Monday, May 31, 2010

விடை தெரியாத கேள்விகள்

நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?


பார்வை கடக்கும்
சமயம் மட்டும்
புன்னகைத்து,
இத்தனை நாட்களில்
நான்கு முறை மட்டுமே
`ஹலோ` சொல்லியிருக்கும்
அடுத்த வீட்டு
வெள்ளைகாரியிடம்
அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?


வருடம் ஒருமுறை
லிவிங் டுகெதர்
ஆட்களை மாற்றும்
பக்கத்து வீட்டு
கருப்பின பெண்ணிடம்,
வெள்ளிக்கிழமை ஆனால்
என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?


‘கார் பார்க்கிங்-யில்
இடம் தருகிறான்.
கேட்கும் போது
உதவ காத்திருக்கிறான்.
அறிமுகத்தில் அன்பான
இந்தியபெண் என்கிறான்.
எதிர் வீடு என்றாலும்
பயம் ஏற்படுத்தும்
அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது?


ஆட்டு குட்டி வாங்கிருக்காங்க,
ஊரில் இன்னிக்கு மஞ்சநீர்,
வயல்-ல அறுவடை,
அக்கா கருவுற்றிருக்கிறாள்,
இப்படி பகிர்ந்துகொள்ள
எத்தனையோ செய்திகள்.
மொழி அறியாத தேசத்தில்
யாரிடம் சொல்வது?

42 comments:

க.பாலாசி said...

//என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?//

அடடா... எக்ஸ்லண்ட் ஃபீலிங்....

க.பாலாசி said...

//பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?//

உண்டக்கட்டியத்தான சொல்றீங்க...

//அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?//

இன்னும் நீங்க திருந்தலையா?

//மொழி அறியாத தேசத்தில்
யாரிடம் சொல்வது?//

ஏன் வீட்டுக்காரர்ட சொல்லவேண்டியதுதானே....

க.பாலாசி said...

//அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது?//

மச்சான்னு சொல்லுங்க.... (உங்களுக்குத்தான் அண்ணன்னா பிடிக்காதே....)

குலவுசனப்பிரியன் said...

ஒவ்வொருவருக்கும் சொல்லி அலுத்து விட்டது. கருப்பினத்தவரை இழிவாக சொல்லும் கெட்டவார்த்தை பேசாதீர்கள் என்று.

Unknown said...

எங்கேயோ படித்த மாதிரி இருக்கே

பிரேமா மகள் said...

//மச்சான்னு சொல்லுங்க.... (உங்களுக்குத்தான் அண்ணன்னா பிடிக்காதே....)//


என்னதான் இருந்தாலும் அவன் பாகிஸ்தான்காரன் இல்லையா?

sathishsangkavi.blogspot.com said...

////அடுத்த வீட்டு
வெள்ளைகாரியிடம்
அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?
//

அங்க போயும் விடலையா? ஓசி கேக்கறத.....அப்ப சென்னையில் இருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரங்களை உண்டு இல்லைன்னு பண்ணீருப்பீங்க....

////நீக்ரோ பெண்ணிடம்,
வெள்ளிக்கிழமை ஆனால்
என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?//

இத நெற்றியில் வைத்துக்கொண்டால் தினமும் ஒரு நண்பர்கள் கிடைப்பாங்க அப்படின்னு சொல்லுங்க....
அப்புறம் இங்கிலாந்து முழுவதும் குங்கும கலாச்சாரந்தான்

//எதிர் வீடு என்றாலும்
பயம் ஏற்படுத்தும்
அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது?//

அவர் தீவிரவாதின்னு ஒரு பிட்ட போடுங்க...
அப்புறம் யாரையுமே பார்க்க மாட்டார்...

பிரேமா மகள் said...
This comment has been removed by the author.
தனி காட்டு ராஜா said...

//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?//

ஏன் அவ மட்டும் சந்தோசமா இருக்கா ?? என்ன ஒரு வில்லதனம் ?
சர்க்கரை பொங்கலை ஏன் கொடுக்கனும் ? ஒயின் -ன கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே ?

//ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?//
English -ல சட்டுன்னு கேட்டுபுட வேண்டியது தானே ?

//நீக்ரோ பெண்ணிடம்,
வெள்ளிக்கிழமை ஆனால்
என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?//

அவ கேட்டளா ...ம்... அவ கேட்டளா ??

பிரேமா மகள் said...

குலவுசனப்பிரியன் said...

