சென்ற வார விடுமுறையில் என் அக்காவின் புகுந்த வீட்டிற்குச் சென்றேன். நான் ஆறாவது படிக்கும் போதே என் அக்காவுக்கு (பெரியம்மா மகள்) திருமணம் ஆகிவிட்டது. அதனால் என் பள்ளி கல்லூரி கோடைகால விடுமுறை நாட்களில் அங்கேதான் இருப்பேன். ஏப்ரல் மாதத்தில் அங்கே காளியம்மன் கோயில் திருவிழா வரும், அதைத் தொடர்ந்து கிடா வெட்டு விருந்து நடக்கும். அதற்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு, நான் மட்டும் ஜுன் மாதம் பள்ளி திறக்கையில வந்து சேருவேன்.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் இருந்து என்னால் அங்கே செல்ல முடியாமல் போயிவிட்டது. ஆக சமீபத்திய பயணம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது.. சேலம் ராசிபுரம் அருகில் உள்ள ஆண்டலூர் கேட் என்ற ஊரில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை மினிபஸ் மட்டுமே வந்து செல்லும் அக்மார்க் கிராமம் அது.
இத்தனை பில்டப் தருவதற்கு முன் என் அக்கா வீட்டைப் பற்றி சிறு விளக்கம் தருவது முக்கியம். ஒரு மலையில் அடிவாரத்தில் இருக்கும் வீடு அது. வீட்டின் பின் புறம் எப்போதும் சலசலக்கும் வாய்க்கால் ஓடை. அதனை ஒட்டி உள்ள வயலில் சோள செடிகள், பக்கத்தில் பம்பு செட், வீட்டிற்கு முன் கவுரவ தோற்றதுடன் தென்னந் தோப்பு. அதற்குள் சிறப்பு விருந்தினர்களாக கொய்யா, மாதுளை மற்றும் மருதாணி மரம். இப்போது சொல்லுங்கள் என் பயணத்தைப் பற்றி நான் பெருமை பேசலாம் தானே!
பஸ் ஸ்டாண்டிலேயே என்னை அழைத்துச் செல்வதற்கு மாமா காத்திருந்தார். அவருடன் வீடு வரை பைக் பயணம். பவுர்ணமி இரவில் ஒன்பது மணி அளவில், அந்த காட்டுப் பாதையில் நிலா வெளிச்சத்தில் பயணம் சென்றது என் பொக்கிஷ நேரத்தில் ஒன்று.
வீடு சென்றதும் சென்னையில் இருந்து ரயில், பஸ் என மாறி மாறி வந்த களைப்பில் சாப்பிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் என்னை எழுப்பியது என் அக்காவின் மாமனார். 'பிரேமா (என் பெரும்பான்மையான உறவினர்கள் என் அம்மாவின் பெயரை வைத்துதான் என்னைக் கூப்பிடுவார்கள்). பம்பு செட் போட்டாச்சு, குளிக்க போறியா" என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே நான் ஓடிவிட்டிருந்தேன். வெள்ளை நுரை பூசிவந்த அந்த தண்ணீரைப் பார்த்ததும் குளிக்க அவ்வளவு ஆசை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் நான் கற்ற நாகரிக வாழ்க்கையும் என் வயதும் அந்த வெட்ட வெளியில் குளிக்க வெட்கம் தந்தது.
அந்த ஏக்கத்துடனே வீடு திரும்பினேன். என் அக்காவின் வீட்டு வாண்டுகளுடன் சேர்ந்து அன்று முழுவதும் ஆசை தீர விளையாடிவிட்டு, நைட் சேலம் ஜங்சனில் சென்னை செல்ல, ஏற்காடு எக்ஸ்பிரஸ்காக காத்திருந்த போது, சிறு வயதில் நான் அக்கா வீட்டிற்கு போனதற்கும் இப்போதைய பயணத்திற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். அந்த உணர்வு நான் இழந்தவற்றை பட்டியல் போட்டு காட்டியது.
அந்த பட்டியல் உங்கள் மனதிலும் தோன்றலாம். இதோ இன்னும் சில நாட்களில் கோடைகால விடுமுறை வரப் போகிறது.. இங்கே நான் குறிப்பிட்ட என் பட்டியல் ஏக்கங்களில் உங்களுக்கும் ஏதேனும் இருந்தால் மரியாதையாக லீவ் போட்டுவிட்டு சிறுவயதில் உங்களை கொண்டாடிய கிராமத்திற்கு சென்று வாருங்கள்.
