Friday, March 12, 2010

ஏமாற்றுக்கார கடவுள்..

பொழுது ஒன்று
போகா நேரத்தில்
இமையிரண்டும் மூடி
இருகை கோர்த்த‌
ஒரு அசாதாரண நேரத்தில்
வரம் தர வந்தான்
கடவுள் என்பவன்..


கூப்பிய கைகளுக்கு
பரிசு தருவது
அவன் பரம்பரை
பழக்கமாம்!
இஷ்டமானது
கூறு‍ என்றதில்
பட்டியலிட்டது மனது!

ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..

அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா!
என்றேன் கடவுளிடம்!

உடனே அனுப்பி வைத்தான்
கணவன் என்றோருவனை!
 

எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்‍க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும் 
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த  மோசடி!
 

26 comments:

ஈரோடு கதிர் said...

முப்பது பவுனு... அஞ்சு லட்சமா

காம்பினேஷன் சரியில்லையே

பிரேமா மகள் said...

கூட்டி கழிச்சு பாருங்க.. அங்கிள்... எல்லாம் சரியாய் வரும்..

settaikkaran said...

ஹூம்! சில பேருக்கு முப்பது பவுனு, அஞ்சு லட்சம் கிடைக்குது! சில பேரு ஒண்ணுமே வேண்டாமுன்னாலும் "ஆசாமி கிட்டே ஏதோ வெவகாரம் இருக்கு, வேண்டாம்,"னு ஒதுக்கிப்புடறாய்ங்க! என்ன தான் செய்வாக ஆம்புளைகளும்...?

Ashok D said...

30 பவுன் 50 லட்சம்... ம்ஹும் .. எட்டாத கணி ;(

அண்ணாமலையான் said...

வந்தது கடவுளா காமெடி பீசா?

அகல்விளக்கு said...

//எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்‍க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும்
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த மோசடி!//

ஹாஹாஹாஹாஹா...
அம்புட்டு கொடுத்தீங்களா.......

DHANS said...

எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்‍க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும்
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த மோசடி!

அந்த பைக்க விட்டுடீங்க?

DHANS said...
This comment has been removed by the author.
DHANS said...

ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..

அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா

இதையெல்லாம் செய்தா அவனுக்கு பெயர் டம்மி பீசா?

இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை, மேற்கூறிய எல்லாம் செய்யும் ஆள் வேண்டும் ஆனால் அவன் டம்மி பீசு உங்களுக்கு?

வரதட்சணை வாங்கும் பழக்கத்தை நானும் எதிர்க்கிறேன் ஆனால் அதற்காக உங்கள் தேவைக்கு தேடிய ஒருவரை டம்மி பீசு என்று கூறியதற்காக என் கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.
ஒரு இனம்புரியா காரணம் என்னை இந்த கவிதைக்கு எதிர்ப்பு சொல்ல வைக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

கடைசில சொன்னீங்களே காமெடி கலந்த ஒரு பன்ச்....... நல்லா இருக்கு.

பனித்துளி சங்கர் said...

இதுதான் கூப்பிட்டு வைத்தது குமுருவதோ . நல்ல இருக்கு அம்முனி !!

பிரேமா மகள் said...

சேட்டைக்காரன் said..

// என்ன‌தான் செய்வாக ஆம்புளைகளும்...?//


செவ்வாய் கிரகத்தில் நிறைய பொண்ணுங்க இருக்காங்களாம்.. டிரை பண்ணி பாருங்களேன்..

பிரேமா மகள் said...

அண்ணாமலையான் said...

//வந்தது கடவுளா காமெடி பீசா?//

அதானே.. ஒருவேளை கடவுளே, காமெடி பீஸ் ஆகிட்டாரோ?

பிரேமா மகள் said...

DHANS said...

//அந்த பைக்க விட்டுடீங்க?//

நல்ல வேளை ஏரோபிளேன் கேக்கலையேன்னு சந்தோஷப்படுங்க...

