ஏ.சி . இந்த வார்த்தை-யை சொல்லும் போதே குளிரும். ஆனால் எனக்கோ பற்றிக் கொண்டு எரியும். எல்லாம் இந்த வெட்டி பந்தாவில் வந்த விளைவுதான். என் வீட்டில் (முதலில் என் வீடு எது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சிறு வயது முதலே மாமா வீட்டில் வளர்ந்தவள். என் பூர்வீக வீட்டையே, என் வீடு என்று சொல்லாமல் அப்பா வீடு என்றுதான் சொல்வேன். தற்போதும் சென்னையில் அக்கா வீட்டில் தான் இருக்கிறேன்). ஏ.சி இல்லை. நான் படித்த அரசு பள்ளியில் ஃபேன் இருந்தது இல்லை. கல்லூரியில் ஃபேன் இருக்கும். ஆனால் போட மாட்டார்கள்.
சினிமா தியேட்டர்களிலும், உயர்தர ஹோட்டல்களிலும் தான் முதன் முதலாக ஏ.சி காற்றை நான் அனுபவித்தது. இங்கே சென்னையில் வேலைக்கு சேர்ந்தது முற்றிலும் ஏ.சி செய்யப்பட அலுவலகத்தில் தான். உள்ளே நுழையும் போது, ஜில்லென்ற காற்று வீசும். பத்தரைக்கு எல்லாம் குளிர் ஆளைக் கொள்ளும். ஏ.சியை கொஞ்சம் குறைத்து வையுங்கள் என்றால், ஆளாளுக்கு சத்தம் போடுவார்கள்.
''ஏங்க என்னமா சூடா இருக்கு. சென்னை வெயிலில் ஏ.சி இல்லாம இருக்க முடியாதுங்க'" என்று அலப்பறையை கூட்டுவார்கள். இத்தனைக்கும் அரக்கோணத்திலும், சிவகாசியிலும் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.. வெயில் வாட்டி எடுக்கும் வரண்ட பூமியில் பிறந்துவிட்டு, ஏதோ குலுமனாலியில் சம்மந்தம் பேசிய எபைக்ட்டே இவங்களிடம் இருக்கும். இது கூட பரவாயில்லை, குளிர் கொல்லும் மார்கழி மாசத்திலும் இதே நிலைதான் பாஸ்..
ரெண்டாவது மாடியில் என் அலுவலகம். ஜன்னல் திறந்தால், பச்சை நிறத்தில் கூவம் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு மழை நாளில் கூட அதை ரசிக்க விட்டதில்லை. காரணம் ஜன்னல் திறந்தால் ஏ.சி காற்று வெளியே போய்விடும். அதவை விட உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் காற்று வெளியே இருப்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பேன்?
யாரைக் கேட்டாலும் குளிருதுன்னு சொல்லுவாங்க. ஆனா ஏ.சியை நிறுத்த சொன்னா, எதோ பட்டிக்காட்டான்-ன்னு நினைப்பு. எங்கள் அலுவலகத்தில் ரெண்டு பாகமாக பிரிக்கப்பட்டு, கண்ணாடி தடுப்புகள் வைத்து, ஒவ்வொருவருக்கும் இருக்கைகள் இருக்கும். ஏ.சி பொதுவான நடைப்பாதையில் இருக்கும். எந்திருத்து வெளியே செல்லலாம் என்றாலே, காற்று முகத்தில் அடிக்கும். இதற்கு பயந்தே நான் அடிக்கடி சீட்-யை விட்டு எழுவதில்லை.
நைட் ஏழு மணிக்கும் அதே வேகத்தில் தான் ஏ.சி இருக்கும். இவங்களுக்கு மாலை பொழுதின் மயக்கத்தின் அருமை தெரியுமா? என்று புரியவில்லை.
இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அலுவலக ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ, யாரைப் பார்க்க சென்றாலும், அவர்கள் அறையில் ஏ.சி இருந்தால் முதல் காரியமாக செய்வது, நம்மை அமர வைத்து விட்டு ஏ.சி போடுவதுதான். அதுவும் வெளியே இருக்கும் பியுனை கூப்பிட்டு ஏ.சி போட சொல்வார்கள். (அது வரைக்கும் அவர்கள் எப்படி ஏ.சி இல்லாமல் இருந்தார்கள்) இதில் ஏ.சியில் போட்டு ஃபேன்-னும் போட்டு கொடுமைப் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். சார், கொஞ்சம் ஏ.சி நிறுத்த முடியுமா? என்று கேட்டால், கிண்டலா சிரித்து விட்டு, 'என்னால ஏ.சி இல்லாம இருக்க முடியாது எப்படித்தான் நீங்க இருக்கிங்களோ" என்பார்கள்.
