Saturday, February 13, 2010

ரயிலும் 'கூ க் கூ" என்று தான் கூவும்.

ரயில் பயணத்தில்
என் முகம் அறையும்
காற்றின் திசையில்
நீ கலந்திருக்கிறாய்!
என் பொழுதுகள்
மூர்ச்சை ஆகின்றன!


 சொல்லவும்
பகிரவும் முடியாத
பல காதல்களை
தனக்குள்
சுமந்து செல்கிறது
தண்டவாளத்தில்
இணை பிரியாத ரயில்.
இருப்பினும்
இன்னும் பாஞ்சாலி
எழுதுகிறாள்
''மாமா உன்னை பார்க்கணும்"


பயணம் முடிந்ததும்
உன் கையில் இருந்த
பயணச்சீட்டு கிழிக்கப்பட்டது.
என் அறையில்
ஒரு பொக்கிஷம் சேர்ந்தது!
காதலும் பிறந்தது!


என் காதல்
எப்போதும்
பயணத்தில் முடிவிலேயே
பறைசாற்றப்படுகின்றன!
கை குலுக்கி
விடை பெற்ற பிறகு!


என்னைத்
தாண்டி செல்கிறது
சமயங்களில்
என்னைத் தவிர்த்து செல்கிறது
நான் பயணம்
செல்ல வேண்டிய
ரயில் வண்டி!
உன்னைப் போல!

4 comments:

க.பாலாசி said...

//காற்றின் திசையில்
நீ கலந்திருக்கிறாய்!
என் பொழுதுகள்
மூர்ச்சை ஆகின்றன!//

அவன் பொழுதுகள்....????????????(யாரு பெத்த புள்ளையோ??? கஷ்டம்தான்)

//இருப்பினும்
இன்னும் பாஞ்சாலி
எழுதுகிறாள்
''மாமா உன்னை பார்க்கணும்"//

அய்யோ...பாவம்...அந்த மாமா.....

//என் அறையில்
ஒரு பொக்கிஷம் சேர்ந்தது!//

குப்பைன்னு சொல்லுங்க...

//நான் பயணம்
செல்ல வேண்டிய
ரயில் வண்டி!
உன்னைப் போல!//

நல்லவேளை அந்த வண்டி தப்பிச்சுடுச்சு...அவனைப்போல....

ரொம்ப ஃபீலிங்கா இருக்கே...

buvan said...

//என்னைத்
தாண்டி செல்கிறது
சமயங்களில்
என்னைத் தவிர்த்து செல்கிறது
நான் பயணம்
செல்ல வேண்டிய
ரயில் வண்டி!
உன்னைப் போல! //


சந்தோஷ படுங்க ....பல பேர ஏத்தி கொன்னுட்டு போயிருக்கே அந்த ரயில்....அதுக்கு இது எவ்வளவோ பரவைல்லையே......

ரோகிணிசிவா said...

நான் போகின்ற வழியெல்லாம் உன் பூ முகம் காண்கின்றேன்!
-அற்புதமான வெளிப்பாடு,சொல்லாத காதல் எப்பொழுதுமே காவியம் தான் -இதை போல !

r.v.saravanan said...

என் காதல்
எப்போதும்
பயணத்தில் முடிவிலேயே
பறைசாற்றப்படுகின்றன!
கை குலுக்கி
விடை பெற்ற பிறகு!

good words