Saturday, April 3, 2010

பெண் பார்த்த கதை..

தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் பரவசம் இருக்கும்.. சிறுவயது முதல் அதன் மீதான ஏக்கங்களும் உண்டு.. என் வாழ்விலும் அது போன்ற சம்பவங்கள் நடக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்..


முக்கியமாக பெண் பார்க்கும் படலம்.. ''அதெப்படி ஒரு பெண்ணை காட்சி பொருளாக்கி அவளை காப்பி கொண்டு வரச் சொல்லலாம்.. அவள் என்ன சந்தைப் பொருளா? நாலு பேர் பார்த்து பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்ல? ''என்றெல்லாம் பன்னிரெண்டாவது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கியிருக்கிறேன்.. ஆனால் மனதுக்குள், என்னை பெண் பார்க்க வரும் சம்பவம்  குறித்த ஆயிரம் கனவுகள் இருந்தது..

சினிமாவை தவிர்த்து, பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்தது இல்லை.. அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.. அந்த சமயத்தில் எப்படி பேச வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளானே இருந்தது..

என்னைப் பார்த்தவுடனே அவருக்கு பிடிக்குமா? உடனே சம்மதம் சொல்வாரா? கல்யாணத்துக்கு இடைப்பட்ட நாளில் எப்படி இருக்கும்? முதன் முதலில் என்ன பேசுவது? என் பெயரை எப்படி செல்லமாய் அழைப்பார் என்று நித்தமும் கனவுகள் சுமந்த பதின் பருவம் எனக்கு பொற்காலங்கள்..

காலங்களும் காட்சிகளும் மாறின.. என்னைப் பெண் பார்க்கும் படமும் ஆரம்பித்தது.. இதுவரை என்னை ஐந்து பேர் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்..
ஆனால் நான் கட்டைவிரல் கோலம் போட்டதில்லை.. காபி சுடும் என்று சொன்னதில்லை.. ஜன்னல் வழியே அவன் சுருள் கேசத்தை ரசித்ததில்லை.. கிளம்பும் போது புன்னகையை பரிசாக பெற்றதில்லை..

இன்னும்  விரிவாக சொன்னால் அப்படி பெண் பார்க்கும் படலம் எனக்கு நிகழ்ந்ததில்லை... ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..


''அப்போது நான் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி.. விடுமுறை சமயம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.. சின்னதாக சலசலப்பும் அதற்கு காரணம் நான் எனவும் என் வீட்டாரின் வார்த்தைகளில் புரிந்து போனது..

மனதுக்குள் குருகுருப்பு எட்டிப் பார்க்க, கடைசியில் என் அத்தையின் மூலமாக விசயம் வெளிவந்தது.. அதாவது ஒரு டாக்டர் என்னை பெண் கேட்டு வந்திருக்கிறார்... எனக்கு திருமண வயது வரவில்லை என்று சொல்லி, அவர்களே அனுப்பி விட்டார்கள்... அது தெரிந்த நிமிடம் முதல் என்  மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷம்..

பின்னே.. என்னைப் பொறுத்தவரை விவசாயியும், மருத்துவரும்தான் தான் எனக்கு ரோல் மாடல்கள்.. அப்படி ஒரு டாக்டரே என்னை திருமணம் செய்து கொள்ள முன் வந்தது தெரிந்தும் தலைகால் புரியாமல், கட்டை விரலில் கோலம் போட்டு புது வெட்கத்துடனே அலைந்தேன்.. அவர் பெயர் என்ன தெரிந்து கொள்ள மனதுக்குள் ஆர்வம் தோன்ற.. விசாரித்ததில்.. அவர் என் தாத்தாவுக்கு மிகவும் பழக்கமானவர் என்று தெரிந்ததுமே ஜெர்க்கானது..
காரணம் ஹாஸ்பிட்டல் போகவே விருப்பம் இல்லாத தாத்தாவுக்கு எப்படி டாக்டரை தெரியும்? என் கேள்விக்கு ரெண்டே நாளில் விடை கிடைத்தது.. எங்க தாத்தா வீட்டில் இருக்கும் எருமைக்கு உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..

அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது. அதில் இருந்து நான் எதாவது குறும்பு செய்தால், மாட்டு டாக்டருக்கு கட்டி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவார்கள்..

மனது தேற்றி வந்ததில்,, அடுத்த முறை மாரியம்மன் திருவிழாவிற்கு ஊர்க்கு வந்திருந்தேன்.. அதற்கு முதல் நாள்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் அரவிந்த் என்னும் வழக்கறிஞர் என்னை பெண் கேட்டு சென்றிருக்கிறார்.. படிப்பு முடியட்டும் என்று எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்..

அட.. அதை அவர்களே முடிவு செய்தால் எப்படி? என்னிடம் ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா? இத்தனைக்கும் அந்த மாப்பிள்ளை என் போன் நெம்பர் கேட்டிருக்கிறார். ஆனால் என் லூசு குடும்பம்  (இது எங்க பேமிலியின் பெட் நேம்) எதும் சொல்லாமல் அந்த ஆளை துரத்திவிட்டிருக்கிறது.. எனக்கு அழுகையாக வந்துவிட்டது.. பாவிங்களா... நான் வெட்கப்பட்டு நடந்து வர்றதுக்கு ஒரு சான்ஸ் குடுங்கன்னா விட மாட்டிங்கறாங்களே?
சரி.. இன்னோரு சந்தர்ப்பம் வரும் என்று நானும் காத்திருந்தேன்..

கடவுள் ரொம்ப நல்லவருங்க;..நான் சிக்சர் அடிக்க இன்னோரு பாலும் போட்டார். பட் வழக்கம் போல என் குடும்பம் பேட் பிடிக்காமல் தடுக்க விட்டுவிட்டது,, இந்த முறையும் லாயர்தான்.. அதுவும் எங்க சொந்தக்காரர்தான்.. கல்யாணத்துக்கு பிறகு என்னை தொடர்ந்து படிக்க வைப்பதாக சொல்ல எல்லோரும் அவரை பிடித்திருக்கிறது..

அதே சமயம் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் எந்த சீர்வரிசையும் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் ஏகத்துக்கும் பேச, உஷாரான என் குடும்பம் உணமையாகவே ஒரு போலீஸ் வைத்து அவரைப் பற் றி விசாரித்திருக்கிறது.. கடைசியில் வெளிப்பட்டது குட்டு..

அவனுக்கு ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் ஆகியிருக்கிறது.. அந்த பெண் வெளியூர் சென்ற சமயம் பார்த்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.. உண்மை  தெரிந்தும் அவன் வீடு ஏறிப் போய் சண்டை போட்டது என் குடும்பம்.
அந்த மாத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின்சார துறையில் என்ஜினியர் மகேந்திரன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து பேசியிருக்கிறார்.. வேற்று ஜாதிக்காரர் என்பதால் 'சாரி" சொல்லிவிட்டார்கள் இவர்கள்..

சை.. ''இதுக்கும் மேல நம்மால முடியாதுப்பா.''.. என்று நானே வெறுத்திருத்துப் போயிருந்தேன்.. படிப்பும் முடிய, சென்னையில் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்புறம் என் திருமணம் பற்றி என் வீட்டில் தீவிரம் காட்ட,  நான் மறுத்து வந்தேன்.. ஊருக்கு போகும் போதெல்லாம் யாராவது ஒரு மாப்பிள்ளை பற்றி பேச்சு  அடிபடும். கடைசி கிளைமாக்ஸில்தான் கொதித்துப் போய்விட்டேன் நான்..
'நீ மட்டும் சரின்னு சொல்லு.. ஒரு பிசினஸ் பண்ற பையன் இருக்கான்.. ஜாதகமும் ஓ.கே'' என்று சொன்னார் மாமா..

அப்போது நான் திருமணத்தை வெறுத்திருந்த சமயம்.. வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. ஊருக்கு போகவே வெறுப்பாக இருக்கும்.. என் திருமணப் பேச்சே பெரும் பேச்சாக இருக்கும்.. ஒரு கட்டத்தில் என் மீது தண்ணி தெளித்து விட்டார்கள்.. அப்புறமாய் கிடைத்த தகவல் அந்த பிசினஸ் மேனில் பிசினஸ்.. புண்ணாக்கு மற்றும் மாட்டு தீவனங்கள் விற்பதுதான்.... எங்க ஊரில் இருந்து ஈரோடு போகும் வழியில் அவர் கடை உள்ளதாம்.. விசயம் தெரிந்ததும் எனக்கு சிரிப்புதான்  வந்தது..