தெரியாமல் கேட்கிறேன் இவர்கள், டாய்லெட் போகும் போதும், மார்கெட்டுக்கு காய் வாங்க போகும் போதும் முதுகில் ஏ.சியை சுமந்து கொண்டா செல்வார்கள் இல்லையே?. காரில் அலுவலகம் செல்லும் நபராக இருந்தால் பரவாயில்லை. டு விலரிலும், மாநகராட்சி பஸ்-யிலும் செல்பவர்கள் இதே கதை சொன்னால் எப்படி? எனக்கு தெரிந்து எங்கள் அலுவலகத்தில் முக்கால் வாசி பேரின் வீட்டில் ஏ.சி இல்லை. ஆனால் அவர்கள் தான் இங்கு ஏ.சிக்கு போர் கோடி தூக்குவது.
ஏ.சி இல்லாமல் இருப்பது ஏனோ, தரக் குறைவாக அல்லவா சித்தரிக்கப்படுகிறது?
1 .ஏ.சி அறையில் இருக்கும் போது, ஒருவருக்கு சளிப் பிடித்திருந்தாலோ, காய்ச்சல் இருந்தோ, அது மற்றவர்களுக்கும் கட்டாயம் பரவும்.
2 . ஏ.சி காற்றில் இருந்து வெளியே செல்லும் போது உடனே நம் மீது வெளிக் காற்று பட்டால், அது அலர்ஜியை ஏற்படுத்துவதோடு, தொற்று நோய்க்கும் வழி வகுக்கும்.
3 . ஏ.சி காற்றில் அதிக நேரம் இருக்க கூடாது. அதாவது நான்கைந்து மணி நேரத்துக்கு மேல இருந்தாலே, உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்.
4 . முடி கொட்டுவதற்கு, நம் தலையில் நேரடியாக படும் ஏ.சி காற்று ஒரு காரணம்.
5 . நமது உடலில் உள்ள இரப்பதத்தை உறிஞ்சி, தோலை சுருங்க வைக்கும்.
6 .ஏ.சி அறையில் தான் அளவுக்கு அதிகமான நோய் கிருமிகள் உள்ளன.
ஆக இத்தனை குழப்பம் விளைவித்தாலும், ஏ.சி என்பது ஸ்டேடஸ் சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றால், நம்மை விசித்திர குள்ளனாக்கி விடுகிறார்கள். அதற்கு முன் சிறு வயதில் தங்கள் வளர்ந்த விதத்தை மறக்காதீர்கள். பிறக்கும் போதே ஏ.சியுடன பிறந்திர்கள்? தெருவில் டயர் வண்டி உருட்டி, காலாற பள்ளிக்கு நடந்து சென்று, பட்டாம் பூச்சி பிடித்து, கோலி குண்டு விளையாடி, ஐஸ் பால் அடித்து- அப்போதெல்லாம் ஏ.சியிலா இருந்தீர்கள் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.
Friday, February 12, 2010
Monday, February 8, 2010
என் காலச் சக்கரம் நீ.
நான் புள்ளி வைக்கிறேன்.
நீ கோடு போடுகிறாய்.
என் அழகான வாசல்
அழுக்காகிப் போக
சத்தமில்லாமல் இசைகிறது
ஒரு அதிகாலை ராகம்.
என்னை
சிலுவையில்
அறைவதும்
உச்சிப் பொட்டில்
முத்தமிடுவதும்
உன் விருப்பம்.
அதற்கு முன்
சொல்லிவிட்டுப் போ.
நம் குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்!
என் மீதான
ஏக்கங்களும்
தாபங்களும்
அதிகமாவதற்கு
என்ன செய்வதென்கிறாய்!
அடப்பாவி
அதற்காத்தானே
காத்திருக்கிறது
என் மஞ்சம்!
உதடு குவித்து
இதயம் நெருங்கும்
மூச்சுக் காற்றின்
காதல் நேரத்தில்
அழுத்தமாய் பதிந்து
ஆனந்த வலி தருகிறது
நீ கட்டிய தாலி!
உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில்
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது உன் காதல்.
நீ கோடு போடுகிறாய்.
என் அழகான வாசல்
அழுக்காகிப் போக
சத்தமில்லாமல் இசைகிறது
ஒரு அதிகாலை ராகம்.
என்னை
சிலுவையில்
அறைவதும்
உச்சிப் பொட்டில்
முத்தமிடுவதும்
உன் விருப்பம்.
அதற்கு முன்
சொல்லிவிட்டுப் போ.
நம் குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்!
