Friday, January 22, 2010

என் முதல் கதாநாயகி


நமீதாவின் முச்சு காற்று உங்கள் மீது படும் அளவிற்கு, அருகில் நின்றால் உங்களுக்கு எப்படி இருந்திருக்குமோ அந்த உணர்வு எனக்கு துளியும் இல்லை, அவரை முதன் முதலில் சந்திக்கும் போது.
 2007 -வது வருடம், மாதமும் தேதியும் நியாபகம் இல்லை. கோவையில் நடைபெற்ற, அழகிப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தார். மேடை-ஏறும் முன்  அவருக்கு கீழே சீட் போடப்பட்டது. அந்தற்கு பக்கத்து சீட்டில் நான் மட்டுமே. பூட் கட் ஜீன்ஸ், அழகான டி.சர்ட்டுமாய் அவரை இது வரை எந்த தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது.

சுமார் இரவு ஒன்பது மணி இருக்கும். அப்போதும் அவரை சுற்றி கூட்டம் கும்மியடித்தது. எங்கள் இருவரைத் தவிர அங்கிருந்த அத்தனை பெரும் ஆண்கள். நமீதாவை சிரிக்க சொல்லி, பேச சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் எங்கிருந்த வந்தான் ஒருவன்.நமிதாவை கூப்பிட அதை அவர் கவனிக்க வில்லை. சத்தமாய் அதட்ட திரும்பினார் நமி.'' போட்டோ எடுக்கராங்கள்ள? உன் பனியனை இறக்கி விடு, நிமிர்த்து உட்கார்," என்றார் கட்டளையாக, அவரும் உடனே தான் சட்டையை கீழ் இறக்கி விட்டார். அடுத்து விடாமல் அடித்தன கேமராவின் கண்கள்.

ஸ்டேஜ் மேல போன உடனே, ''ஐ லவ் யு சொல்லணும். உதடு குவிச்சு பசங்களை பார்த்து பிளையிங் கிஸ் தரனும். என்ன புரியுதா?"" என்றார். அப்போது நமியின் முகத்த்தில் இருந்த ஏக்கத்தை பார்த்திருந்தால், இன்று அவரின் மச்சான் தமிழை ரசிக்க மாட்டீர்கள் நீங்கள். 

அதற்குள் அவருக்கு செல் போன் பாட்டு பாட, பேச விடாமல் பறித்து கொண்டார் அந்த கட்டளை இட்ட மனிதர்.
அடுத்த அதிர்ச்சி உடனே வந்தது. என் பெயரை சொல்லி அழைத்த, பிரபல ஆங்கில நாளிதழ் போட்டோ கிராபர், என்னிடம் கேமராவை தந்து, நமியை லோ ஆங்கிள் போட்டோ ஒன்றை எடுத்து தர சொன்னார். எதுவே பேசாமல் அவரிடம் கேமராவை தந்து விட்டேன். 'சாரி மா, அப்படி போட்டோ எடுத்தா தான், நாளைக்கு போட்டோ வரும். இல்லாட்டி என்ன போட்டோ-ன்னு ஆபீஸ்-ல கத்துவாங்க. ரீடர்ஸ் அதைத் தான் விரும்பறாங்க "' என்றார் என் முகத்தை பார்க்காமலே.

சில நிமிடங்களில் நமீதா மேடை ஏறி, அதே போல் ஐ.லவ் யு  சொல்ல, பாவமாய் இருந்தது எனக்கு. அதன் பின் குத்து பாட்டுகளால் அரங்கம் கலை கட்ட, மணி 11.

''இதற்கு மேல், இங்க இருக்க வேண்டாம்"என்று சொல்லி என்னை வீட்டிற்கு போக சொன்னார் ராஜேஷ் அண்ணா.(கோவையில் இருக்கும் பிரபல  போடோக்ராபர்).

அன்றில் இருந்து நமியைப் பார்க்கும் போதெல்லாம்(டி.வி-இல்தான் ) பாவமாய் தோன்றும். 'வா, ஒரு டம்ளர் மோர் குடி" என்று அவரின் தலை கோதி ஆறுதல்  சொல்லத்  தோன்றும்.
 (நமிதாவின் பெயரை ஏன் போட்டீங்க, பின்னாளில் அவர் வருத்தப் படுவார், உங்களுக்கும் பிரச்சனை வரும், என்று நீங்கள் சொல்லலாம். அவரின் பெயரைப் போடாவிட்டால் ஏதோ மஞ்சள் பத்திரிகையில் கிசு கிசு எழுதினது போல் தோன்றும். அதனால்தான். நமிதாவின் வருங்கால கணவர் என்னை மன்னிப்பாராக).

5 comments:

Sangkavi said...

பாவம் நமீதா...

வால்பையன் said...

//நமீதாவின் முச்சு காற்று உங்கள் மீது படும் அளவிற்கு, அருகில் நின்றால் உங்களுக்கு எப்படி இருந்திருக்குமோ அந்த உணர்வு எனக்கு துளியும் இல்லை,//

பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் வித்தியாசமில்லையா!?

நாங்களா இருந்திருந்தா நாலு நாளைக்கு பைத்தியம் பிடிச்சி திரிஞ்சிருப்போம்!

வால்பையன் said...

அடடே!

கும்மி அடிக்கலாம்னு பார்த்தா, நமிதா சோக பக்கங்களை சொல்லி எங்களை கவலைகுள்ளாக்கி விட்டிர்களே!

சினிமா நடிகைகளின் வாழ்க்கை இயந்திரதனமானது என கேள்வி பட்டிருக்கிறேன்!

:(

buvan said...

ஐயோ நான் வேற நமித்தாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு தாம்பரம் பக்கத்துல ரெண்டு சென்ட் நிலம் வேற வாங்கி போட்டுட்டேன்.இவங்க கத இவ்வளோ பாவமா இருக்கே....சரி பரவாயில்லை விடுங்க "நாமிதா ஆறுதல் மன்றம்"-னு ஆரம்பிச்சு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்குறேன்....நீங்க நமிதாவ திரும்பவும் பாத்திங்கன என்னோட சார்பா ஆறுதல் சொல்லிடுங்க....அப்படியே பாக்க போகும் போது என்னோட சார்பா ஒரு ஹார்லிக்ஸ் பாட்டால் வாங்கிட்டு போய் கொடுத்துடுங்க....கூட ஒரு டசன் வாழைப்பழமும் ரெண்டு டசன் ஆப்பிள் வாங்கிட்டு போனாலும் எனக்கு சம்மதம் தான்....நம்ம நமிதா தானே பாவம் சாப்டுட்டு போட்டம்....

rohinisiva said...

பல சிரிப்பிலும் சோகமும்,சில கண்ணீரில் சந்தோசமும் உண்டு !