அலுவலக நண்பர்களிடன் ஒரு ஓய்வு நேரத்தில் இந்த கதையைச் சொன்னேன்..

''இரு இரு.. முதலில் ஒரு மாட்டு டாக்டர், கடைசியா மாட்டுத் தீவனம் விக்கறவர்.. நீ என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா. (அதற்கு மேல் சொன்ன கமெண்ட் எல்லாம் என் மானத்தை வாங்கும் என்பதால் நானே சென்சார் பண்ணுகிறேன்) என்று என்னை காலி செய்துவிட்டார்கள்..

இன்றும் தமிழ் சினிமா பார்க்கும் போதும் அடிக்கடி சிரித்துக் கொள்கிறேன்.. என்ன செய்ய நான்."

54 comments:

க.பாலாசி said...

//என்னை பெண் பார்க்க வரும் போது குறித்த ஆயிரம் கனவுகள் இருந்தது..//

உங்கள பாத்தபெறவு அந்தாளோட கனவுல்லாம் கலைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.... ஓடியே போயிருப்பாரே.....

க.பாலாசி said...

//இதுவரை என்னை ஐந்து பேர் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்..//

இதையெல்லாம் கேட்டுகிட்டு இன்னும் நான் உயிரோட இருக்கணுமா!!!! ஆண்டவா என்னடா சோதனையிது....

அகல்விளக்கு said...

//என் லூசு குடும்பம் (இது எங்க பேமிலியின் பெட் நேம்) //

இதுக்கே நான் கட்டம் கட்டி திட்டணும்...

அகல்விளக்கு said...

//என்னைப் பொறுத்தவரை விவசாயியும், மருத்துவரும்தான் தான் எனக்கு ரோல் மாடல்கள்.. //

எந்த மருத்துவர்...??

சித்த மருத்துவரா...??

அகல்விளக்கு said...

//வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..

அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது. அதில் இருந்து நான் எதாவது குரும்பு செய்தால், மாட்டு டாக்டருக்கு கட்டி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவார்கள்..
///


ஹாஹாஹாஹா....

செம டிவிஸ்டு...

சத்தியா எதிர்பாக்கல....

ரோகிணிசிவா said...

//இரு இரு.. முதலில் ஒரு மாட்டு டாக்டர், கடைசியா மாட்டுத் தீவனம் விக்கறவர்.. நீ என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா//-இப்படி உன் மேல அக்கறை கொண்ட குடும்பத்த விட்டு நீ எப்படி தான் இருக்கியோ ???

சரி ,நமக்கு நாமே குழி தோண்டும் குழுமத்துல நீ தான் தலைவி யா?
என்னமோ போ சாமீ,
உன் மனசு யாருக்கும் வராது , தன்னைய தானே கலாயிச்சுகர திறமை !!!!

அகல்விளக்கு said...

//ஒரு கட்டத்தில் என் மீது தண்ணி தெளித்து விட்டார்கள்.. அப்புறமாய் கிடைத்த தகவல் அந்த பிசினஸ் மேனில் பிசினஸ்.. புண்ணாக்கு மற்றும் மாட்டு தீவனங்கள் விற்பதுதான்//


நமக்கும் எருமைக்கும் ஏதோ பூர்வ ஜென்ம சொந்தம் இருக்கு போல....

க.பாலாசி said...

//இன்னும் விரிவாக சொன்னால் அப்படி பெண் பார்க்கும் படலம் எனக்கு நிகழ்ந்ததில்லை... ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..//

ஒரு வசந்தகாலத்தை அந்த மணமகன்களுக்கு ஏற்படுத்திகொடுத்திருக்கிறீர்கள்... ஆகா...உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு...

அகல்விளக்கு said...

//அதற்கு மேல் சொன்ன கமெண்ட் எல்லாம் என் மானத்தை வாங்கும் என்பதால் நானே சென்சார் பண்ணுகிறேன்//

ரைட்டு....

