Monday, April 12, 2010

மெளனம் சம்மதமல்ல!

வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!


மனதுக்குள்
தாழ் இட்டுக்கொண்ட‌
என் மெளனங்களை
உன் கத்தி வீச்சு
வார்த்தைகள்
எப்படி காயப்படுத்தும்?



தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!

தணலில்
சாயம் பூசியது
உன் வார்த்தைகள்!
புன்னகையில்
பூத்து எழும்பும்
என் மெளனங்கள்!
நீ ராட்சசனானதும்
நான் தேவதையானதும்
அந்த கணத்தில்தான்!


பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்!

43 comments:

Anitha Manohar said...

வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
//தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!//

இனிய கவிதாயினியே!!!!

ரொம்ப நிதர்சனம்.

அனனத்து குறுங்கவிதைகளும் ரசித்தேன்.

அருமை

வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!

வாவ் சூப்பர்

மௌனத்தின் வலிமையை உணர வைக்கும் கவிதை

நன்றி

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

தமிழ் உதயம் said...

அற்புதமான கவிதை.

மௌனத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் உண்மை , அவர்களுக்கு தானே தெரியும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம், நல்லா இருக்குங்க..

ரோகிணிசிவா said...

//பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்! //
-superb subi , this reminds me

//At sunset, on the river bank, Krishna
loved her for the last time and left...
That night in her husband's arms, Radha felt
so dead that he asked,
"What is wrong,
Do you mind my kisses, love?"
And she said,
No, not at all, but thought,
What is
It to the corpse if the maggots nip?

--Kamala Das, in "The Maggots"
from "The Descendants//

கண்ணகி said...

மனதுக்குள்
தாழ் இட்டுக்கொண்ட‌
என் மெளனங்களை
உன் கத்தி வீச்சு
வார்த்தைகள்
எப்படி காயப்படுத்தும்?

ம்வுனம் என்னும் ஆயுதம் சொல்லும் ஓராயிரம்..கதைகள்..

.தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!...அழகு.

க.பாலாசி said...

//தணலில்
சாயம் பூசியது
உன் வார்த்தைகள்!
புன்னகையில்
பூத்து எழும்பும்
என் மெளனங்கள்!
நீ ராட்சசனானதும்
நான் தேவதையானதும்
அந்த கணத்தில்தான்!//

தேவதை...???!!!! ம்ம்ம்.........

//மனதுக்குள்
தாழ் இட்டுக்கொண்ட‌
என் மெளனங்களை
உன் கத்தி வீச்சு
வார்த்தைகள்
எப்படி காயப்படுத்தும்?//

பெறவு என்ன... விட்டுத்தள்ளவேண்டியதுதான.. ம்ம்....

கடைசி ரெண்டு நல்லாயிருக்கு....

Mythees said...

//வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!//

அப்ப பேசாம இருக்கறதுதான ராம்போ பெரியதப்பு

Mythees said...

கவிதை :))))

ஈரோடு கதிர் said...

//தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு//

அடடா.....
சூப்பர்

லாவண்யா... எல்லாமே இதமான கவிதை...

ஹேமா said...

இன்றுதான் உங்கள் தளத்திற்குள் வந்தேன்.அருமையான வரிகளோடு நல்லதொரு காதல் கவிதை.
தொடருங்கள்.இன்னும் வருவேன்.

பனித்துளி சங்கர் said...

கவிதையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகவும் அழுத்தமாக சொல்லி இருக்கீங்க .

வால்பையன் said...

நீ ராட்சசனானதும்
நான் தேவதையானதும்//


எங்களை காப்பாத்த யாருமேயில்லையா!?

பிரேமா மகள் said...

நன்றி ஜிஜி..

நன்றி சரவணன்..

நன்றி தமிழ் உதயம்...

நன்றி முத்துலட்சுமி..

நன்றி கண்ணகி..

நன்றி மைத்தீஸ்...

நன்றி பனித்துளி சங்கர்...

S Maharajan said...

//பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்!//

ஏன் இந்த கொலை வெறி!

இருந்தாலும் கவிதை அருமை

thiyaa said...

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

VELU.G said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

//தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!
//

படிகள் சீக்கிரம் முடியுமா
இல்லை
வளர்ந்து கொண்டே இருக்கிறதா..

sathishsangkavi.blogspot.com said...

//பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்! //

அழகான ஆழமான கவிதைகள்...

prince said...
This comment has been removed by the author.
prince said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

அழகான, அருமையான கவிதைகள்.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.
தக்குடு said...

//தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!//

அருமை!!!!!

தக்குடு said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்

பிரேமா மகள் said...

ரோகிணிசிவா said...

//!-superb subi , this remind me//

நன்றி.. என் எழுத்துகள் உங்களுக்கு வேறோன்றை நியாபகப்படுத்தினால்,சந்தோஷமே....

பிரேமா மகள் said...

க.பாலாசி said...

//பெறவு என்ன... விட்டுத்தள்ளவேண்டியதுதான.. ம்ம்..//

நல்லாயிருக்கிற குடும்பத்துக்குள்ள கும்மி அடிக்காதீங்க அண்ணாச்சி....

பிரேமா மகள் said...

mythees said...

//அப்ப பேசாம இருக்கறதுதான ராம்போ பெரியதப்பு//


அதைத் தான.. நாங்களும் சொல்றோம்...

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...


//அடடா.....
சூப்பர்

லாவண்யா... எல்லாமே இதமான கவிதை//

எது அங்கிள்... லாவண்யாங்கிற பேரா?

பிரேமா மகள் said...

ஹேமா said...

//இன்றுதான் உங்கள் தளத்திற்குள் வந்தேன்.அருமையான வரிகளோடு நல்லதொரு காதல் கவிதை.
தொடருங்கள்.இன்னும் வருவேன்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹேமா...

பிரேமா மகள் said...

வால்பையன் said...

//எங்களை காப்பாத்த யாருமேயில்லையா!?//

அதை நாங்க சொல்லணும்..

பிரேமா மகள் said...

நன்றி மஹாராஜன்..

நன்றி சங்கவி...

நன்றி துபாய் ராஜா..

நன்றி தக்குடுபாண்டி..

பிரேமா மகள் said...

தியாவின் பேனா said...

// நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி..//

ஹாய்.. தியா.. எப்படி இருக்கீங்க.. மீண்டும் எழுத வந்ததற்கு பூங்கொத்துக்களுடன் வரவேற்பு தருகிறேன்..

பிரேமா மகள் said...

VELU.G said...

//படிகள் சீக்கிரம் முடியுமா
இல்லை
வளர்ந்து கொண்டே இருக்கிறதா//

அது எதிராளியைப் பொறுத்து....

பிரேமா மகள் said...

ப்ரின்ஸ் said...



// இதுதான் ஊடலா? நிழற்படங்களும் கவி பாடுகின்றனவே!

கற்பாறையின் உள்ளே இருக்கும் தேரையை போலவே தேவதையே உந்தன் இதயமும் ஈரமடி

எப்புடி நாங்களும் கவிதை எழுதுவோமில்ல//

பிரின்ஸ்.. என்ன ஆச்சு.. பெங்களூரில் ஓவர் வெயிலா? இல்லை நைட் அடிச்சது இன்னும் இறங்கலையா?

Priya said...

//ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!//.... சூப்பரா இருக்கு!

prince said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

பெண்கள் மெளனமாக இருந்தால் ஆண்கள் தேவதைகளாகி விடுவார்கள்.
ஆனா அதுதான் முடியாதே :))

Unknown said...

ungalukku kalyanam aagiducha..?

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

கவிதைகளை மட்டும் சொல்லவில்லை.

பின்னூட்டம் க்ளிக் பண்ணி வந்து,அல்மோஸ்ட் எல்லாம் வாசித்தேன்.

its intresting u know!

one more talented!

மக்கா,கலக்குங்க.

பருப்பு (a) Phantom Mohan said...

நல்ல கவிதை....

///திட்டுங்க எசமான் திட்டுங்க...////

பொண்ணுங்களுக்கும் காமெடி சென்ஸ் இருக்கிறது ஆச்சர்யமா இருக்கு? தப்பா நெனைக்காதீங்க...அப்டியே இருந்தாலும் அத வெளி உலகத்துக்கு காமிக்கிறது ரொம்ப கம்மி, அதான்..மேல உள்ள வரி தான் என்ன கமெண்ட் எழுத வச்சது..ம்ம் பட்டைய கிளப்புங்க

அம்பிகா said...

\\தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!\\
மிக அருமையான கவிதை.

Shankaran er said...

இது நீங்க எழுதின கவிதையா??

அரபுத்தமிழன் said...

கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சூப்பர்.