Friday, March 26, 2010

பேருந்தில் காதல் தொடர்பதிவு...

பேருந்தில்  காதல்‍ என்ற தலைப்பில் தொடர் பதிவில் எழுத அழைத்த பனித்துளி சங்கர் அவர்களுக்கு நன்றி..


நானும் ரெண்டு நாளா, கண்ணை கசக்கி கசக்கி பார்க்கிறேன்...கொசுவர்த்தி சுருளும் சுத்தல..பிளாஸ்பேக்கில் எந்த காதலும் வரல.. பச்ச மண்ணாவே வளர்ந்திட்டேன் பாஸ்..

''பல ஸ்கூல் மாறி, கடைசியாய் ஆறாவது சேரும் போதுதான் எனக்கு ஒரு பள்ளி மாணவிக்கு உண்டான பாவனைகள் வந்தன.. எங்க தெருவில் உள்ளவர்களுடன் சேர்ந்து நடந்து செல்வேன்.. ஒன்பதாம் வகுப்பு செல்லும் போதுதான் வீட்டில் சைக்கிள் வாங்கித் தந்தார்கள். அப்போதும் கேங் சேர்த்தே பள்ளிக்குச் செல்வேன்.... ஒரு பெண் சைக்கிளில் சென்றால் பின்னாடி வந்து காதல் சொல்லும் காலம் அது.. பெருமைக்கு சொல்லவில்லை.. எங்க மாமா ஒரு ரவுடி... அரசியல் செல்வாக்கும் அதிகம்.. அவர் வீட்டில் நான் வளர்ந்ததால், எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் வந்ததே இல்லை.. பள்ளி படிப்பை முடித்து கோவையில் கல்லூரி சேர்ந்த பிறகுதான் நான் நானாக வாழ ஆரம்பித்தேன்.. ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு தினமும் பஸ் பயணம் தான்.. சீட்டில் அமர்ந்ததும் கனவுலகத்தில் சஞ்சரிக்கும் பழக்கம் இருந்ததால் என்னைச் சுற்றி நிகழும் மற்றவர்களின் காதல் கூட என் மனதில் பதியவில்லை... அப்படி மீறி தோழிகளுடன் பயணம் செய்யும் போது அரட்டை கச்சேரியாக போவதால் எனக்கு பேருந்து காதல் பரிச்சியம் இல்லை...

கல்லூரி இறுதி ஆண்டில் டூவிலர் வாங்கினேன்.. அதன் பின் தனியான பயணம்.. அதுவரை என்னை ஏங்க வைக்கும்.. காக்க வைக்கும் உயிரை உருக்கி அலைய வைக்கும் காதலை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.. ஆனால் எனக்கு அது வாய்க்க வில்லை.. அருகில் இருந்து அவஸ்தை தரும் அற்புத காதல் எனக்கு கிடைக்கவில்லை...
சுருக்கமாக சொல்வதென்றால் காதல் என்னை காதலிக்கவில்லை...

காதல் நினைவுகளைப் பற்றி.. என்று சங்கர் குறிப்பிட்டுப்பதை வைத்து.. என்னை தாக்கிய காதல் நினைவுகளைப் பற்றி நிச்சயமாய் சொல்கிறேன்..

பட்.. இந்த குட்டி பாப்பா‍வுக்கு இன்னும் காதல்ன்னா என்னன்னு தெரியாதே.. ஒரு பால்வடியிற முகத்துக்கிட்ட போய் ''காதல்" தப்பான வார்த்தை சொன்னா எப்படிங்க? சொல்லுங்க எப்படி எழுத முடியும்...?

12 comments:

Romeoboy said...

\\இந்த குட்டி பாப்பா‍வுக்கு //

ஏன் எதற்கு என்று யோசிக்க முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டேன் .. வேண்டாம் இந்த விஷபரிசை எல்லாம் :(((

ரோகிணிசிவா said...

"பெருமைக்கு சொல்லவில்லை.. எங்க மாமா ஒரு ரவுடி... அரசியல் செல்வாக்கும் அதிகம்.. அவர் வீட்டில் நான் வளர்ந்ததால், எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் வந்ததே இல்லை.. "
இல்லேன்னா மட்டும்!
டேய் ,பொய் சொல்லாதே !
அழகா இருக்குன்னு (????)யாரவது அவஸ்தைய காதலிப்ப்பாங்களா?

Anonymous said...

ithu ellam enga thiruntha???

க.பாலாசி said...

//சீட்டில் அமர்ந்ததும் கனவுலகத்தில் சஞ்சரிக்கும் பழக்கம் இருந்ததால்.//

தூங்குமூஞ்சிங்கறத நேரா சொன்னா என்ன??

