சொல்லாமல்
ஊருக்கு
செல்லாதே!
தவிக்கிறது
உன்
என்
நம்
தலையணை!
சுவடு படிந்த
தேநீர் கோப்பை!
தூசு நிறைந்த
ஜன்னல்!
பறிக்கப்படாத
மல்லிகை மணம்!
கிழிக்கப்படாத
காலண்டர் தேதிகள்!
ஏக்கத்தில் நான்!
என அத்தனையும்
பறைசாற்றுகின்றன
நீ ஊருக்கு
சென்றுவிட்டதை!
ஒரு நாள் மேற்கு
அதற்கு அடுத்து
வடகிழக்கு
மற்றோரு நாளில்
தெற்கு
என மாற்றம் கொண்டு
உதிக்கின்றது
என் ஜன்னல் வழி
சூரியன்!
நீ ஊர் சென்ற
நாட்களில்.
உன் பயண நாட்களில்
மனதாள்வது எது?
தங்களுக்குள்
சண்டையிடுகின்றன
என் ஜிமிக்கியும்
கால் கொலுசும்!
என் கண்ணீரின் ஏக்கம்
அறியாமல்!
ஒவ்வோரு நிமிடமும்
ஆயிரக்கணக்கானோர்
பயணிக்கிறார்கள்.
புள்ளிவிபர தகவல்!
ஏனோ
நீ ஊர் சென்றால்
மட்டும்
என் உயிர்வாங்கி செல்கிறாய்!.
14 comments:
கவிதைகள் அழகான உணர்வோடு இருக்கிறது
வாவ்.....
சூப்பர்...
உணர்வுகளை கவிதைப்படுத்துவது என்றுமே அழகுதான்....
பிரிவின் வலிகள் அருமையான பதிவு ........
ரெண்டாவது கவிதை வெகு அழகு...அருமை....
மென்மையான உணர்வுகள் . அழகாய் கவிதையாய் . அருமை . வாழ்த்துக்கள் !
நீ ஊர் சென்றால்
மட்டும்
என் உயிர்வாங்கி செல்கிறாய்!.
சூப்பர் வரிகள் !
அனுபவித்து எழுதி இருக்கீங்க போல. அருமை
நல்ல கவிதைகள்..
முதல் கவிதை அருமை..
அருமை வாழ்த்துகள்....
நல்ல கவிதைகள்.. இன்னும் நிறைய எழுதுங்கள்
நன்றி கதிர் அங்கிள்
நன்றி அகல் விளக்கு
நன்றி ரவிசாந்
நன்றி பாலாண்ணா
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி ரோகிணி சிவா
நன்றி ரோமியோ
நன்றி திருஞான சம்பத்
நன்றி ஈரோடுவாசி..
நன்றி தியா
நீ ஊர் சென்றால்
மட்டும்
என் உயிர்வாங்கி செல்கிறாய்!.
சூப்பர்
நீ ஊர் சென்றால்
மட்டும்
என் உயிர்வாங்கி செல்கிறாய்!.
சூப்பர்
காத்திருத்தலின் அழகான வெளிப்பாடு !!
Post a Comment