Tuesday, March 2, 2010

ஆட்டுக் குட்டி...

 யாருக்கும் 
அடங்காத ஆட்டுக்குட்டி
நான்!
என்னை மேய்ப்பதற்காகவே
படைக்கப்பட்ட
ஜீசஸ் நீ!


உன் காதலால்   மட்டுமே
ரட்சிக்கப்பட்டது....
இந்த ஆட்டுக் குட்டி..!


 உன் கட்டுக்கடங்கா
அன்பின் அரவணைப்பில் 
மூச்சு முட்டிப் போகிறது
இந்த ஆட்டுக் குட்டிக்கு!
ஓ ஜீசஸ் பர்கிவ் மீ..


இந்த ஆட்டுக் குட்டிக்கு
வழியும்
மொழியும்
ஜீவனுமாய் இருப்பேன்
என்கிறாய்..
உலக காதலை
ஒற்றைவரியில்
சொன்ன
என் ஜீசஸ் நீ.

என் பாரங்களை
நீ ஏற்றுக் கொண்டு
புன்னகையை தருகிறாய்!
தேவனின் கைகளில்
ஒரு  ஆட்டுக் குட்டிக்கு
அடைக்கலம் கிடைக்கிறது..

8 comments:

க.பாலாசி said...

//என் பாரங்களை
நீ ஏற்றுக் கொண்டு
புன்னகையை தருகிறாய்!
தேவனின் கைகளில்
ஒரு ஆட்டுக் குட்டிக்கு
அடைக்கலம் கிடைக்கிறது..//

இது சூப்பர்ப்....

(எல்லாம் வல்ல முனுசாமி அல்லாவின் அருளால் இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கிட்டட்டும்..ஆமேன்...)

*இயற்கை ராஜி* said...

//தேவனின் கைகளில்
ஒரு ஆட்டுக் குட்டிக்கு
அடைக்கலம் கிடைக்கிறது//

sari..sari.. purinchuthu:-))

ரோகிணிசிவா said...

ஜென்னிபர் :தாஸ் இது மாதிரி ஒரு ஆட்டுக்குட்டி உங்கிட்ட வந்தா என்ன செய்வ ?
தாஸ்: வேற என்ன டீச்சர் ,வெட்டி பிரியாணி தான்!
ஜென்னிபர் : அதே ஆடு நானா இருந்தா ?
தாஸ்: டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
அடி ஆத்தாடி ....(பாட்டு கேக்கனும் )

சுபி என்னை மன்னிக்கவும் ,எனக்கு எப்ப ஆட்டுக்குட்டி பாத்தாலும் கடலோர கவிதைகள் படம் தான் நினைப்புல வரும் !

ரோகிணிசிவா said...

சாரி , சொல்ல வந்ததையே மறந்துட்டேன் , கவிதை நல்லா இருக்கு !ம்ம்ம், என்னமோ புரியுது !அதை நான் சொல்ல மாட்டேன் !

sathishsangkavi.blogspot.com said...

அழகான ஆழமான வரிகள்...

வால்பையன் said...

ரம்ஜானுக்கு பிரியாணி கன்ஃபார்ம், அந்த ஆட்டுகுட்டிய தூக்கிட்டு வாங்கப்பா!

பிரேமா மகள் said...

நன்றி பாலாண்னா..

நன்றி இயற்கை..

நன்றி ரோகிணி

நன்றி சங்கவி.

பிரேமா மகள் said...

வால்பையன் said...

ரம்ஜானுக்கு பிரியாணி கன்ஃபார்ம், அந்த ஆட்டுகுட்டிய தூக்கிட்டு வாங்கப்பா!

பாவம் ஆட்டுக்குட்டி... விட்டுவிடுங்கள்... அதுக்கு பதிலா, நான் காக்கா பிரியாணி வாங்கித் தர்றேன்..

(என்ன பண்றது.. சென்னையில் எல்லா கடையிலேயும் அதுதான் கிடைக்குது).