இருள் அறியா
என் கனவுகளுக்கு
கலர் பூசாமல் போகும்
உன் சட்டை வாசத்திற்கு
என்ன திமிர் இருக்கும்?
ஊடல் பொழுதுகள்
நமக்கு தடுப்பு சுவராக
என் துப்பட்டாவுடன்
உறவாடிக் கொண்டிருக்கிறது
உன் சட்டை வாசம்...!
உன்னோடு
நிழலான நாட்களில்
என் காதலுக்கும்
எனக்கும்
பாரமாகிப் போகிறது
உன் சட்டை வாசம்...!
எந்த சட்டத்தாலும்
தடை செய்ய முடியவில்லை...!
என் அழகான மனதை
உன் சட்டை வாசம்
அழுக்காக்கி செல்வதை...!.
ஊர் உறங்கிய பொழுதுகளில்
உன் கனவுக்குள்
நான் வாழ்வதை
கட்டியம் கூறி
பறை சாற்றுகின்றன ....
என் தாவணிக்குள்
கலந்து போன
உன் சட்டை வாசம்....
12 comments:
லாவண்யா....
கவிதை அழகு...
(விசா கிடைச்சிடுச்சா!!!)
//லாவண்யா.. கவிதை..... அழகு.//
பெயரைக் கூட கவிதையாக வாசிக்கும் அழகான மனது கதிர் அங்கிள்-க்கு மட்டுமே இருக்கிறது.. வாழ்க கதிர் அங்கிள்..
பாவம்! துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ!?
//வால்பையன் said...
பாவம்! துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ!?//
அதானே....
கவிதை நல்லாருக்கு.........
:-)
ஊடல் பொழுதுகள்
நமக்கு தடுப்பு சுவராக-அசத்தலா இருக்குங்க வார்த்தை பிரயோகம் ,உங்க காதலும் தான் !
எந்த சட்டத்தாலும்
தடை செய்ய முடியவில்லை...!
என் அழகான மனதை
உன் சட்டை வாசம்
அழுக்காக்கி செல்வதை...///
நுகர்வோர் கோர்ட்டில்கூடவா?
நல்ல கவிதை.
ஆக சட்டைதான் பிரச்சனை....
மண் வாசனை போல் ஒரு சட்டை வாசனை
நல்ல கவிதை.
Post a Comment