Thursday, June 24, 2010

நான் கடவுள்

சாரி ராஜி .. நீங்களும் கடவுள் பத்தி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்குப் பிறகு ஏனோ ஒரு போஸ்ட் கூட போடமுடியலை. ஏதாச்சும் சாமி குத்தமா இருக்குமோ?

வழக்கமா எல்லா தொடர் பதிவுகளும், சின்ன வயசில் இருந்து என்று ஆரம்பிக்கும். அதே மாதிரியே நானும் ஆரம்பிக்கிறேன்.

`சின்ன வயசில் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, பக்கத்து வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் திருடி வீட்டுக்கு கொண்டு வந்தோம். திருடினா சாமி கண்ணைக் குத்திடும் என்று பாட்டி சொன்னதில் இருந்து கடவுள் என்பவர் அன்றிருந்து எனக்குள் ஒரு ஹீரோ ஆகிப்போனார்.

அதன் பின் எல்லாவற்றிற்கும் எனக்கு சாமிதான் அடிப்படை. நாலாவது படிக்கும் போது, `ஏன் இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போடணும். சாமிக்கு சர்க்கரை பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டா, சண்டை வராதே-ன்னு நினைச்ச ஆளு நான். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போச்சுன்ன்னாக் கூட கடவுள்-க்கிட்ட சூடம் பத்தி வெச்சு தேடிச் தர சொல்லிக்கிட்டு இருந்தேன்.

வளர வளர நிறைய பிராத்தனைகள் இருந்தது. அது நிறைவேறாத போது கடவுள் மீது கோபம் வந்தது.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற என கோபத்தில் கத்தி அழுவேன். கொஞ்ச நாள் உன் மூஞ்சியிலியே முழிக்க மாட்டேன் என்று டூ விட்டுவிட்டு பின் எதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் சரண்டர் ஆகிவிடுவேன்.

அப்போதெல்லாம் சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நல்ல மனது உடையவர்களுக்கும் பக்தி நிரம்பியவர்களுக்கும்தான் சாமி வரும் என நினைப்பேன்.

அம்மா பிரேமா மேல்மருவத்தூர் கோயிலின் தீவிர பக்தை.. எனக்கும் அந்த கோயிலுக்கு இருமுடி கட்டி கூட்டி போவார்கள். பிரதோஷம், சனிக்கிழமை இப்படி விரதம் இருப்பதற்காகவே காரணம் தேடும் நல்ல மனசுக்காரி அம்மா பிரேமா.

கொடுமுடியில் மகுடேஷ்வரர் கோயில் உண்டு. ஆற்றங்கரையில் மிக அழகாக இருக்கும். அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம். பிளஸ் டூ படிக்கும் போது, பழனிக்கு பாதயாத்திரை போயிருக்கிறேன்.

படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).  காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.


பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.. எல்லாம் நான் சென்னையில் வேலைக்குச் சேரும் வரைதான். அதன் பின் எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி பெருகியது.

மரம் சூழ கோயில் பார்த்த எனக்கு, சென்னையில் செங்கல் கட்டிடத்திற்குள் பார்த்த சாமிகளை பிடிக்கவில்லை. வேலை நேரம் காரணமாக கோயிலுக்கு போக பிடிக்காமல் போக என் போக்கும் மாறியது. அதற்கு காரணம் என் அலுவகத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்.

`சிவ பெருமான் இப்ப இருந்தார்-ன்னா புளு கிராஸில் அரஸ்ட் பண்ணிருவாங்க.. புலித் தோல் போர்த்திக்கிட்டு சுத்தறார்` என கேலி செய்யும் ஆட்கள். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்னும் கூட்டம். அவர்களுடன் சேர சேர எனக்கும் சாமி குறித்த நம்பிக்கை மாறியது.. `நீயெல்லாம் ஈரோட்டுக்காரப் பொண்ணா, உங்க ஊரில் இருந்த பெரியார் எத்தனை சொல்லும் புத்தி வராதா உனக்கு` என என்னிடம் கேட்டபிறகுதான நிறைய யோசிக்க ஆரம்பித்தேன்.

