லிப்டில் மிக நெருக்கமாய்
நானும் அவனும்!
ஒரு முறை கண்ணடித்தேன்..
இரு முறை
கண் சிமிட்டினான் அவன்!
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்!
மூணு வயசு
ஆகுதுன்னு சொன்னாங்க
அவங்க அம்மா!
பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்
பார்க்கும் சமயமெல்லாம்
எனக்கு முத்தம் தருகிறான்
அந்த எல்.கே.ஜி பையன்!
அவன் என் எதிர் வீடு!
ஜன்னல் விழி
தரிசனம் மட்டுமே!
அதிகாலை அவனுக்கான
பூக்களுடன் காத்திருப்பேன்!
எனக்கான புன்னகையுடன்
வருவான் அவன்!
சில நேரம் பறக்கும் முத்தம்
பரிசாய் கிடைக்கும்!
காதலுக்கு மொழி தடையில்லை!
ஆம் இப்போதுதான்
அவன் எ.பி.சி.டி
சொல்லப் பழகுகிறான்!
அப்பா பெயர் கேட்டால்
சிரிக்கிறான்!
சாப்பிட சொன்னால்
அழுகிறான்!
அடுத்த ஆண் மகனுடன்
பேசினால் முறைக்கிறான்!
டாட்டா சொன்னால் மட்டும்
ஐ லவ் யு என்கிறான்
பள்ளி செல்லும் முன்னே!
சில நேரம் கிறுக்கல்,
சில நேரம் கிள்ளல்,
தட்டிக் கொடுக்க,
கட்டிப் பிடிக்க
என எப்போதும்
அவனுக்கு
என் உள்ளங்கை
தேவையானது!
இப்போதெல்லாம்
கூட்டல் கழிதல் கணக்குக்கு
காதலுடன் கேட்கிறான்!
40 comments:
யப்பே....
எல்லாமே டாப்பு...
4..
.
.
5..
.
.
1..
.
.
3..
.
.
2..
.
.
//அவன் எ.பி.சி.டி
சொல்லப் பழகுகிறான்!//
முதியோர் கல்வியில படிக்கிறவங்கள ‘அவன் இவன்’லாம் சொல்லக்கூடாது....
லண்டன்ல போய் ஒக்காந்து நல்லா யோசிக்கிறிங்க. நல்லாருக்கு.
காதல் என்ற வார்த்தையை எதனுடன் இணைத்தாலும் அழகாகத்தான் தோன்றுகிறது . அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி
பாவம் அவன் உங்ககிட்ட சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறான்
வேற வழியில்ல, மூணு வயசு பையனை தான் ஏமாத்த முடியும்!
nice
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா..! கவிதை ரசிக்கும் படியாய் இருக்கு பாராட்டுகள்.
அழகு..... கவிதையும் கருத்தும்...... அழகோ அழகு!
வந்திட்டீங்களா? வாங்க வாங்க! கவிதையெல்லாம் சூப்பருங்கோ! :-)
வெளிநாடு போயும் ஈரோடு குசும்பு போகலையே!
அது மூணு வயசு பையன் தானே
@சுபி ,
மூணு வயசு பையனுக்கா லண்டன் ல வேலை தந்து ,குடும்ப விசாவும் தர்றாங்க ???
ஆச்சரியம் !!!!!!
@அகல்விளக்கு said...
//யப்பே....
எல்லாமே டாப்பு.//
எல்லாமே டாப்பு இல்ல அப்பு டூப்பு !!
இப்டி ஆகிப் போச்சே உங்க நெலம ஆபிசர்.. :))
//சில நேரம் கிறுக்கல்,
சில நேரம் கிள்ளல்,
தட்டிக் கொடுக்க,
கட்டிப் பிடிக்க
என எப்போதும்
அவனுக்கு
என் உள்ளங்கை
தேவையானது!
இப்போதெல்லாம்
கூட்டல் கழிதல் கணக்குக்கு
காதலுடன் கேட்கிறான்//
வாவ்... இப்படியெல்லாம் கவிதை பேச முடியுதா...?
ஏதோ நல்ல படிச்சா சரிதான்..:)
அன்புடன்
ஜிஜி
எதிர்கால கனவுகளை சுமந்திடும் தருணங்கள் எப்பவுமே கொள்ளை அழகு. தாய்மையின் உணர்வுகளை எல்லா குழந்தைகளிடமிருந்தும் பெற இயலும். அருமை சகோதரி.
அகல்விளக்கு said...
//யப்பே....
எல்லாமே டாப்பு...//
ரோகிணிசிவா said...
//எல்லாமே டாப்பு இல்ல அப்பு டூப்பு !!//
டாக்டர் என்ன இன்னிக்கு பேசண்ட் யாரும் வரலையா?