என் மீதான
ஏக்கங்களும்
தாபங்களும்
அதிகமாவதற்கு
என்ன செய்வதென்கிறாய்!
அடப்பாவி
அதற்காத்தானே
காத்திருக்கிறது
என் மஞ்சம்!
உதடு குவித்து
இதயம் நெருங்கும்
மூச்சுக் காற்றின்
காதல் நேரத்தில்
அழுத்தமாய் பதிந்து
ஆனந்த வலி தருகிறது
நீ கட்டிய தாலி!
உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில்
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது உன் காதல்.
Tuesday, February 2, 2010
பிளாஸ் பேக்
திருமணம் ஆனவர்கள் மட்டும் இந்த கட்டுரையை மேற்கொண்டு படிக்கவும். (மற்றவர்கள் மன்னிக்கவும்.)
உங்களிடம், ஒரு கேள்வி....
சின்ன வயதில் எப்படி இருந்தீர்கள்?
ஐந்து வயதில் பட்டம் விட்டு, எட்டு வயதில் சைக்கிள் ஒட்டி, பனிரெண்டு வயதில் கிரிக்கெட் விளையாடி, வயதுக்கு தகுந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள். வெறுமனே புத்தகத்தைப் படித்து, பரிட்சை எழுதி பள்ளிப் படிப்பை கடந்தவராக யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கவும் முடியாது. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசோ, நீளம் தாண்டுதலில் வாங்கிய ரெண்டாம் பரிசோ நிச்சயமாய் உங்கள் வீட்டு டி.விக்கு அருகில் இருக்கும். சரஸ்வதி பூஜைக்கு மறக்காமல் துடைத்து சந்தன பொட்டு வைப்பீர்கள்.
ஒரு காலத்தில் நீங்கள் வாலிபால் சாம்பியனாக,(அல்லது நீங்கள் எந்த துறையில் ஜொலித்திர்களோ, அந்த துறையை நினைத்துக் கொள்ளவும்). பள்ளியிலும் கல்லூரியிலும் வலம வந்திருப்பீர்கள். இபோது என்ன செய்கிறீர்கள்? பிசினஸ், மாத சம்பள வேலை, கூட்டு குடும்பம், தனிக் குடும்பம், இல்லத் தலைவி என யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஏன் கேள்வி இதுதான்.
திருமணத்திற்கு பிறகும், அப்படியே வாலிபால் கிரவுண்டுக்கு செல்கிறீர்களா? இல்லையே?
சென்னை மெரினா நீச்சல் குளத்தில், தன் பத்து வயது மகனுக்கோ, மகளுக்கோ, நீச்சல் சொல்லித் தரும் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த அம்மாவும் சலங்கை கட்டிக் கொண்டு மகளுடன் பரத நாட்டிய கிளாஸ் போவதில்லை. வீதி-யில் வளர்ந்த குழந்தையுடன் கிரிக்கெட்டும், டென்னிசும் ஆடும் அப்பாக்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனா அம்மா?
ஒரு காலத்தில் இவரும், ஏதாவது ஒரு மட்டையும் பந்துமாய் பள்ளி மைதானத்தில் திரிந்தவர்கள் தானே?
சமிபத்தில் எங்கள் ஆபீஸ் சார்பாக, கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா கலை கட்டியது. போட்டி முடிந்ததும் அங்கு பணி புரியும் ஆசிரியைகளுக்காக போட்டி நடத்தினோம். ஒன்றுமில்லை, கண்ணாடி டப்பாவுக்குள் இருக்கும் சீட்டில் என்ன எழுதி இருந்ததோ, அதை அப்படியே நடித்துக் காட்ட வேண்டும்.
பெரும்பாலும், 'வடிவேல் ஜோக் சொல்லுக, குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடவும், வெஸ்டன் பாட்டு பாடவும், ரஜினி டயலாக் ஒன்று" இந்த ரீதியில் தான் இருந்தது. அங்கு 20 -க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் இருந்தனர். ஆனால் ஒருத்தர் கூட மேடை ஏறவில்லை. அத்தனை பெரும் சொல்லி வைத்த மாதிரி , சொன்ன பதில், 'எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு"
இதில் ஹெலன் என்ற ஆசிரியை அதே கல்லூரியில் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்தவராம். அப்போது அவர்தான், கல்ச்சுரல் கோ-ஆர்டினேட்டர். பாட்டு நடனம், மிமிக்கிரி என பல பரிசு தட்டி சென்றவர், இன்று மேடை ஏறவே கூச்சப்பட காரணம் 'கல்யாணம"
சொல்லி வைத்த மாதிரி, எல்லோரும் இதையே சொல்ல போட்டி நடத்திய, எங்களுக்கு வருத்தமாகிப் போனது. அப்போதுதான் கீதா என்ற ஆசிரியை மேடை ஏறினார். அவருக்கு வந்த சீட்டு, 'கவுண்ட மணியும் , அஜித்தும் உங்களைப் பெண் பார்க்க வந்திருந்தால் எப்படி நடத்து கொள்வீர்கள்?" என்பதுதான். மிக அற்புதமாக நடித்ததோடு, வசனமும் பேசினார்.
