Monday, February 8, 2010

என் காலச் சக்கரம் நீ.

நான் புள்ளி வைக்கிறேன்.
நீ கோடு போடுகிறாய்.
என் அழகான வாசல்
அழுக்காகிப் போக
சத்தமில்லாமல் இசைகிறது
ஒரு அதிகாலை ராகம்.

என்னை
சிலுவையில்
அறைவதும்
உச்சிப் பொட்டில்
முத்தமிடுவதும்
உன் விருப்பம்.
அதற்கு முன்
சொல்லிவிட்டுப் போ.
நம் குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்!


                                                                                                                                                                          
என் மீதான
ஏக்கங்களும்
தாபங்களும்
அதிகமாவதற்கு
என்ன செய்வதென்கிறாய்!
அடப்பாவி
அதற்காத்தானே
காத்திருக்கிறது
என் மஞ்சம்!


உதடு குவித்து
இதயம் நெருங்கும்
மூச்சுக் காற்றின்
காதல் நேரத்தில்
அழுத்தமாய் பதிந்து
ஆனந்த வலி தருகிறது
நீ கட்டிய தாலி!


உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில் 
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது  உன் காதல்.

7 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழமான வரிகள்...

பிரேமா மகள் said...

thanks sangavi...

க.பாலாசி said...

//உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில்
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது உன் காதல். //

சூப்பர் பாப்பா...

ஆனாலும் பாப்பாக்கள் பேசுற பேச்சாயிது.????

தேவன் மாயம் said...

என்னை
சிலுவையில்
அறைவதும்
உச்சிப் பொட்டில்
முத்தமிடுவதும்
உன் விருப்பம்.
அதற்கு முன்
சொல்லிவிட்டுப் போ.
நம் குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்!
///

என்ன வரிகள்!!!! அபாரம்!!!

buvan said...
This comment has been removed by the author.
buvan said...

//உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில்
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது உன் காதல். //

இந்த கவிதையின் கருத்து படிப்பவர்களின் மன நிலையை பொறுத்து மாறுபட வாய்ப்பு உண்டு....இதை எழுதியவர் எதை மனதில் நினைத்து எழுதினாரோ....?(அது தெரியாமல்... ஒருவேளை)நாம் தவறாக புரிந்து கொண்டு அவரை குற்றம் சாட்டுவதில் என்ன பயன்....?

ரோகிணிசிவா said...

என் அழகான வாசல்
அழுக்காகிப் போக
சத்தமில்லாமல் இசைகிறது
ஒரு அதிகாலை ராகம்........

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் !