஸ்-ன்னு சொல்லறீங்களா?

பிரேமா மகள் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
:-)

அமுதா கிருஷ்ணா said...
ம்...


தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

பிரேமா மகள் said...

தாராபுரத்தான் said...
//ரொம்ப நல்லா படித்திருக்கிறாய் பேத்தீ..//

ஹய்யா,, தாராபுரத்தான் என்னை பேத்தி-ன்னு சொல்லிட்டாரு.. அப்போ நான் குட்டி பொண்னு தானே...

பெசொவி said...

படிக்கும்போது பல சோதனைகளைக் கடந்திருந்தாலும், படித்து முடித்தபின் இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது பழைய படிப்பு நினைவுகள் ஒரு சுகத்தை தருகிறது என்பது உண்மைதான். நல்ல பிளாஷ் பேக். வாழ்த்துகள்!

prince said...

பின்னூட்டம் என்றாலும் பயம் எமக்கு....

Anonymous said...

//// நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்..//

நம்பிட்டோம்....

//குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்//

தப்பியது நீங்க இல்ல நம் நாட்டு குழந்தைகள் தான்...

//நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. //

உங்க க்ளாஸ்ல மொத்தமா நீங்க மட்டும் தான் இருந்தீங்களா?

//நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..//

பரவாயில்லை சரியாத்தான் நினைத்து இருக்கிறாங்க

//அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை..//

தெரிந்ச விசயந்தானே.//

Ha ha.