//இதையெல்லாம் செய்தா அவனுக்கு பெயர் டம்மி பீசா?//

அதையெல்லாம் செய்வதால் அவனுக்கு டம்மி பீஸ் என்று பெயர் இல்லை...


வரதட்சனை.... வாங்கிக் கொண்டு தாலி கட்டுவதால்தான் அவனுக்கு டம்மி பீஸ் என்று பெயர்...

பிரேமா மகள் said...

நன்றி அசோக்...

நன்றி அகல்விளக்கு

நன்றி சைவ கொத்துபரோட்டா..

நன்றி அந்நியன்....

Unknown said...

//.. முப்பது பவுனும்
ஐந்து லட்சமும்
கட்டணமாய் வாங்கியதுதான் ..//

விலையுயர்ந்த பொம்மைதான்.. :-)

க.பாலாசி said...

வரம்!! ஈஸியா கெடச்சிடுமாயென்ன ???

F.Y.I
//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...//

Anonymous said...

யம்மா, இந்த காலத்துல நெறைய ஆம்புளைகளும் பாதிக்க பட்டு இருக்காகனு தெரியுமாமா?
ஓங்க குடுமபத்துல யாராவது ஆம்பள பசங்க வரதச்சன வாங்கினா ஒடனே நீ அத தடுத்து, அவனுகள நாலு சாத்து சாத்தி, மொதல ஒங்க குடுமபத்த ஒரு 'மாடல்' குடும்பமா ஆக்கி காட்டும்மா! அத்த விடுமா, ஒங்க அண்ணமாரு தம்பிமாருகெல்லாம் ஒங்க அப்பாரு செலவுலேயே கல்யாணம் பண்ணி, ஒங்க வீட்டுக்கு வர பொண்ணுக்கு நக நட்டு போட்டு அழகு பாருங்கமா!

ஏன், நீயே சொல்ல வேண்டியது தானே? என்னைக்கு ஒருத்தன் வரதச்சன வாங்காம என்னைய கல்யாணம் பண்ணிகிறானோ, அன்னைக்கு தான் எனக்கு கல்யானமுன்னு!

பிரேமா மகள் said...

Anonymous said...

//ஒங்க அண்ணமாரு தம்பிமாருகெல்லாம் ஒங்க அப்பாரு செலவுலேயே கல்யாணம் பண்ணி, ஒங்க வீட்டுக்கு வர பொண்ணுக்கு நக நட்டு போட்டு அழகு பாருங்கமா''//

கண்டிப்பாக செய்கிறேன்... உங்கள் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி....

ஆடுமாடு said...

டம்மி பீஸ்ங்கறது கொஞ்சம் ஓவர்தான்.

DG said...

கணவன்= டம்மி பீஸ்‍?????????

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை, அதிலும் அந்தக் கடைசி வரிகள் இருக்கே. அதுதான் ஜீவனே. சரி வரதட்சனை வாங்காமல் கல்யாணம் பண்றேன். ஆனா பொண்ணு எங்க கிடைக்கிறாங்க. என்னது படிச்ச மாப்பிள்ளை,கை நிறைய சம்பாதிக்கின்றான்,ஆனா வரதட்சனை வேண்டாமா? எதாது வில்லங்கம் இருக்கும்னு ஓடிப் போயிடுறாங்க. இருந்தாலும் நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க.

வால்பையன் said...

செஞ்ச வேலைக்கு கூலி வாங்கியிருக்காரு கடவுள்!
இதையெல்லாம் உங்களை யாரு கடவுள்கிட்ட கேக்க சொன்னது!?

Shivakumar said...

NALLA KAVIDHAI STILL ADHIL ORU VAKRAM THERIKIRADHU.. !

மெல்லினமே மெல்லினமே said...

Neenga puratchi thalaiviyo?

r.v.saravanan said...

கணவன் என்பவனை டம்மி பீஸ்

என்றாலும்

கவிதை வரிகள் அருமை

வாழ்த்துக்கள்