அவருக்கான நேரம் முடிந்ததும், அத்தனை மாணவிகளும் அவரை சூழ்ந்து கொண்டனர். சந்தோசத்தில் கண்ணீரே வந்து விட்டது அவருக்கு. நாங்கள் கிளம்பும்போது, ''இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். காலேஜ் டேஸ்-ல நான் ஒரு டிராமா ஆர்டிஸ்ட். இன்னிக்கு வேலையும் வீடுமா நேரம் கழியுது. ரொம்ப நாள் கழிச்சு என்னையே நான் உணர்ந்தேன்"" என்றார். இது நிச்சயமாய் அவர் மனதில் ஏக்கத்தை திர்த்திருக்கும்.
திருமணம் ஆனா பின், இப்படி எத்தனை பேர் மேடை ஏறி இருக்கிறார்கள்? ஏன், ''மார்கழி மாசத்துல எத்தனை பேர் மேடை ஏறி பாடறாங்க? டான்ஸ் ஆடறாங்க? சினிமாவுல வராங்க?" என்று நீங்கள் கேட்கலாம்.
நான் கேட்டது, உங்கள் வீட்டு பெண்ணைப் பற்றி.........................
அப்பா நடு வாசலில் உட்கார்ந்து கொண்டு, கர்ண கொடூர குரலில் 'செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்"என்று ஆரம்பிப்பார். திருமணத்திற்கு முன் சூப்பர் சிங்கராக இருந்த அம்மா, இன்று லேசா ஹம பண்ணினாலே, 'அங்க என்ன சத்தம் என்று பதில் வரும்"
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் 'தன் மருமகள்,
இந்த வீட்டுக்கு பொருத்தமில்லை" என்றார் மாமனார். அதற்க்கு அவர் சொன்ன காரணம் மருமகள், 'வீடியோ கேம்ஸ் விளையாடுகிறாள் என்பதுதான். எனக்கு தெரிந்து, எந்த சட்டமும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை குற்றம் என சொல்லவில்லை.
எத்தனை பேருக்கு கிடைக்கிறது இப்படி விளையாடும் வாய்ப்பு. சரி, உங்க அம்மா சின்ன வயதில் என்ன துறையில் திறமைசாலி என்று தெரியுமா உங்களுக்கு? இல்லை. உங்களையே நீங்கள் தொலைத்து விட்ட பட்சத்தில், அம்மாவை எப்படி தேடுவது?
இன்னிய தேதியில், ரகுமானை விட சிறந்த இசை அமைப்பாளர் இந்தியாவில் உண்டு என்று தைரியமாய் சொல்வேன். அதே சமயம், அந்த நபருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தி சொல்வேன். நம்மில் பலரும் அப்படித்தான். அங்கிகாரம் கிடைக்காததால், அறிந்து கொண்ட கலையை அப்படியே விட்டு விடுகிறோம். கல்யாணம் ஆனதும் அது இன்னும் சகஜமாகிப் போகிறது.
கல்யாணம் என்ன, கல்லறைக்கு செல்லும் பாஸா? இல்லையே? அப்புறம் ஏன்? கல்யாணம் ஆனால் என்ன? அதே உடல், அதே மனம்தானே?
மற்றவர்கள் தப்பா நினைப்பார்களே, என்ற காரணத்துக்காகவே, நமக்கு நாமே முகத்திரை போட்டுக் கொள்கிறோம். எப்போது வெளியே..........
விசில் அடிக்காதே,
துப்பட்டா போடாமல்
வெளியே போகாதே,
சத்தம் போட்டு பேசாதே,
ஆண் பிள்ளையை
பெயர் சொல்லாதே,
நெற்றியில் குங்குமம் வை.
கருப்பு புடவை கட்டாதே.
அதிக நேரம்
போன் பேசாதே.
தலைவிரித்து வைக்காதே,
மெதுவாய் சிரி.
அடுத்ததாய் சாப்பிடு.
சினிமாககாரனை ரசிக்காதே.
ஒற்றையாய் ஒரு தாலிதானே
கட்டிக்கொண்டேன்?
அதற்கு ஏன்
இத்தனை கட்டளைகள்?
-

Subscribe to:
Posts (Atom)