Wednesday, June 30, 2010

நீ என்பது நானல்லவோ...

என் காலத்தின் சக்கரம் நீ!
நீ தவறிவிட்ட நிமிடம் நான்!

என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்!

என் உலகத்தின் ஆதிமானுடம் நீ!
நீ கடந்துசென்ற பாதை நான்!

என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!



என் ஓசைகளின் பரம்பொருள் நீ!
உன் ஒற்றை மெளனம்  நான்!

நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!

என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!

நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!

18 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!//

attagasam..

ஹேமா said...

நீ...நான் என்று பிரித்துப் பிரித்து வலியையே வலிக்க வைத்திருக்கிறீர்கள் வரிகளால்.

பிரதீபா said...

//நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!

என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!

நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!//

மிக அருமை !!

vasu balaji said...

:). நல்லாருக்குங்க.

க.பாலாசி said...

//நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!//

ஏம்மா இப்டி... ரொம்ப ஃபீல் பண்ண வக்கிரியே...பட் இப்படியும் சிலபேருக்கு நடந்திடுதுல்ல...

VELU.G said...

நான் நீ SUPER

அழகாக வந்திருக்கிறது

வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naan yaaru enkkethum theriyalaiyee

JS RAMKUMAR said...

ஹாய்,

" என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்! "


" நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்! "

கவிதையும் சரி,
அதற்கான புகைப்படமும் சரி
மிகவும் அருமை..

வாழ்த்துக்கள்.

-நட்புடன்
ஜெய்செல்வம் ராம்குமார்.

Jey said...

மேடம், உங்கள மாதிரியே நானும் என்னொட பூகுழி அனுபவத்தை பதிவு போட்ருக்கேன், படிங்க.
”பட்டிகாட்டானின் தீ மிதித்த (பூக்குழி) அனுபவம்”
http://pattikattaan.blogspot.com/.

Admin said...

//நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்! //

மனத்தைக் கவர்ந்துவிட்ட வரிகள்.

முனியாண்டி பெ. said...

:-)

மிகவும் அருமை

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

பிரேமா மகள் said...

நன்றி பிரியமுடன் வசந்த்

நன்றி ஹேமா

நன்றி பிரதீபா

நன்றி வானம்பாடிகள்

நன்றி வேலு

நன்றி ஜெய் செல்வம்

நன்றி சந்ரு

நன்றி முனியாண்டி

பிரேமா மகள் said...

க.பாலாசி said...
//நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!

ஏம்மா இப்டி... ரொம்ப ஃபீல் பண்ண வக்கிறியே...பட் இப்படியும் சிலபேருக்கு நடந்திடுதுல்ல...//

ஆமாங்க அண்ணாச்சி... அப்படி தூக்கி எறியற வலிதான் இங்கே அதிகம்....

பிரேமா மகள் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//naan yaaru enkkethum theriyalaiyee//

என்ன ஆச்சு சிரிப்பு போலீஸ்-க்கு?

வால்பையன் said...

இந்த விளையாட்டு எப்ப முடியும்!?

RASSI said...

'உன் நிழலில் நிம்மதி தேடும்.. அவன்மீது, நான்.. என்ற உனது காதலின் சாட்டையை விட்டெறியாதே!

Unknown said...

//என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!//

மிக அருமை !!

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க..