அகல்விளக்கு said...

//// க.பாலாசி said...

//இன்னும் விரிவாக சொன்னால் அப்படி பெண் பார்க்கும் படலம் எனக்கு நிகழ்ந்ததில்லை... ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..//

ஒரு வசந்தகாலத்தை அந்த மணமகன்களுக்கு ஏற்படுத்திகொடுத்திருக்கிறீர்கள்... ஆகா...உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு.../////

ச்ச்ச்ச்ச்சுசும்ம்மாஆஆஆ.....
கன்னா பின்னான்னு வழிமொழிகிறேன்...

க.பாலாசி said...

//அது தெரிந்த நிமிடம் முதல் என் மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷம்..//

என்னாத்துக்கும்மா....

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//கட்டை விரலில் கோலம் போட்டு புது வெட்கத்துடனே அலைந்தேன்..//

இந்த கொடுமை வேறயா....

//வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..//

அட பார்றா...

//அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? //

ஏம்மா... அவரும் டாக்டருதான... நல்லா ஊசியெல்லாம் போடுவாரு....

க.பாலாசி said...

//படிப்பு முடியட்டும் என்று எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்..//

நல்லவேளை உனக்கு படிப்பு முடியல... முடிஞ்சிருந்தா அந்த வக்கீலோட வாழ்க்கையில்ல வீணாப்போயிருக்கும்...

//கடவுள் ரொம்ப நல்லவருங்க;..நான் சிக்சர் அடிக்க இன்னோரு பாலும் போட்டார்.//

என்னாத்தால... சப்பாத்திகட்டையாலையா....

//ஒரு கட்டத்தில் என் மீது தண்ணி தெளித்து விட்டார்கள்.//

இப்ப மட்டும் என்னவாம்....

க.பாலாசி said...

//அலுவலக நண்பர்களிடன் ஒரு ஓய்வு நேரத்தில் இந்த கதையைச் சொன்னேன்..//

உங்க ஆபிஸ் மக்கள்லாம் ரொம்ப பாவம்...

நிறைய கும்மியடிக்கலாம்... டைம் இல்ல...

சிநேகிதன் அக்பர் said...

அண்ணன் பாலாசி இங்கேயே டேரா போட்டுவிட்டார் போல..

நல்லாயிருக்கு பெண்பார்க்கும் படலம்.

துபாய் ராஜா said...

:))

Unknown said...

எப்படியோ மாட்டு டாக்டர் தப்பிச்சான். இப்போ எவனை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொல்லவே இல்ல... ஐஸ் விற்கிரவனையா..? எப்படியோ தினமும் ஐஸ் சாப்பிடலாம்.

VELU.G said...

நல்ல அனுபவங்கள்...
கடைசியில் என்னதான் முடிவெடுத்து இருக்கிறீர்கள்

r.v.saravanan said...

பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது.

ஹா ....ஹா




ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..


வசந்த காலம் தவறாது வரும்

பனித்துளி சங்கர் said...

இங்கு என் மவுனம் மட்டுமே இதற்கு சரியான மறுமொழியாக இருக்கும் என்று நம்புகின்றேன் . பகிர்வுக்கு நன்றி !

Mythees said...

சான்சே இல்லைங்க அந்த மாட்டு டாக்டர்

ஆனா டாக்டர் தப்பிசுடாறு...

பனித்துளி சங்கர் said...

///////என்னைப் பொறுத்தவரை விவசாயியும், மருத்துவரும்தான் தான் எனக்கு ரோல் மாடல்கள்.. அப்படி ஒரு டாக்டரே என்னை திருமணம் செய்து கொள்ள முன் வந்தது தெரிந்தும் தலைகால் புரியாமல், கட்டை விரலில் கோலம் போட்டு புது வெட்கத்துடனே அலைந்தேன்.. அவர் பெயர் என்ன தெரிந்து கொள்ள மனதுக்குள் ஆர்வம் தோன்ற.. விசாரித்ததில்.. அவர் என் தாத்தாவுக்கு மிகவும் பழக்கமானவர் என்று தெரிந்ததுமே ஜெர்க்கானது..
காரணம் ஹாஸ்பிட்டல் போகவே விருப்பம் இல்லாத தாத்தாவுக்கு எப்படி டாக்டரை தெரியும்? என் கேள்விக்கு ரெண்டே நாளில் விடை கிடைத்தது.. எங்க தாத்தா வீட்டில் இருக்கும் எருமைக்கு உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..

அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது. அதில் இருந்து நான் எதாவது குரும்பு செய்தால், மாட்டு டாக்டருக்கு கட்டி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவார்கள்..///////


பல மாடுகளின் உயிர் தப்பித்தது . இதுவரை கண்கள் பார்க்காத கடவுளுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////இத்தனைக்கும் அந்த மாப்பிள்ளை என் போன் நெம்பர் கேட்டிருக்கிறார். ஆனால் என் லூசு குடும்பம் (இது எங்க பேமிலியின் பெட் நேம்)///////


அறிமுகத்திற்கு நன்றி மேடம் !

பனித்துளி சங்கர் said...

//////அடுத்த முறை மாரியம்மன் திருவிழாவிற்கு ஊர்க்கு வந்திருந்தேன்.. அதற்கு முதல் நாள்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் அரவிந்த் என்னும் வழக்கறிஞர் என்னை பெண் கேட்டு சென்றிருக்கிறார்.. படிப்பு முடியட்டும் என்று எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்..////////


உங்க வீட்டுக்கு போய்விட்டு திரும்பும் வழியில் . கம்ப்யூட்டர் ஜாதகம் பார்த்திருக்கார் . அப்பொழுது அந்த கம்ப்யூட்டர் சொன்னதாம் சற்று நேரத்திற்கு முன்புதான் உனக்கு ஏழரை சனி விட்டது .அப்பொழுது முதல் உனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று . அதை சொல்லத்தான் உங்க மொபைல் நம்பர் கேட்டிருக்கார் . எது எப்படியோ தப்பித்தார் நல்லபடியாக ..........

பனித்துளி சங்கர் said...

//////கடவுள் ரொம்ப நல்லவருங்க;..நான் சிக்சர் அடிக்க இன்னோரு பாலும் போட்டார். பட் வழக்கம் போல என் குடும்பம் பேட் பிடிக்காமல் தடுக்க விட்டுவிட்டது,,//////


அய்யய்யோ மேடம் நீங்க தப்பா புரிந்துகொண்டீர்கள் அவர் உங்களுக்கு சிக்சர் அடிக்க பால் போடவில்லை போல்டாக்கப் போட்ட பால் . கடவுள் இது போன்ற விசயங்களில் ரூம் போட்டு யோசிப்பாரு . நீங்க கல்லூரியில படிக்கும் பொழுது சொல்லிக்கோடுக்கவில்லையா ????????????

பனித்துளி சங்கர் said...

/////அதே சமயம் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் எந்த சீர்வரிசையும் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் ஏகத்துக்கும் பேச, உஷாரான என் குடும்பம் உணமையாகவே ஒரு போலீஸ் வைத்து அவரைப் பற்ரி விசாரித்திருக்கிறது.. கடைசியில் வெளிப்பட்டது குட்டு..//////


பாவம் அந்த மாப்பிள்ளை !
இந்த ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொள்வதார்க்கு போலீஸ் வைத்து அவரைப்பற்றி விசாரணைவேற .
என்னக் கொடுமை ஸார் இது !

பனித்துளி சங்கர் said...

//////அவனுக்கு ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் ஆகியிருக்கிறது.. அந்த பெண் வெளியூர் சென்ற சமயம் பார்த்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்..//////


அட நம்ம ராசைய்யா படத்தோட கிளாமெக்ஸ் சூப்பருங்க மேடம் !

சாந்தி மாரியப்பன் said...

ஆண்டவா... என்னே அந்த மாப்பிள்ளைகளுக்கு வந்த சோதனை!!!.. கடைசியில் என்னதான் ஆச்சு.. அதச்சொல்லுங்க.

பனித்துளி சங்கர் said...

/////அந்த மாத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின்சார துறையில் என்ஜினியர் மகேந்திரன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து பேசியிருக்கிறார்.. வேற்று ஜாதிக்காரர் என்பதால் 'சாரி" சொல்லிவிட்டார்கள் இவர்கள்..//////


ஆஹா ! பார்வை இருந்தும் இன்னும் சில முகமூடி குருடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !

பனித்துளி சங்கர் said...

மேடம் நாளை வந்து மீண்டும் சந்திக்கிறேன் . இப்போதைக்கு
டா ! டா !

தாராபுரத்தான் said...

பொண்ணு பார்க்கிற காலம் முடிந்து விட்டது. நீங்க மாப்பிள்ளை பார்க்கிற காலமில்ல நடக்குது.

Anonymous said...

அப்ப இன்னும் உங்ககிட்ட யாரும் மாட்டலியா :)

settaikkaran said...

நல்லாயிருக்குதுங்க! அதிலும் டாக்டர் மேட்டர் சூப்பர்! ஆனா, இது பரவாயில்லீங்க! ஒரு தடவை ஒரு பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு என்னோட ஃபோட்டோவை அனுப்பி வச்சாங்க! அங்கேயிருந்து மறுநாளே போன் வந்தது; "என்னங்க மாப்பிள்ளை போட்டோவை அனுப்பச் சொன்னா, நீங்க நெகடிவை அனுப்பி வச்சிருக்கீங்க?" -என்னாங்க பண்ணுறது? என் மூஞ்சியே அவ்வளவுதான், நாங்க அனுப்பினது என்னோட போட்டோ தான்னு போன் மேலேயே சத்தியம் பண்ணிச் சொல்ல வேண்டியதாகிப்போச்சு!

*இயற்கை ராஜி* said...

//இரு இரு.. முதலில் ஒரு மாட்டு டாக்டர், கடைசியா மாட்டுத் தீவனம் விக்கறவர்.. நீ என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா. //


ரொம்ப டீசண்டா கேட்டுட்டாங்க.. நானா இருந்தா... சரி இங்க வேணாம் விடு... தனியா கேக்கறேன்

*இயற்கை ராஜி* said...

//காபி சுடும் என்று சொன்னதில்லை//


எல்லார் வீட்டு காபியும் சுடும்.எந்த வீட்லயும் ஐஸ்கோல்டு காபி தரமாட்டங்க... இதுகூட தெரியாத மாக்கனையா கட்டிகணும்ன்னு ஆசைப்பட்டே?

வால்பையன் said...

உங்க தாத்தா உங்களூக்கு மாப்பிள்ளை பார்க்கல, உங்களுக்கு உடம்பு சரியில்லைனா மருத்தவம் பார்க்க ஒரு ஆள் பார்த்திருக்கார்!


:)
(லுலுலாயிக்கு)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இது என்னங்க ரேவதி ஏதோ படத்துல பாடுற மாதிரி "என்ன மானமுள்ள பொண்ணு இன்னு மருதைஇல கேட்டாக...." னு போகுது ஸ்டோரி. ஆனா நல்லா நகைச்சுவையா எழுது இருக்கீக... (என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சான்னு திட்டாதீங்க சிஸ்டர்). என்னோட கதை அதை விட சோக கதை. இங்க வந்து படிச்சு பாருங்க http://appavithangamani.blogspot.com/2010/03/blog-post_23.html

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை .இது நல்லா இருக்கு

பிரேமா மகள் said...

என்னை ரவுண்ட் கட்டி கலாய்த்த அண்ணாச்சி பாலாசி அவர்களுக்கும்.. ஈரோட்டின் ராஜா அகல்விளக்கு அவர்களுக்கும், நேரம் காலம் பார்க்காமல் கமெண்ட் போட்ட பனித்துளி சங்கர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியோ நன்றி...

என்ன மக்கா.. உங்க பாசம் இவ்வளவுதானா...

பிரேமா மகள் said...

ரோகிணிசிவா said...

//சரி ,நமக்கு நாமே குழி தோண்டும் குழுமத்துல நீ தான் தலைவி யா?
என்னமோ போ சாமீ,
உன் மனசு யாருக்கும் வராது , தன்னைய தானே கலாயிச்சுகர திறமை !//

அதுகெல்லாம் நல்ல மனசு வேண்டும்.. அது நம்மகிட்ட இருக்கு டாக்டர்..

எல் கே said...

adada ippadi soga kathai aiduche unga nilamai

பிரேமா மகள் said...

hariprasath said...

