தனிமை சாத்தான் என் எதிர் நின்றது.
தாகம் தணிக்க என் கனவுகள் கேட்டது.
தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை..
தலை முடி கோதிய கணங்கள் எத்தனை..
உறுபசியோடு விரல்கள் கோர்த்து
உலகினை மறந்த பொழுதுகள் எத்தனை..
கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை.....
பகல் வெளியெங்கும் பசியினை மறந்து
தேடித் களைத்த தினங்கள் எத்தனை...
வெட்க சிறகுகள் விரித்துப் பறந்து
முத்தச்சத்தம் மொத்தம் எத்தனை....
அச்சம் துளிர்த்திட ஆரத்தழுவி
சொர்க்கம் கண்ட சுகங்கள் எத்தனை...
எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது...
21 comments:
//எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது... //
அழகான ஆழமான வரிகள்....
தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை ??..தனிமை சாத்தான்
ஹி ஹி ஹி .. சுத்தம்,,,,
கற்பனை வளம் அருமை அருமை..
அழகான கவிதை! வார்த்தைகளை அருமையாகக் கோர்த்திருக்கிறீர்கள்.
உங்கள் கவிதையின் வீச்சு அழகாய் இருக்கிறது. படங்கள் அதைவிட அழகாய் சொல்கிறது..
அடுத்த மாசம் போறீங்கள்ல...
நைஸ்..... (வேறவழி...)
This kavithai reminds me
tag line of the movie
"SAMSASARA by PAN NALIN",
"What is more important: satisfying one thousand desires or conquering just one… "
amazing thoughts in awesome words !!!
/////பகல் வெளியெங்கும் பசியினை மறந்து
தேடித் களைத்த தினங்கள் எத்தனை...
வெட்க சிறகுகள் விரித்துப் பறந்து
முத்தச்சத்தம் மொத்தம் எத்தனை....////////
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் !
கேக்க மறந்துட்டேன் .
மொத்தம் எத்தனை மறக்கமல் சொல்லிடுங்க !
///////தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை ??..தனிமை சாத்தான் //////
அம்முனி அந்த சாத்தான் யாருங்கோ ??????????????????????
////////கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை...../////////
உண்மையான உணர்வுகளை நேர்த்தியான எழுத்து நடையில் கசியவிட்டு இருக்கும் விதம் அற்புதம் .
இன்னும் தொடருங்கள் . வாழ்த்துக்கள் !
//////எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது...//////
அட பாவமே !
பாவம் நீங்க .
கொஞ்சம் லஞ்சம் கொடுத்து பார்த்திருக்கலாமே ?????
அருமையாக இருக்கு.
//..~~Romeo~~ said...
ஹி ஹி ஹி .. சுத்தம்,,,, ..//
அதேதான்.. :-))
ஐ லைக் சாத்தான்!
கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை.....
அருமை வரிகள்....
வாழ்த்துக்கள்
"இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!"
நல்ல எதிர்காலம் இருக்கு...........
தங்களை பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.முடிந்தால் கருத்து சொல்லவும்.
//எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது... //
////
அருமை
நன்றி சங்கவி...
நன்றி பிரின்ஸ் ராஜன்..
நன்றி ரெமோ..
நன்றி மைத்தீஸ்..
நன்றி சேட்டைக்காரன்..
நன்றி கண்ணகி..
நன்றி பாலாசி..
நன்றி ரோகிணிசிவா..
நன்றி பனித்துளி சங்கர்..
நன்றி அக்பர்..
நன்றி திருஞானசம்பத்..
நன்றி வால்பையன்..
நன்றி சரவணன்..
நன்றி நித்தியானந்தம்..
நன்றி ப்ரியமுடன் பிரபு..
Post a Comment