க.பாலாசி said...
//அவன் எ.பி.சி.டி
சொல்லப் பழகுகிறான்!
முதியோர் கல்வியில படிக்கிறவங்கள ‘அவன் இவன்’லாம் சொல்லக்கூடாது....///
இப்படியே சொல்லிக் கிட்டு இருங்க.. உங்களுக்கு ஆயுசுக்கும் கல்யாணம் ஆகாது... ஆமாம்..
நன்றி ராமசாமி கண்ணன்..
நன்றி பனித்துளி சங்கர்....
நன்றி வானம்பாடிகள்.....
நன்றி பிரவின் குமார்....
நன்றி சித்ரா...
நன்றி சேட்டைக்காரன்...
நன்றி மைத்தீஸ்..
Sangkavi said...
//பாவம் அவன் உங்ககிட்ட சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறான்//
வால்பையன் said...
//வேற வழியில்ல, மூணு வயசு பையனை தான் ஏமாத்த முடியும்!//
ஹலோ.. ரெண்டு குட்டிப் பசங்க விளையாடறாங்க.. அதைப் போய் தப்பாப் பார்க்கறீங்களே? போங்க.. போய் வேலையைப் பாருங்க...
S Maharajan said...
//வெளிநாடு போயும் ஈரோடு குசும்பு போகலையே!
அது மூணு வயசு பையன் தானே//
அட.. நம்புங்கப்பா.. அவன் என் எதிர் வீட்டுப் பையன்...
இந்த உலகம் என்னிக்குத்தான் திருந்தப் போகுதோ சாமி?
ரோகிணிசிவா said...
//@சுபி ,
மூணு வயசு பையனுக்கா லண்டன் ல வேலை தந்து ,குடும்ப விசாவும் தர்றாங்க ???
ஆச்சரியம் !!!!!!//
அட..அவன் இங்கே பொறந்து வளர்ந்த பையன்.. பிறக்கும் போதே ப்ரிட்டன் சிட்டிசன்.. இன்னும் ஸ்கூல் போகல.. புத்தியை மாத்துங்கப்பா.... ஹீம்...
SanjaiGandhi™ said...
//இப்டி ஆகிப் போச்சே உங்க நெலம ஆபிசர்.. :))//
அதுசரி.. காதலிக்கிறேன்னு சொன்னா... எந்த ஊரில உடனே ஒத்துக்கறாங்க....
ஜிஜி said...
// ஏதோ நல்ல படிச்சா சரிதான்..:)
அன்புடன்
ஜிஜி//
அதைதாங்க.. நானும் சொல்லறேன்.. இந்த உலகம் என்னை நம்ப மாட்டிங்கிது.. என்ன செய்ய?
பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்
பார்க்கும் சமயமெல்லாம்
எனக்கு முத்தம் தருகிறான்
அந்த எல்.கே.ஜி பையன்!///
dopaakkoor subi ponathume chennaila nalla mazhai ....note this point ur honorable pathivargale
V.Radhakrishnan said...
// தாய்மையின் உணர்வுகளை எல்லா குழந்தைகளிடமிருந்தும் பெற இயலும். அருமை சகோதரி.///
அய்யோ.. நான் இன்னும் வளரவே இல்லை.. அது நான் சைட் அடிக்கிற பையன்...
//
பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்
//
நல்ல வரிகள்
முழுக்கவிதையையும் ரசித்தேன்
கவிதை சூப்பர்
பூங்கொத்து!
நல்லா இருக்குங்க ..
குழந்தை பற்றிய கவிதையை ரசித்தேன்
லண்டன் எப்படியிருக்குங்க
மூணு வயசுன்னு CLIMAX-ல சொல்லி இருந்தா , இன்னும் கொஞ்சம் PEP-ஆ இருந்திருக்கும்ன்னு
என்னோட தாழ்மையான கருத்துங்க !! :)) SUPERB கவிதை !!
கவிதை அருமை
மிக மிக அருமை
L
.
.
.
.
.
.
O
.
.
.
.
.
V
.
.
.
.
.
.
E
.
.
.
.
.
.
அருமை.........................
அசத்தல் ப்ரேமா மகள் அனைதும் அருமை..
யக்கோவ் பின்னிடிங்க போங்க.........
அசத்தல் வரிகள்,அழகான எண்ணங்கள்
//பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்//
அவன் காதலைப் மாத்திரம் அல்ல
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்- இருந்தால் -எல்லோரின் காதலையும் பெறலாம்
சின்ன திருத்தும் -
சின்ன பையனிடம் கொள்வது -அன்பு!
பெரிய பையனிடம் கொள்வது தான் -காதல் !!
-tsekar
Post a Comment