கடவுள் பேரைச் சொல்லி நாம்தான் ஏமாற்றிக் கொள்கிறோம். லிட்டர் லிட்டராக சிலைகள் மேலே கொட்டும் பாலை, ரோட்டில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமேன்னு என்று நான் யோசித்த நாளில், எனக்குள் நாத்திகமும் ஆத்திகமும் இல்லாத பெண்ணைக் கண்டேன்.

சாமி சாமி-ன்னு லட்ச கணக்கில் நன்கொடை தருகிறீர்களே, ஒரு ஏழை பொண்னின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்களேன் -ன்னு எதிர் வாதம் செய்கிறேன் இப்போது வரைக்கும்.

`பொட்டப் புள்ளையா பொறந்திட்டு சாமியை பகைச்சுக்காத` என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதுக்காக கோயிலில் உட்கார்ந்திருந்தா காசு வந்திருமா, இந்த மாசம் வேலைக்கு போனாத்தான் சம்பளம் கிடைக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆக இப்போ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது என விதியின் வீதியில் செல்கிறேன்...

25 comments:

க.பாலாசி said...

//சாரி ராஜி .. நீங்களும் கடவுள் பத்தி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்குப் பிறகு ஏனோ ஒரு போஸ்ட் கூட போடமுடியலை. ஏதாச்சும் சாமி குத்தமா இருக்குமோ?//

ஆரம்பமேவா......எங்கப்போயி முடியப்போவுதோ..!!!??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me 1st tu

அன்புடன் நான் said...

(அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்). //

இதுதான் காரணமா இருக்கும்!


புளிசோறு கிடைக்கிற வரைக்கும் சாமி கும்பிட வேண்டியது....
அதுக்கு வாய்ப்பு இல்லேன்னு தெரிஞ்சப்புறம்... நாத்திக பேசவேண்டியது?

S Maharajan said...

சரி நீங்க என்ன சொல்வரீங்க
சில உண்மைகளை பட்டுன்னு சொல்ல்றீயல!
நீங்க நல்லவளா!கெட்டவளா!

க.பாலாசி said...

//அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம்.//

காடு பதுங்குன இடம்னு சொல்லும்மா..

ம்ம்ம்...கருத்தெல்லாம் நல்லாதானிருக்கு.. (நான் கோவிலுக்குப்போகிறேன். இந்த காணிக்கை அதுஇது என்று எதுவும் கிடையாது. வழிபாடு மட்டும்)

பிரேமா மகள் said...

க.பாலாசி said...
//ஆரம்பமேவா......எங்கப்போயி முடியப்போவுதோ..!!!??//

முடிச்சாச்சு முடிச்சாச்சு..

பிரேமா மகள் said...

சி. கருணாகரசு said...
//புளிசோறு கிடைக்கிற வரைக்கும் சாமி கும்பிட வேண்டியது....
அதுக்கு வாய்ப்பு இல்லேன்னு தெரிஞ்சப்புறம்... நாத்திக பேசவேண்டியது?//

சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே?

பிரேமா மகள் said...

S Maharajan said...

//சரி நீங்க என்ன சொல்வரீங்க
சில உண்மைகளை பட்டுன்னு சொல்ல்றீயல!
நீங்க நல்லவளா!கெட்டவளா!//

தெரியலையே அண்ணாச்சி..

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

//காடு பதுங்குன இடம்னு சொல்லும்மா..//

ஹலோ அதெல்லாம் உங்களை மாதிரி வயசானவங்க சொல்லறது..

நாங்கெல்லாம் யூத்.. ஸ்கூல் கட் அடிச்சிட்டு காபி ஷாப்தான் போவோம்.

Chitra said...

படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்). காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.


...... ha,ha,ha,ha,ha.... "உண்மையை" சொல்லி இருக்கீங்க....

பிரதீபா said...

