Sunday, June 6, 2010

கேட்க மறந்த காதல்

கல்யாணம் ஆன நான்கு மாதத்தில் இதுவரை நூற்றி இருபத்தி எட்டு  தடவை கேட்டிருப்பாள் ஆனந்தி..

``ஏங்க உங்க கேர்ள் பிரெண்ட் என்ன பண்ணறாங்க. ஒருநாள் எனக்கு அறிமுகம் செஞ்சு வையுங்களேன்``..

`இல்லம்மா.. அப்படி யாரும் எனக்கு இல்லை` என நானும் இருநூற்று ஐம்பத்து ஆறு முறை பதில் சொல்லியிருப்பேன்..

இது ஒருநாளைக்கு ஒருமுறை என்று இருந்தால் கூட பரவாயில்லை. நாள் ஒன்றுக்கு பல முறையும், மாதம் ஒன்றுக்கு சில முறையும் ஆனந்தியால் கேட்கப்படும் கேள்வி.

`இன்னிக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவளை முதன் முதலில் எங்க பார்த்தீங்கன்னு சொல்லுங்க` என ஒற்றை கால் பிடிவாதமாய் நிற்பாள். அடுத்த நிமிடமே `சூப் சாப்பிடறீங்களா?` என சகஜ நிலைக்கு மாறிவிடுவாள். பரவாயில்லை இனி கேட்க மாட்டாள் என நினைக்கவும் முடியாது.

டிராபிக் சிக்னலில் பைக்கில் நிற்கும் போது, கண்ணுக்கு தட்டுப்படும் அழகான பெண்ணைக் காட்டி `இவ மாதிரி இருப்பாளா, உங்க ஆளு`என்று அன்றைய கச்சேரியை ஆரம்பிப்பாள்.

அதற்காக இதுவரைக்கும் ஒருநாள் கூட ஆனந்தியின் மீது கோபப்பட்டதோ, எரிச்சல்பட்டதோ இல்லை. விளையாட்டுப் பெண்ணின் சீண்டலாகவே தோன்றும்.

நான் வசந்த். இந்திய விவசாய குடிமகனின் மகன் என்ற காரணத்துக்காக கிடைத்த ஸ்காலர்ஷிப் பணத்தில் படித்துவிட்டு, இந்தியாவைத் தவிர பிற நாடுகளுக்கு வேலைப்பார்ப்பவன். டெல்லிவாசி, சமுதாயம் என்னை ஐ.டி ஊழியர் என்கிறது.

இலக்கண விதிப்படி 27 வயதில் பெண் பார்த்து 28-யில் நான் திருமணம் செய்துகொண்டவள்தான் ஆனந்தி..

முதல் இரவில் அவள் கேட்ட கேள்வியே, `வரதட்சனை வேண்டாம்ன்னு சொல்லி என்னை கட்டிக்கிட்டீங்க.. எதாச்சும் லவ் பெயிலியரா` என்பதுதான்.  வெடிச் சிரிப்பு சிரித்தபடி அவள் ஆப்பிள் கன்னத்தை கிள்ளினேன்.

கல்யாண களை, விருந்து எல்லாம் முடிந்து டெல்லியில் நானும் அவளும் தனிக்குடித்தனம் புகுந்தோம். வந்த முதல் நாளே, `இந்த வீட்டை உங்க காதலிக்காக பார்த்து பார்த்து அலங்கரிச்சு வைச்சிருப்பீங்க.. நான் புழங்கி அழுக்காக்கினா அவங்க கோபப்படமாட்டாங்களா?` என்று ஆனந்தி கேட்கும் போது, மெல்ல முருவலுடன் அவளின் தலைகோதி விட்டேன்.

அதன் பின், என்காதலி குறித்த அவளின் கேள்விகளும் என் பதில்களும் பழக்கமான ஒன்று.

அனுமார் தன் நெஞ்சை பிளந்து காட்டிய மாதிரி என்னாலும் முடிந்தால், என் இதயத்தை திறந்து காட்டி, அவளைத் தவிர யாருக்கும் அங்கே இடமில்லை என்பதை நிருபிக்கவேண்டும்..

என்ன சினிமாத்தனமாக பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆனந்தியின் அடத்தில் ஒரு நாள் சிக்கிப் பாருங்கள் தெரியும்.

அன்று ஆபீஸ் பார்ட்டி முடிந்து வரும் போது மணி பனிரெண்டை தாண்டி இருந்தது.  டி.வியில் ஏதோ குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, எங்கோ பார்வையை செலுத்தியபடி அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்ததும் `என்ன உங்க ஆளு கூட சேர்ந்து செம ஆட்டமா.. தண்ணி அடிச்சிருப்பீங்க போலயிருக்கு` என்று அர்த்த ராத்திரியில் குரல் உயர்த்தியவளுக்கு  அலட்சிய சிரிப்புடன் நான் நகர்ந்தது,  கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

`நில்லுங்க.. நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. திமிரா போறீங்க.. என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா?`என்று கத்த ஆரம்பித்தாள். அழுகை சத்தமும் கேட்டது.

ஒருநிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை. பின் அவளருகில் சென்று கைகளை பிடித்தபடி அந்த கண்களை உற்று பார்த்தேன்.

என்ன நினைத்தாலோ அழுகையை நிறுத்திவிட்டு, `ஒருநாள் கூட உங்களுக்கு என் மேல கோபமே வந்ததில்லையா, ஏன் பதிலுக்கு என்கிட்ட, என் காதலைப் பத்தி கேட்டு சீண்டனும்ன்னு கூட தோணலையா?` என்றாள்.

`உன் குழந்தைதனமான முகத்தைப் பார்க்கும் போது, நீ எந்த தப்பும் செய்யலைன்னு தோணுது`என்றேன் அவள் கன்னம் வருடியபடி.

அந்த வார்த்தையில் உடைந்தவள் போல, விருக்கென என் கைகளை உதறி விட்டு, `இல்லைங்க..  நீங்க கேளுங்க.. அப்பத்தான் ரவி மாமாவைப் பத்தி சொல்ல முடியும்.. அவருக்கும் எனக்கும் இருந்த காதலைப் பத்தியும் சொல்ல முடியும்` என்றாள்.

23 comments:

RASSI said...

உங்க சிறுகதை நல்ல நகர்வாக இருக்கிறது. தலைப்பு..
"கேட்க தூண்டும் காதல்" என்பது எனது கருத்து.

ப்ரியமுடன் வசந்த் said...

அடக்கி வைத்தாலும் ஒரு நாளில் வெடித்து சிதறும் அணுகுண்டுதான் காதல் ....


post comment ன்ற எழுத்து சரியா தெரியலைங்க செட்டிங்ஸ்ல ஃபாண்ட் கலர் சேஞ்ச் பண்ணுங்க...

Santhappanசாந்தப்பன் said...

நல்லாயிருக்கு.. பாதில கொஞ்சம் யூகிச்சுட்டேன்!

//இந்தியாவைத் தவிர.....// ரசிச்சேன்! But, Even, our Govt. getting benefits!

vasu balaji said...

நல்லா இருக்குங்க:)

Romeoboy said...

இந்த மாதிரி எதாவது ட்விஸ்ட் கண்டிப்பா கடைசில இருக்கும்ன்னு நினச்சேன்.. நல்லா இருக்கு நடை .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மிக அருமையான கதைங்க.

S Maharajan said...

கதை நல்ல இருகுங்குங்க

Mythees said...

:)

பெசொவி said...

கொஞ்சம் விரிவாக பின்னூட்டம் எழுதவேண்டும் என்பதால்:-
பொதுவாகவே நம் சமூகத்தில் ஆண் தன்னுடைய பழைய காதலைப் பற்றி மனைவியிடம் எளிதில் சொல்லிவிட முடியும். மனைவிக்கு கோபமோ, வருத்தமோ இருந்தாலும் சமூகத்தால் அது புறக்கணிக்கப் படும். அது போக, மனைவி ஏற்கெனவே ஒரு ஆணிடம் மயங்கியிருக்கிறாள் என்ற எண்ணமே ஒரு ஆணைக் கலவரப் படுத்தும். சமூகத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். மனைவியின்மேல் சந்தேகப் படும் எந்த ஆண்மகனும் நிம்மதியாக தூங்கக் கூட முடியாது. உங்கள் கதையில் காதலைச் சொன்ன மனைவியின் நிலை இனிமேல்தான் பரிதாபகரமானது. என்னைக் கேட்டால் இது ஒரு சோகமான முடிவு கொண்ட கதைதான்.

JS RAMKUMAR said...

ஹாய் லாவண்யா,

எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும்
கதை நன்றாக இருக்கிறது..

வாழ்த்துக்கள்....


" காதல் என்பது "

சந்திக்காதவரை,
விடை தெரியாத
விடுகதை...

சந்தித்தபின்,
புரிந்தும் புரியாத
புதிர்...

கடந்துபோன பின்,
எல்லோர் மனதிலும் - அது
கல்லறையாக
உறைந்து போய் இருக்கிறது..

நட்புடன்
ஜெய்செல்வம் ராம்குமார்..

ரோகிணிசிவா said...

m m . valakkam pola , asthal twist .

வால்பையன் said...

எதிர்பார்த்த முடிவு!