//ஒவ்வொருவருக்கும் சொல்லி அலுத்து விட்டது. கருப்பினத்தவரை இழிவாக சொல்லும் கெட்டவார்த்தை பேசாதீர்கள் என்று.//

மன்னிக்கவும்.. அது கெட்ட வார்த்தை என்று எனக்கு தெரியாது.. என் பதிவில் நீக்ரோ என்று இருப்பதற்கு பதிலாக கருப்பின பெண்மணி என திருத்திக் கொள்கிறேன்..
விமர்சனத்திற்கு நன்றி.

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு பிரேமா பொண்ணு ...

//எதிர் வீடு என்றாலும்
பயம் ஏற்படுத்தும்
அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது? //
கண்டிப்பா சொல்லுங்க ....
புது உறவுகள் நம்மிடையே பிறக்கட்டும் ...
அமைதியும் ஒத்துழைப்பும் வளரட்டும் ...
யார் கண்டார் ...
நோபல் கூட உங்களுக்கு கிடைக்கலாம் ...

// என்னதான் இருந்தாலும் அவன் பாகிஸ்தான்காரன் இல்லையா? //
நமக்கும் சொந்த காரன் தானே ...
சானியா முறையில சொன்னேன் ...

அப்புறம் ..

கவிதையை வாசித்து முடித்த பின் மெல்ல வழியும் புன்னகைகள் உங்களுக்கு !

அன்புடன் நான் said...

உணர்வுள்ளக் கவிதை....
உயிருள்ளக் கவிதை.
பாராட்டுக்கள்.

பிரேமா மகள் said...

akader said...
//எங்கேயோ படித்த மாதிரி இருக்கே//


சாமி சத்தியமா நாந்தான் எழுதினேன்..

ஒருவேளை அயல்நாடுகளில் வசிக்கும் ஏதேனும் பதிவருக்கும் இது போல தோன்றி, எழுதியிருக்கலாம்,.

பிரிவின் வலி தரும் உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே..

dheva said...

அடையாளம் தொலைந்து போன தேசத்தில் நித்தம் வரும் நினைவுகள் தான் இவை! ஆமாம் இவர்கள்களுக்கு எப்படி தெரியும் நமது பாரம்பரியம்....ஆதங்கம் நிஜம்தாங்கா....! அருமையான வெளிப்பாடு! வாழ்த்துக்கள்!

S Maharajan said...

//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?//

நைட் வோட்கா அடிக்க இது தான் சைடு டிஷ் அப்படின்னு சொல்லுங்க

//அடுத்த வீட்டு
வெள்ளைகாரியிடம்
அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?//

அங்க போயும் உங்க புத்தி போகலியே..

//மொழி அறியாத தேசத்தில்
யாரிடம் சொல்வது?//

எப்போதும் போல தனியாகவே பேச வேண்டியது தானே,இது என்ன புது பழக்கம்

க ரா said...

அங்க போய் உக்காந்து கிட்டு நீங்க ஏங்க இதல்லாம் யோசிக்கீறிங்க.

தமிழ் உதயம் said...

வேறொரு நாட்டை சேர்ந்தவர், உங்களையும் ஒரு பாத்திரமாக்கி, வேறொரு விதமாய் கவிதை எழுதக்கூடும்.

கண்ணகி said...

அடடா....எத்தனை ஏக்கங்கள்...சீக்கிரமா ஊருக்கு வாங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

//எங்கேயோ படித்த மாதிரி இருக்கே//


சாமி சத்தியமா நாந்தான் எழுதினேன்..


மெய்யாலுமா?????????சரி நம்பிட்டேன்.

Romeoboy said...

வேதனைகள் எல்லாம் வெற்று காகிதங்களாக மாறுவதற்கு வெகு நாட்கள் காத்து இருக்கவேண்டியது இல்லை.. உங்கள் வேதனைகள் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது.

க.பாலாசி said...

//கண்ணகி said...
சீக்கிரமா ஊருக்கு வாங்க....//

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு....

தேவன் மாயம் said...

சொல்ல முடியாத உணர்வுகளை எளிதாகச் சொல்லி விட்டீர்கள்!!!

Mugilan said...

@ பிரேமா மகள் said...
//மச்சான்னு சொல்லுங்க.... (உங்களுக்குத்தான் அண்ணன்னா பிடிக்காதே....)//
//என்னதான் இருந்தாலும் அவன் பாகிஸ்தான்காரன் இல்லையா?//

அதனால என்னங்க .. அவனும் மனுஷந்தானே!

பனித்துளி சங்கர் said...

இதை இன்னும் விடவில்லையோ அங்கும் தொடங்கிவிட்டீர்களா ?

Anonymous said...

:-)

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

Radhakrishnan said...

