Tuesday, March 16, 2010

ஸ்டாலினுடன் நேருக்கு நேர்..

சென்னையில் புதிய சட்டசபை கட்டிட வளாகம் திறந்துவைக்கப்பட்டது...
செய்தி..

அதான் ஊரில எல்லா பத்திரிக்கையும், எழுதி துவைச்சு தொங்க விட்டாச்சே, நீ புதுசா என்ன சொல்ல வந்திட்ட? என்று நீங்கள் கேட்க்கலாம். சட்டசபை திறந்தது மேட்டர் இல்லை.. அதனால் மவுண்ட் ரோட்டில் ஏற்படும் டிராபிக்தான் இங்கே அலசல், அவியல், கொத்துபுரோட்டா எல்லாமே!

மாண்புமிகு கலைஞர் அங்கிள் (அதாகப்பட்டது கல்யாணம் ஆன ஆண்களை அங்கிள் என்று மட்டுமே  அழைக்கவேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்.. அப்படித்தான் எங்களுக்கு தெரிந்த நபர்களையும் அழைப்பது... அது எம்.டி ஆகட்டும் பியூன் ஆகட்டும்,. அந்த வரிசையில் கருணாநிதியும் அங்கிள் ஆகிவிட்டார்.) ஆபீஸ் போக வேண்டுமானால் அதாவது சட்ட சபைக்கு போக வேண்டுமானால், கோபாலபுரத்தில் இருந்து லாயிட்ஸ் ரோடு வந்து மவுண்ட் ரோட்டைத் தொட்டு, (அதாவது ஜெமினி பிரிட்ஜ்‍க்கு அருகில் வந்து கட் அடிப்பார்) அதே வழியில் சட்ட சபைக்குச் செல்வார்.. அந்த வழியாகவே திரும்பி வருவார்... இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.. பாவம் அங்கிள் இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்.. அதை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

ஆனால் அவர் போலவே பலருக்கும் மவுண்ட் ரோட்டில் ஆபீஸ் இருக்கும். அவர்களும் நேரத்திற்கு போய் சேர வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார் என்பதுதான் வருத்தம்.. காரணம் மவுன்ட் ரோட்டில் ஆபீஸ் இருப்பவர்களுள் நானும் ஒருத்தி..

அங்கிள்‍ ஏற்கனவே கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவுக்கு வரும் போதும் இதே வழியில்தான் வருவார்.. அப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படும். அதுவும் ஜெமினி மேம்பால இறங்கத்தில் வண்டிகளை நிறுத்தி விடுவார்கள்... பாலம் முழுக்க காரும் டூவிலருமாய் நிக்கும். இதில் சில சைக்கிள் ஆசாமிகள், இடையே புகுந்து இடித்து சைக்கிளை தூக்கிக் கொண்டு முன் செல்ல முனைவார்கள். உறுமிக் கொண்டிருக்கும் வாகன கூட்டம்.. முன்னே செல்லவும் முடியாமல், பின் செல்லவும் முடியாமல் மேம்பாலத்தில் அடிக்கடி மாட்டிக் கொண்டு தவிக்கும் சென்னை வாசிகள் அதிகம்..
(இப்போ துணை முதல்வர் வேற இருக்காறா? இனி அவருக்கும் சேர்த்து, தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டம் கணக்கா, ரோட்டில் நிக்கணும்..)

புதிய சட்ட சபை, திறப்புவிழா அன்னிக்கு சென்னையில் உள்ள குழந்தைகள் சந்தோசமா இருந்ததா கேள்வி.. அட ஆமாங்க.. இவங்க பாட்டுக்கு நாலு மணிக்கு மேல பாதி பஸ் ஓடாதுன்னு அறிவிச்சிட்டாங்க.. உண்மையில பாதி பஸ்கள் மூணு மணிக்கே ஓடல.. அந்த பயத்தில எல்லா ஆபீஸ்க்கும் மதியத்தோட லீவ் விட்டிட்டாங்க.. அம்மா அப்பாவும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட, புள்ளைங்கல்லாம் சந்தோஷமா ஸ்நாக்ஸ் தின்னுக்கிட்டு அவங்க கூட ஐ.பி.எல் பார்க்க உட்கார்ந்திடுச்சுங்க..ஆக அதுங்க மட்டும் கருணாநிதி அங்கிள்‍க்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கும்.