இப்போ கோவிலுக்குப் போறதே..................................... இல்லையா ப்பா?

santhanakrishnan said...

மன்னிக்கவும்.
கடவுள் நம்பிக்கை என்பது
மிகவும் ஆழமானது.
நீங்கள் மேலோட்டமாகப்
பார்க்கிறீர்கள் என்று
நினைக்கிறேன்.

VELU.G said...

//
பிரேமா மகள் said...
க.பாலாசி said...
//காடு பதுங்குன இடம்னு சொல்லும்மா..//
ஹலோ அதெல்லாம் உங்களை மாதிரி வயசானவங்க சொல்லறது..
நாங்கெல்லாம் யூத்.. ஸ்கூல் கட் அடிச்சிட்டு காபி ஷாப்தான் போவோம்.
//

நீங்களெல்லாம் யூத்துன்னா நாங்க எங்க போறது. இந்த சின்ன வயசிலே இதையெல்லாம் படிக்க வெச்சிட்டியே கடவுளே

அப்புறம் நானும் கடவுள் தான். புளிசாதமும், சக்கரை பொங்கலும் சூடா கிடைக்குந்தானே

ஹ ஹ ஹ ஹ ஹா

சாந்தி மாரியப்பன் said...

// சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது//

நல்லாருக்குங்க.

Anonymous said...

நானும் கோயிலுக்கு போனதே பிரசாதத்துக்குதான் :)

Jey said...

//பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.//

கால்ல சூட்டிச்சா மேடம்?.

பிரேமா மகள் said...

Chitra said
//ha,ha,ha,ha,ha.... "உண்மையை" சொல்லி இருக்கீங்க....//

நான் எப்பவும் உண்மையை மட்டுமே தானுங்க பேசுவேன்..

பிரேமா மகள் said...

பிரதீபா said...
//இப்போ கோவிலுக்குப் போறதே..................................... இல்லையா ப்பா?//

லண்டன் முருகன் கோயில் பிரசாதத்துக்கு நான் அடிமை..

பிரேமா மகள் said...

santhanakrishnan said...
மன்னிக்கவும்.
கடவுள் நம்பிக்கை என்பது
மிகவும் ஆழமானது.
நீங்கள் மேலோட்டமாகப்
பார்க்கிறீர்கள் என்று
நினைக்கிறேன்.//

இருக்கலாம்..

பிரேமா மகள் said...

நன்றி அமைதிச்சாரல்

நன்றி சின்ன அம்மினி..

பிரேமா மகள் said...

Jey said...
//பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.

கால்ல சூட்டிச்சா மேடம்?.//


ஆமாம்.. தழும்பு இப்ப வரைக்கும் இருக்கு...

RASSI said...

/கோவிலுக்கு போகாதவர்கள்.. நாத்திகம் பேசுபவர்களும் அல்ல..

சுவாமி பாட்டுக்கு சுவாமி இருக்கட்டும்.. நம்ம நாமதான் பார்க்கனும் என நீங்க சொல்வதும்.. நாத்திகம் கிடையாது.

// விதியின் பாதை..நன்மைகளாக..அமைய வாழ்த்துகிறேன்.

தமிழ் மதுரம் said...

(அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்). //


அதெல்லாம் ஒரு காலம் சகோதரி! பொங்கள், அவல், சுண்டலுக்காகவே கோயிலுக்குப் போன அனுபவம் எனக்கும் இருக்கும்.

தமிழ் மதுரம் said...

உங்களது கருத்துக்களுடன் உடன்படுகிறேன். கடவுள் இருந்தால் உலகத்தில் அநீதிகள் அதிகமாக நடக்காதே?

புதுமையான கருத்துக்களைப் பதிவில் தந்துள்ளீர்கள்.

எதற்கும் துணிந்தவர் போல பதிவிட்டீர்கள். புதுமைப் பெண்கள் என்பது இதனைத் தானோ?

Anonymous said...

பகத்சிங் நியாபகம் வந்தது சுபி.