//எப்படியோ மாட்டு டாக்டர் தப்பிச்சான். இப்போ எவனை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொல்லவே இல்ல... ஐஸ் விற்கிரவனையா..? எப்படியோ தினமும் ஐஸ் சாப்பிடலாம்//

ஐஸ் வேண்டாம்.. போர் அடிக்கும்.. பிரியாணி கடைக்காரன் தான் பெஸ்ட் சாய்ஸ்..

பித்தனின் வாக்கு said...

ஆகா பரவாயில்லைங்க, எனக்கு பெண்ணுப் பார்க்க போட்டோவை அனுப்பினால் அந்தப் பெண்ணு கிணத்துல குதிக்கப் போயிருச்சு. கடைசியில பார்த்தா எதே காதலாம், நல்லாயிரும்மான்னு சொல்லிட்டேம்.

ஆமா கடைசில மாட்டுனவரு பத்தி சொல்லவேயில்லை. யாரு அவரு பில்கேட்ஸ் மாதிரி புல்கேட்ஸ்ஸா(அதான் புல் வியாபாரமா?. மாட்டு டாக்டர், புண்ணாக்க்குக்கு அப்புறம் புல்லுக்கட்டு தானே). ஹா ஹா

நல்ல கல கல பதிவு.

பிரேமா மகள் said...

நன்றி அக்பர்..
நன்றி துபாய் ராஜா..

நன்றி வேலு..
நன்றி சரவணன்..

நன்றி மைத்தீஸ்..
நன்றி அமைதிச் சாரல்..

நன்றி தாராபுரத்து தாத்தா..
நன்றி சின்ன அம்மிணி...

நன்றி சேட்டைக்காரன்..
நன்றி ராஜி...

நன்றி வால்பையன்..
நன்றி அப்பாவி தங்கமணி...

நன்றி.. nidurali
நன்றி எல்.கே..

YUVARAJ S said...

எதுக்குங்க இந்த சாலை மறியல்? (I mean, your profile picture!)

யாராவது பொண்ணு பாக்க வந்தா தான் மறியல கை விடுவீங்களா?

அரசூரான் said...

பெண்ணை பார்க்க மேலும் சிலரை வீட்டுக்கு வரச் சொல்லுரோம், அதுக்காக இப்படி நடு ரோட்டுல உட்காரப்பிடாது. (மாட்டு டாகடர் இன்னும் இந்த ஏரியாவிலதான் சுத்திகிட்டு இருக்காராம்)

Radhakrishnan said...

ஒரு பெண்ணின் மனதில் ஏற்படும் ஏக்கங்களையும், அதனால் ஏற்படக்கூடிய வெறுப்புகளையும் ஒரு சேர மிகவும் அருமையாக பல பெண்களின் மனநிலையை அழகாக எழுதி இருக்கீங்க. மிகவும் நன்றாக இருந்தது.

Priya said...

இப்போதாங்க நானும் இந்த பொண்ணு பாக்க வந்ததை பத்தி எழுதிட்டு வந்தேன். எப்படியோ இன்று உங்க blogக்கும் வந்து உங்க பொண்னு பார்த்த கதையையும் படிச்சேன். ஏங்க இப்படி உங்க family name எல்லாம் லீக் அவுட் பண்ணுறீங்க:)

Buvan said...

good review.......by thambi vettothi sundaram........visit at www.vettothi.com

Shankaran er said...

சுவாரஸ்யமான பதிவு . கூடிய விரைவில் ஒரு நல்ல மருத்துவர் கனவாக வாழ்த்துக்கள் :)

பாலாஜி சங்கர் said...

நல்லா கோர்வையா எழுதறீங்க
வாழ்த்துக்கள்

Thamira said...

இயல்பான நகைச்சுவை நடையில் பின்னியிருக்கிறீர்கள். கிளைமாக்ஸ் என்னான்னு சொல்லவேயில்லையே..

ப்ரியமுடன் வசந்த் said...

என்னோட அதிகபட்ச சிரிப்பு சிரிக்க வச்சதுக்கு நன்றி..

அறிமுகப்படுத்திய அகிலா மேடத்துக்கும் நன்றி..