இனியும்  இந்த தொந்தரவு தொடரும் பாவம் அதுங்களுக்கு தெரியல...ஆமாங்க... ஒரு நாள் சோனியாவும் சர்தார்ஜியும் சாரி மன்மோகன் சிங்‍கும் சென்னை வந்ததுக்கே, அல்லோகப்பட்டது சென்னை.. இனி எந்த வி.ஐ.பி சட்ட சபைக்கு வந்தாலும் மவுண்ட் ரோடு வழியாகத்தான் வருவாங்க.. நாங்களும் நடு ரோட்டில் நிப்போம்... ஒரு வேளை பொதுமக்களை நடு ரோட்டில் நிக்க வைக்கிறதுதான் அவங்க நோக்கமா?

சரிங்க.. இதே மாதிரி டிராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க... அப்போ மந்திரியே போலீஸை கூப்பிட்டு, உங்க பேரைச் சொல்லி.. அவங்க போகட்டும்,‍நாம அப்புறமா போகலாம்‍ன்னு சொல்றார்.. போலீஸீம் உடனே உங்க வண்டிக்கு வழி ஏற்பாடு செய்யறாங்க.. அப்படியே குலுமணாலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி குலுகுலு‍ன்னு இருக்குமே? அப்படி இல்லை என்றாலும் அது போன்ற மனநிலையில் இருந்தேன் நான்...

சம்பவ இடம்: சென்னை அறிவாலயம்..
தேதி: நியாபகம் இல்லை...
நேரம்: அநேகமாக மாலை நாலு மணி..

இனி கதைக்களம்....

அப்போது அறிவாலயத்தில் சன்.டிவி இருந்தது.. அதில் என் பேட்ச்மெட் கோபி கேமராமேனாக வேலை செய்து கொண்டிருந்தான்.. அவனைப் பார்ப்பதற்காக என் டூவீலரின் சென்று இருந்தேன்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ''உள்ளே" ''வெளியே'' அம்புக்குறிகளை மதிக்க மாட்டேன்.. வெளியே என்று எழுதி இருக்கும் வழியே உள்ளே சென்று,  உள்ளே செல்லும் வழியில் வெளியே வருவேன்.. எல்லாம் என் ஐ.டி கார்டு தரும் தைரியம்..

அப்படி ஒருநாள் என் பேட்ச்மெட்டை பார்த்துவிட்டு வெளிவரும் போது, ''மேடம் வெயிட்" என்று ஏதோ கத்துகிறான் நேபாளி கூர்க்கா.. எனக்கு இந்தி தெரியாததால் அந்த கூர்க்கா‍வின் வார்த்தைகள் புரியாமல் வேகமாக வந்து கொண்டிருந்தேன்... பின்னாடியே அவரும் துரத்திக் கொண்டு வந்தவர் வேகமாக கத்துவதற்கும், நான் சடன் பிரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது..
காரணம் நான் அங்கு 'உள்ளே' வழியாக வந்த பிரமாண்ட வண்டியினை இடிப்பதற்கு சில அடிகள்தான் வித்தியாசம் இருந்தன... அது வரைக்கும் என் பின்னாடி வந்த கூர்க்கா அமைதியாக, நானும் காரில் இருந்தவரிடம் திட்டு வாங்கும் எண்ணத்துடன்  பார்த்தேன்...


திரில் கதைகளில் வருவது போல, சொல்ல வேண்டுமென்றால், என்ன ஆச்சரியம்... அந்த காரில் இருந்தவர் ஸ்டாலின்.. துணை முதல்வர்...
என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் என் உடம்பு பதறிவிட்டது. காரணம் தப்பு என் மேல்...


அதிர்ச்சியில் அப்படியே என் டூவிலரில் உட்கார்ந்திரூந்தேன்.. அந்த காரின் டிரைவரும் அப்படியே என்னைப் பார்க்கிறார்.. ஸ்டாலின்தான் உடனே  சுதாரித்து அந்த காரை பின்நோக்கி எடுக்கச் சொன்னார்.. கார் பின்செல்ல நான் முன்சென்றேன்... எனக்கு சிரித்துக் கொண்டே வழிவிட்டார் அவர்... ஆனால் எனக்குத்தான் பயத்தில் எதுவும் தோன்றவில்லை.. அறிவாலயத்தை விட்டு வெளியே வந்ததும், என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது...

இன்று வரை டிராபிக்கில் எதாவது வி.ஐ.பி‍க்காக காத்திருக்கும் போது இந்த நியாபகம் வந்து போகும்..