அந்த பட்டியல்:
* டயர் வண்டி உருட்டறது, பனை மர ஓலையில் காத்தாடி செய்றது, அரச மர இலையில் பீப்பி செஞ்சு ஊதறது,
* கூடாஞ்ச் சோறு, புளியங்கா அல்லது மாங்கா பறிச்சு, உப்பு மிளகாய் வெச்சு அரைச்சு திங்கறது,
* திருவிழா நடந்தா, சின்ன சொம்போ அல்லது குடமோ எடுத்துக் கிட்டு, சாமிக்கு தீர்த்தம் ஊத்தப்போறேன்னு சொல்லிக்கிட்டு, கூட்டத்தோடு ஆடிக்கிட்டே கோயிலுக்கு போறது.
* சவ்வு மிட்டாய் வாட்ச், தேன் மிட்டாய் வாசம்,
* பசலைக் கீரை விதையை பறிச்சு, உதட்டில் லிப்ஸ்டிக் போடறது,
*மண்ணுல தண்ணீ ஊத்தி, பிசைஞ்சு கட்டி, இட்லி செய்றது,
* வட்ட வட்ட டிசைனில் மருதானி வைக்கிறது,
*சேமியா ஐஸ், பால் ஐஸ் வாங்கித் திங்கறது,
* தென்ன மரத்துக்கு அடியில் கட்டில் போட்டு தூங்கறது,
*பழைய சாதமும் கரைச்சு குடிச்சு சின்ன வெங்காயம் தொட்டுக்கறது.
*வரப்பு மேட்டுல உட்காந்து வாழை இழை போட்டு சாப்பிடறது.
*வயல் காட்டில் வேலை நடக்கும் போது, அங்கேயே சுத்தி சுத்தி வர்றது
*தூர்தர்ஷன்ல நேயர் விருப்பத்தைக் கூட, உட்கார்ந்து பார்க்கிறது.
*பல தடவை பார்த்த சினிமாவா இருந்தாலும், ஊர் பொதுக்காசுல தலை வாசலில் திரை கட்டி படம் போடும் போது, பாய் சகிதம் ஆஜராகி குடும்பத்தோரு படம் பார்க்கிறது.
*கொள்ளு சட்னி, வெள்ளை பணியாரம், உளுந்தங்கஞ்சி, கம்பங் களி, பச்சைப் புளி ரசம்,
* ஒரு கோழியை புடிச்சுக்கிட்டு, மொத்த குடும்பமும் மாட்டு வண்டி கட்டி, கோயிலுக்கு போய் படையல் போட்டு சமைச்சு அங்கேயே சாப்படறது,
*பால் இல்லாத வரக் காப்பி அல்லது கடுங்காப்பி
*அங்கங்க மேயிற ஆட்டைப் புடிச்சு, திருட்டுத் தனமா பால் பீச்சிக் குடிக்கிறது,
*ஒடக்கான் பிடிச்சு, கழுத்தில் கயிறு கட்டி கொடுமைப் படுத்தறது..
*பட்டாம் பூச்சி பிடிக்க பின்னாடியே ஓடறது,
*ஊரில் யார் வீட்டுக்கு கார் வந்தாலும் அதன் பின்னாடியே போறது.
*ஊருக்குள்ள மைக் கட்டி வண்டி வந்து தர்ற நோட்டிஸை பத்திரமா வாங்கி வைக்கிறது..
* உண்டியலில் காசு சேர்த்து வெச்சு, திருவிழா சமயம் எடுத்து செலவு பண்றது இல்லாட்டி தீபாவளிக்கு பட்டாசு வாங்கறது.
இதில் நான் ஏதாவது சொல்லாம விட்டிருந்தா, எனக்கு நீங்க சொல்லுங்க. பட் மறக்காம ஊருக்கு போய்ட்டு வாங்க. முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்டு வாங்க.
20 comments:
மொதல்ல அப்படி ஒரு கிராமம் எங்க இருக்குனு சொல்லுங்க..
நீங்க சொல்லுறது எல்லாம் எங்க கிராமத்த விட்டு போய் நெம்ப நாளாச்சு.. :-(
கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை காம்ப ஒடைச்சு பப்பிள்ஸ் விட்டேன்... சந்தோஷமாத்தான் இருந்துச்சு... என்னவொன்னு பக்கத்துவீட்டு சின்னப்பையன் என்னைய ஒரு மாதிரி பாத்தான்... நானும் கவலப்படாம அனுபவிச்சேன்... இதுமாதிரி எப்பயாவது தோணும்...ஆனாலும் முடியறதில்ல...
நீங்க சொல்ற எல்லாமும் ‘சேம்பிளட்’ மாதிரித்தான் இருக்கு... எவ்ளவோ கடந்து வந்திட்டோம்...