:) இன்னும் சில காலம் போகட்டும். தமிழ் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் மறந்து போகும். சொல்ல முடியாத மாற்றங்கள் அப்படினு கூட கவிதை எழுதலாம்.

Unknown said...

அருமையான பதிவு..

VELU.G said...

//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
//

கேட்டிருக்கிறீர்களா அது என்ன வகை ஒயின் என்று

பிரேமா மகள் said...

க.பாலாசி said...


//அடடா... எக்ஸ்லண்ட் ஃபீலிங்....//


அட... அண்ணாச்சி.. நீங்களா... பாராட்டினது.. நம்பவே முடியல.....

பிரேமா மகள் said...

Sangkavi said...

//அவர் தீவிரவாதின்னு ஒரு பிட்ட போடுங்க...
அப்புறம் யாரையுமே பார்க்க மாட்டார்...//


ஏங்க.,,. பக்கத்து வீட்டில் இருக்கற என்னையும் சேர்த்து அரஸ்ட் பண்ணவா?

பிரேமா மகள் said...

தனி காட்டு ராஜா said...
//சர்க்கரை பொங்கலை ஏன் கொடுக்கனும் ? ஒயின் -ன கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே ?//

ஹலோ.. நாங்கெல்லாம் தமிழ் பொண்னுங்க.. ஒயின் ஷாப் இருக்கிற ஏரியா பக்கமே போக மாட்டோம்,,.

பிரேமா மகள் said...

நியோ said...
//அன்பு பிரேமா பொண்ணு ...

புது உறவுகள் நம்மிடையே பிறக்கட்டும் ...
அமைதியும் ஒத்துழைப்பும் வளரட்டும் ...
யார் கண்டார் ...
நோபல் கூட உங்களுக்கு கிடைக்கலாம் ...//

என்மேல இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?

பிரேமா மகள் said...

சி. கருணாகரசு said...

//உணர்வுள்ளக் கவிதை....
உயிருள்ளக் கவிதை.
பாராட்டுக்கள்.//

நன்றிகள் தோழரே...

பிரேமா மகள் said...

dheva said...

//ஆதங்கம் நிஜம்தாங்கா....! அருமையான வெளிப்பாடு! வாழ்த்துக்கள்!//


நன்றிகள் தோழரே..

பிரேமா மகள் said...

S Maharajan said...

//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?//

//நைட் வோட்கா அடிக்க இது தான் சைடு டிஷ் அப்படின்னு சொல்லுங்க//

டேஸ்டா இருக்குமா?

பிரேமா மகள் said...

இராமசாமி கண்ணண் said...


//அங்க போய் உக்காந்து கிட்டு நீங்க ஏங்க இதல்லாம் யோசிக்கீறிங்க.//

இங்கதாங்க இதையெல்லாம் பார்க்க முடியுது..

பிரேமா மகள் said...

தமிழ் உதயம் said...

//வேறொரு நாட்டை சேர்ந்தவர், உங்களையும் ஒரு பாத்திரமாக்கி, வேறொரு விதமாய் கவிதை எழுதக்கூடும்//

~~Romeo~~ said...

//வேதனைகள் எல்லாம் வெற்று காகிதங்களாக மாறுவதற்கு வெகு நாட்கள் காத்து இருக்கவேண்டியது இல்லை.. உங்கள் வேதனைகள் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது.//

தேவன் மாயம் said...

//சொல்ல முடியாத உணர்வுகளை எளிதாகச் சொல்லி விட்டீர்கள்!!!//

புனிதா||Punitha said...
:-)
சசிகுமார் said...

//எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //


தங்கள் கருத்துக்கு நன்றி..

பிரேமா மகள் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//இதை இன்னும் விடவில்லையோ அங்கும் தொடங்கிவிட்டீர்களா //

அவனை நிறுத்துச் சொல்லுங்க.. நானும் நிறுத்தறேன்..

பிரேமா மகள் said...

VELU.G said...
//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
//

//கேட்டிருக்கிறீர்களா அது என்ன வகை ஒயின் என்று//

எனக்கு நைஜீரியா பாஷை தெரியலை.. அவளுக்கு தமிழ் தெரியலை.. என்ன பண்ண?

மேடேஸ்வரன் said...

வெளி நாடுகளில் குடியிருப்பவர்களின் இத்தகைய மன நிலை பெரும்பாலும் பகிரப்படாதது. மனதில் உள்ளதை வெளிப்படுத்த கவிதை வடிவம் தான் சிறந்தது என்பது உங்களின் இந்தக் கவிதையால் உறுதிப்படுகிறது.

சி.பி.செந்தில்குமார் said...

no problem.return to india.all problems solved.