ஆக இதில் நான் சொல்ல வருவது, துணை முதல்வர் ஸ்டாலினே எனக்கு வழி விட்டு ஒதுங்கிப் போகிறார்.. என் அருமை, பெருமை தெரிஞ்சு.... அதனால ஆனாளப்பட்ட பொது மக்களே கவனமாக இருங்க......

அது!.... அந்த பயம்!....இருக்கட்டும்...

30 comments:

க.பாலாசி said...

//எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்..//

இளம்பெண்கள் மட்டும்தானே... உங்களுக்கு என்ன பாட்டி....

க.பாலாசி said...

ஓ....தாத்தாவே அங்கிளா... பாட்டி சொன்னா கரைட்டாத்தான் இருக்கும்...

வயசானவங்களுக்கு வழிவிடனும்னு நல்லமனசு உள்ளவங்களுக்கு தெரியும்... ஸ்டாலினுக்கு ரொம்ம்ம்ப நல்ல மனசுன்னு நினைக்கிறேன்...

பிரேமா மகள் said...

பாலாசி‍‍‍‍...........

ஒரு குட்டி பாப்பாவை, பாட்டி‍ன்னு சொல்றீங்க...

அண்ணன் என்றும் பார்க்காமல் உங்களுக்கு சாபம் விடறேன்...ஆயுசுக்கும் உங்களுக்கு கல்யாணம் ஆக கூடாது...... இப்படியே பிளாக்கில் காலம் தள்ளுங்க...

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
பாலாசி‍‍‍‍...........
ஒரு குட்டி பாப்பாவை, பாட்டி‍ன்னு சொல்றீங்க...//

என்னாது குட்டிப்பாப்பாவா...எனக்கு நீங்க சாபம் விட்டதுகூட பெரிசா தெரியல.... ஆனா.....அவ்வ்வ்வ்வ்வ்........

வால்பையன் said...

கொசு தொல்லை தாங்க முடியலப்பா!









என்று என் நண்பன் சென்னையில் இருந்து போன் பண்ணி சொன்னான்!

இளங்கோ said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

பிரேமா மகள் said...

வால்பையன் said...

//கொசு தொல்லை தாங்க முடியலப்பா!என்று என் நண்பன் சென்னையில் இருந்து போன் பண்ணி சொன்னான்!//


நல்ல மருந்தா, வாங்கி ரூம்‍‍ல அடிக்க சொல்லுங்க..... பார்த்து,,, உங்க பிரெண்ட் மயங்கி விழுந்திட போடறார்.....

Unknown said...

எப்படியோ ஸ்டாலின் நல்லவருன்னு போட்டு ஒடச்சிட்டிங்க.
அன்புடன்
சந்துரு

வால்பையன் said...

//நல்ல மருந்தா, வாங்கி ரூம்‍‍ல அடிக்க சொல்லுங்க..... பார்த்து,,, உங்க பிரெண்ட் மயங்கி விழுந்திட போடறார்..... //


அதான் ஸ்டாலினே பயந்து பின் வாங்கிட்டாரே! என் நண்பனுக்கு வேற தனியா சொல்லனுமாக்கும்!

settaikkaran said...

இந்த தடவை பிரதமர், சோனியா காந்தி வந்ததுனாலே தான் இவ்வளவு அமளி பண்ணிட்டாங்க! நல்ல வேளை, அண்மையிலே நடந்த விழாக்களில் இது தான் ஒரு அரசு விழாவுக்குண்டான கவுரவத்தோட நடந்ததுன்னு பேசிக்கிறாங்க! அப்புறம், துணை முதல்வர் பத்தி எழுதியிருக்கீங்க! நோ கமெண்ட்ஸ்! :-)))))))))

*இயற்கை ராஜி* said...

kalayam ana ponnunga aunty ya?:-)

வால்பையன் said...

//இய‌ற்கை said...

kalayam ana ponnunga aunty ya?:-)//


கணவனை ”ஆண்டி”யாக்குறவங்களுக்கு அந்த பெயர் தான்!

தாராபுரத்தான் said...

ரொம்ப தைரியமான பொண்ணுத்தானம்மா நீ.

Anonymous said...

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவள்----அப்டின்னா என்னாங்க

sathishsangkavi.blogspot.com said...

//அது!.... அந்த பயம்!....இருக்கட்டும்... //

யாருக்குங்க...

தமிழ் உதயம் said...