நானும் இந்த வாரம் சன்டே ஊருக்கு போறேன்...
விளக்கம் எல்லாம் கிடையாது... எல்லாம் போட்டோஸ்தான்.... பாருங்க...
mmm.. nice memories
அற்புதம்...
கட்டுரை அருமை . வாழ்த்துக்கள்
///கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை காம்ப ஒடைச்சு பப்பிள்ஸ் விட்டேன்... சந்தோஷமாத்தான் இருந்துச்சு... என்னவொன்னு பக்கத்துவீட்டு சின்னப்பையன் என்னைய ஒரு மாதிரி பாத்தான்... நானும் கவலப்படாம அனுபவிச்சேன்... இதுமாதிரி எப்பயாவது தோணும்...ஆனாலும் முடியறதில்ல...////
பாலாசி நீங்க பப்பிள்ஸ் விட்டேன் இன்னு சொன்னது நீங்க நகர (நரக) வாழ்க்கைக்குள் வந்து கண்டுபிடிச்ச வார்த்தையா இருக்கும் இன்னு நெனைக்கிறேன் . அதுக்கு சமமான இடுச்சொல் மொட்டுளி விடறது இன்னு எங்க ஊருல சொல்லுவோம் .
ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க..
நிலவன்.
http://blog.nilavan.net
//அதுக்கு சமமான இடுச்சொல் மொட்டுளி விடறது இன்னு எங்க ஊருல சொல்லுவோம் .//
நன்றிங்க தலைவரே... அந்த வார்த்தைய மறந்துவிட்டேன் அதான்... நன்றி...
மனதை ஈர்த்த பதிவு
http://vittalankavithaigal.blogspot.com
vittalan@gmail.com
நினைவுகளின் பகிர்வு அருமை...
-
DREAMER
திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//மொதல்ல அப்படி ஒரு கிராமம் எங்க இருக்குனு சொல்லுங்க..///
எங்க வீட்டுக்கு வாங்க...
நன்றி அகல்விளக்கு..
நன்றி இயற்கை..
நன்றி நியாஸ்
நன்றி ரெமோ..
நன்றி வேலுப்பையன்.
நன்றி நிலவன்
நன்றி விட்டலன்
நன்றி ட்ரிமர்.
மற்றும் என் இனிய அண்ணன் பாலாவுக்கு.....
தல என்ன இது இதுக்குபோயி
நம்மூருக்கு வாங்க
ஸீஸன் கேம் தான் எல்லாம்
கோலி குண்டு கில்லி செவன்ஸ்டோன்,பம்பரம்,கிரிகெட்..
கூட்டாஞ்சோறு வித் நாட்டுக்கோழி @ கெணத்துமேடு
இப்போ கள்ளு ஸீஸன் அதுவும் உண்டு
நாங்க இன்னும் அப்படியேதான் இருக்கோம் போல
செர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா...
nongu kudukaai la vandi seiyarathu
kinathil neram theriyaamal neechal
vayakaatil marathadiyil saappaadu, thottuka appave paricha pacha mulagaai...
thottathuku thanni paaicha pogumpothu koodave poi thanni varappa etiducha parthu solrathu
elantha palam porukka povathu
aadu meikka povathu
thiruttu nongu vetti thinpathu....
ithelaam neenga senchurupeenga nu nenaikkaren, neenga sonna kiramam kandippa en school time friend gramam pakathula thaan irukum niniakaren
namakku karur erode rotil chatirathil irunthu 5 kilometer ulle poganum
ipo mini bus oru nalaiku 2 murai varuthu...muthalil ellam no us only nadaraja service
இல்லை.. தன்ஸ்.. அந்த கிராமம் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் ஆண்டலூர் கேட் என்ற ஊருக்கு அருகில் உள்ளது... சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு.. அந்த கிராமத்தின் பெயர் கூத்தம் பாளையம்..
naan ipavey ooruku poga poren aunty
super trip
முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்டு வாங்க.
இரு மாதங்களுக்கு ஒரு முறை என் சொந்த ஊர் கும்பகோணம்
சென்று வருகிறேன்
உங்கள் பதிவு எனக்கும் பதிவு எழுத தோன்றுகிறது
Hello prema... nanum athe ooru than(andagalur gate)... unga ooru peru koothampalam ellaye gurusamipalayamnu thane iruku... unga eluthu ellam nala iruku man manakum nadaiye... rombu rasichien... meka nandri... nama oooru pathi evlo perumaiya neenga enga vanthu enjoy panathuku... athum enga share paninathuku....
Post a Comment