இந்த பதிவுக்கு எதிர் ஓட்டு போட்டது நிச்சயம் ஒரு ஆணாதிக்கவாதி தான், சம்முவம் எட்றா வண்டிய, கூட்றா பஞ்சாயத்த!

ரோஸ்விக் said...

கமெண்ட் போடுற எடத்துல "கருத்து கந்தசாமிங்க சொன்னது"-ன்னு இருக்கே... அவசியம் சொல்லனுமா...??

பேசாம அப்பீட்டாயிடுவோம??

வேணாம் வேணாம்... அப்புறம் ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவாங்க.

:-)))

கதையும் நல்லாத்தான் இருக்கு.

வால்பையனின் கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்.

prince said...

/முதல் இரவில் அவள் கேட்ட கேள்வியே, `வரதட்சனை வேண்டாம்ன்னு சொல்லி என்னை கட்டிக்கிட்டீங்க.. எதாச்சும் லவ் பெயிலியரா` என்பதுதான்.///

இதைத்தான் சும்மா கிடைத்த மாட்டை பல்லை பிடிச்சி பார்க்கிறதுன்னு சொல்லுவாங்களோ. ஹி! ஹி!

Radhakrishnan said...

:) எத்தனை ஆழமான கதை. அருமை.

பிரேமா மகள் said...

ரசிகரன் said...

//உங்க சிறுகதை நல்ல நகர்வாக இருக்கிறது. தலைப்பு..
"கேட்க தூண்டும் காதல்" என்பது எனது கருத்து.//

உங்கள் கருத்தை எப்பவுமே நான் பின்பற்றுபவள் மிஸ்டர் ரசிகரன்...

பிரேமா மகள் said...

சாந்தப்பன் said...

//நல்லாயிருக்கு..//

வானம்பாடிகள் said...

//நல்லா இருக்குங்க:)//


~~Romeo~~ said...

// நல்லா இருக்கு நடை //.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மிக அருமையான கதைங்க.//


S Maharajan said...

//கதை நல்ல இருகுங்குங்க//


mythees said...
:)

jaiselvam said...

//எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும்
கதை நன்றாக இருக்கிறது..//


ரோகிணிசிவா said...

//m m . valakkam pola , asthal twist .//


V.Radhakrishnan said...

//:) எத்தனை ஆழமான கதை. அருமை.//

பாராட்டறதுக்கு ஒரு நல்ல மனசு வேணும்.. அது உங்ககிட்ட இருக்கு..
நன்றிகள் பல...

பிரேமா மகள் said...

ப்ரியமுடன்...வசந்த் said...



//post comment ன்ற எழுத்து சரியா தெரியலைங்க செட்டிங்ஸ்ல ஃபாண்ட் கலர் சேஞ்ச் பண்ணுங்க...//

இப்ப ஓ.கே-ங்களா?

பிரேமா மகள் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// மனைவியின்மேல் சந்தேகப் படும் எந்த ஆண்மகனும் நிம்மதியாக தூங்கக் கூட முடியாது. உங்கள் கதையில் காதலைச் சொன்ன மனைவியின் நிலை இனிமேல்தான் பரிதாபகரமானது. என்னைக் கேட்டால் இது ஒரு சோகமான முடிவு கொண்ட கதைதான்.//

கண்டிப்பா.. அதேதான்.. மனைவி-க்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை சொல்வதற்காத்தான் இந்த கற்பனை கதை...பின்னூட்டத்திற்கு நன்றி...

பிரேமா மகள் said...

வால்பையன் said...



//இந்த பதிவுக்கு எதிர் ஓட்டு போட்டது நிச்சயம் ஒரு ஆணாதிக்கவாதி தான், சம்முவம் எட்றா வண்டிய, கூட்றா பஞ்சாயத்த!//


என்னை வெச்சு காமெடி பண்ணலையே?

பிரேமா மகள் said...

ரோஸ்விக் said...

//கமெண்ட் போடுற எடத்துல "கருத்து கந்தசாமிங்க சொன்னது"-ன்னு இருக்கே... அவசியம் சொல்லனுமா...??//

என்ன எஜமான்.. நீங்க சொல்லாம இருந்தா எப்படி?

//வேணாம் வேணாம்... அப்புறம் ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவாங்க//

இல்லாட்டியும் சொல்லுவமுங்க...

//வால்பையனின் கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்.//

அந்த அங்கிள் எப்பவுமே அப்படித்தாங்க..

Buvan said...

இதுல உள்குத்து எதாச்சும் இருக்க மேடம்...? இந்த கதையில வர ஆனந்தி & வசந்த் அவர்களோட உண்மை பேர் தெரிஞ்சிகலாமா?

M. Azard (ADrockz) said...

nalla kathai, vaalththukkal