//சுருக்கமாக சொல்வதென்றால் காதல் என்னை காதலிக்கவில்லை...//

ஹா.. ஹா... இன்னொரு காமடி... உண்மைய சொல்லட்டுமா ???

/''காதல்" தப்பான வார்த்தை சொன்னா எப்படிங்க? சொல்லுங்க எப்படி எழுத முடியும்...? //

பனித்துளி சங்கர் உங்கள தப்பா செலக்ட் பண்ணிட்டாரு... (ஏங்க சங்கர்... வேலியில போறதயெடுத்து.......)

Unknown said...

//.. பச்ச மண்ணாவே வளர்ந்திட்டேன் பாஸ்....//

என் சிகப்பு, கறுப்பு மண் இல்லைங்களா..??

வால்பையன் said...

//இந்த குட்டி பாப்பா‍வுக்கு இன்னும் காதல்ன்னா என்னன்னு தெரியாதே.. ஒரு பால்வடியிற முகத்துக்கிட்ட போய் ''காதல்" தப்பான வார்த்தை சொன்னா எப்படிங்க? சொல்லுங்க எப்படி எழுத முடியும்...?//


முடியல! அழுதுருவேன்!

*இயற்கை ராஜி* said...

உங்க கதைய கேட்ட குட்டிப் பாப்பா கதையெல்லாம் யாரு கேட்டா?


//என்னைச் சுற்றி நிகழும் மற்றவர்களின் காதல் கூட என் மனதில் பதியவில்லை//

இதை டியூப் லைட்ன்னு அர்த்ததுல எடுத்துகலாமா:-)

*இயற்கை ராஜி* said...

// ஒரு பால்வடியிற முகத்துக்கிட்ட போய்//

அடக்கடவுளே... பாலுக்கு இப்பிடி ஒரு கொடுமையான நிலமையா:-))

sathishsangkavi.blogspot.com said...

//இந்த குட்டி பாப்பா‍வுக்கு இன்னும் காதல்ன்னா என்னன்னு தெரியாதே.. ஒரு பால்வடியிற முகத்துக்கிட்ட போய் ''காதல்" தப்பான வார்த்தை சொன்னா எப்படிங்க? சொல்லுங்க எப்படி எழுத முடியும்...? //

நீங்க உண்மை மட்டும்தான் பேசுவீங்களா?

Mythees said...

பேருந்தில் காதல் கதை சூப்பருங்க !!!


இந்த பதிவ-நா படிக்கவே இல்லன்னு சொன்னா நம்பவா போறிங்க....

:))

KARTHIK said...

மேடம் டைட்டில் தப்பு

1942 a love storyன்னு இருந்திருந்தா உங்க ரொமேன்ஸ் நடந்த காலத்துக்கு ஏத்தமாதிரி இருந்திருக்கும்.

அப்புற்ம் காலேஜ்னு மொட்டையா சொன்னா எப்புடி

எந்த டுட்டேரியல் காலேஜ்னு தெளிவா சொல்லுங்க

அதுலையும் மூனுவருசம் படிச்சீங்களா
ஸ்டராங்கான படிப்புதானுங்கோ

//இந்த குட்டி பாப்பா‍வுக்கு இன்னும் காதல்ன்னா என்னன்னு தெரியாதே.. ஒரு பால்வடியிற முகத்துக்கிட்ட போய் ''காதல்" தப்பான வார்த்தை சொன்னா எப்படிங்க? சொல்லுங்க எப்படி எழுத முடியும்...?//

யாருங்க அது அவங்க பேத்திய எழுத கூப்பிட்டது

பிரேமா மகள் said...

கார்த்திக் said...

//மேடம் டைட்டில் தப்பு

1942 a love storyன்னு இருந்திருந்தா உங்க ரொமேன்ஸ் நடந்த காலத்துக்கு ஏத்தமாதிரி இருந்திருக்கும்.

அப்புற்ம் காலேஜ்னு மொட்டையா சொன்னா எப்புடி

எந்த டுட்டேரியல் காலேஜ்னு தெளிவா சொல்லுங்க

அதுலையும் மூனுவருசம் படிச்சீங்களா
ஸ்டராங்கான படிப்புதானுங்கோ //
ஒருமுறை எனக்கும் நண்பர் கார்த்திக்கும் இடையே யார் மிக நல்லவர் என்ற போட்டி நடைபெற்றது;.. அதில் நடைபெற்ற தேர்தலில்.. குட்டி பாப்பாவாகிய நான் 'மிக நல்ல உள்ளம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டேன்.. அதில் இருந்து என் மீது கார்த்தி மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறார்.. ஆக பொது ஜனங்களே யாரும் கார்த்தியின் வார்த்தைகளை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..