வருங்காலத்தில், நீங்க ட்ராபிக் ஜாம்ல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்றேன். எப்படியாவது சி.எம் ஆயிடுங்க.

Romeoboy said...

இதுவே அதிமுக கட்டடத்துல போய் பாருங்க உங்கள அலேக்க பார்சல் பண்ணிடுவாங்க.

Admin said...

ஒரு வேளை பொதுமக்களை நடு ரோட்டில் நிக்க வைக்கிறதுதான் அவங்க நோக்கமா?

இந்த நிஜத்தை உணரா மக்கள் தான் இன்று அதிகம்...

DHANS said...

துணை முதல்வர் ஸ்டாலினே எனக்கு வழி விட்டு ஒதுங்கிப் போகிறார்

FOR ME ALSO,IN OMR ROAD, BUT I DIDNT GAVE HIM THE WAY :) HOWVER HE WAITED FOR A MINUTE AND PASSED MY CAR

பிரேமா மகள் said...

தாமோதர் சந்துரு said...

//எப்படியோ ஸ்டாலின் நல்லவருன்னு போட்டு ஒடச்சிட்டிங்க.//



ஸ்டாலின் நல்லவருன்னு நான் சொல்லவில்லை... எனக்கு வழிவிட்டாருங்க.. அவ்வளவுதான்.. மற்றபடி அவரைப் பற்றி எனக்கு தெரியாது..

பிரேமா மகள் said...

இய‌ற்கை said...

kalayam ana ponnunga aunty ya?:-

இல்லவே இல்லை.... கல்யாணம் ஆனாலும் அவங்க குட்டிப் பொண்னுங்கதான்...

பிரேமா மகள் said...

Anonymous said...

//பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவள்----அப்டின்னா என்னாங்க//

மனிதர்கள் மீது அளவிட முடியாத அபரித அன்பும், அவர்கள் வசிக்கின்ற இந்த சமுதாயத்தின் மீது கட்டுப்படுத்தாத கோபமும் கொண்டிருக்கிறேன்..

பிரேமா மகள் said...

Sangkavi said...

//அது!.... அந்த பயம்!....இருக்கட்டும்... //

யாருக்குங்க...

//சத்தியமா உங்களை இல்லை.. சங்கவி.../

பிரேமா மகள் said...

~Romeo~~ said...

இதுவே அதிமுக கட்டடத்துல போய் பாருங்க உங்கள அலேக்க பார்சல் பண்ணிடுவாங்க.

என்னையேவா? சான்ஸே இல்லை... ஏன்னா.. ஏன்னா, ஏன்னா.. விடுங்க என் பெருமையை நானே சொல்லக் கூடாது....

பிரேமா மகள் said...

தமிழ் உதயம் said...

//வருங்காலத்தில், நீங்க ட்ராபிக் ஜாம்ல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்றேன். எப்படியாவது சி.எம் ஆயிடுங்க.//

கண்டிப்பா... எம்.ஏல்.ஏ சீட்டு உங்களுக்கு உண்டு பாஸ்....

பிரேமா மகள் said...

நன்றி இளங்கோ....

நன்றி சேட்டைக்காரன்..

நன்றி தாராபுரத்தான்...

நன்றி தன்ஸ்..

நன்றி சக்திவேல்..

ரோகிணிசிவா said...

"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் "-Stalin proves it ,
interstingly written , good job dear !

அன்புடன் மலிக்கா said...

நல்லா கலக்குறீங்க.பின்னூட்டமும் பதிவும் அருமை

Anonymous said...

//ஸ்டாலின் நல்லவருன்னு நான் சொல்லவில்லை... எனக்கு வழிவிட்டாருங்க.. அவ்வளவுதான்.. மற்றபடி அவரைப் பற்றி எனக்கு தெரியாது..//

உங்களுக்கே வழிவிட்டாருன்னா அவரு ரொம்ம்ம்ப நல்லவராதான் இருக்கனும்.

இங்கே ஒரு யானையும் வேறோன்றும் பாலத்தில் நேருக்கு நேர் வந்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது :)

(சும்மா கலாய்ச்சேன்.. கோபம் வேண்டாம் சகோதரி)

r.v.saravanan said...

மாண்புமிகு கலைஞர் அங்கிள் (அதாகப்பட்டது கல்யாணம் ஆன ஆண்களை அங்கிள் என்று மட்டுமே அழைக்கவேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்..

ஆகா ஒரு குரூப் பா தான் அலையறாங்க