Friday, July 9, 2010

எஸ்க்கியூஸ் மீ... எனக்கு ஒரு டவுட்...

வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் டி..வி.டி மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த பதிவு.

டவுட் நெ 1:
                          நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது,  பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே?  அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?

அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?

டவுட் நெ 2:
                          மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்),  அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும்  ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.

ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?

டவுட் நெ 3:
                   ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?

வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?

டவுட் நெ 4:
                        ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?

அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?

(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)

டவுட் நெ 5:

ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?

சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?


டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?

டவுட் நெ 7:

அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?

(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)

டவுட் நெ 8:

கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?

நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?


டவுட் நெ 9:

வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?

டவுட் நெ 10:

எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில?  அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது?  அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?

பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..

52 comments:

தமிழ் அமுதன் said...

என்னங்க...! என்னங்க ..! இப்ப்டியெல்லாம் சந்தேகம்..?

சரி ஒரு டவுட்டுக்கு மட்டும்

//அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?//

இப்போ தேட்டர்ல படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஹீரோ வெளிநாடு போக போறார்..! விசா அப்ளை பண்ணி இருக்கார் விசா கிடைக்க ஒரு வாரம் ஆகும் அதனால படம் பாக்குரவங்க எல்லாம் போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வந்து மீதி படம் பாருங்கன்னு சொன்னா என்ன செய்ரது..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதான் குருவி படம் கலைஞர் டிவி-ல ஒடிட்டு இருக்கு. அதுல எதுனாச்சும் டவுட்டு இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வானவில் படத்துல உமா fail ஆயிடுவாங்க. அப்ப அர்ஜுன் சோக பாட்டு பாடுவாரு. சோகமா இருக்குற பொண்ணுகிட்ட சோக பாட்டா படுவாங்க. வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு குத்து பாட்டுக்கு ஆடிருக்கலாமே. அந்த பொன்னும் எந்த பாடத்துல fail-னு தெரிஞ்சப்புரம் தற்கொலை பண்ணிருக்கலாம்.

பனித்துளி சங்கர் said...

//////நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது, பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே? அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?

அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?////////


இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான்
அதனால்தான் .நாம் இதுபோன்ற காட்சிகளை திரையரங்குகளில் சென்று பார்க்கிறோம் . நீங்கள் சொல்வதுபோல் உண்மையாக எல்லோருக்கும் இது போன்று காதல் வந்துவிட்டால் ஒருவரும் சினிமாவே பார்க்க மாட்டாங்களே !

சிநேகிதன் அக்பர் said...

எல்லாத்துக்கும் டைரக்டர்தாங்க காரணம்.

நல்ல காமெடி :)

நசரேயன் said...

ரெம்பவே வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க போல

Romeoboy said...

ஏய் யார்பா அந்தாண்ட .. இந்த பொண்ணுக்கு ஏதாவது வேலை குடுத்து எங்களை காப்பாத்துங்க ப்ளீஸ்..

ஏன் ஏன் ஏன் இந்த கொலைவெறி.

Romeoboy said...

\\ உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா.//

லண்டன்ல இருக்குறதுநாள ஆட்டோ வராதுன்னு நினைக்காதிங்க .. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ஈரோடு பக்கம் தான் வந்து ஆகணும்..

Anonymous said...

நம்ம ஊர் படம் பாக்கறதை விட்டுட்டு இப்ப இருக்கற ஊர் படம் பாருங்க. வேற மாதிரி டவுடு வரும்.

Mythees said...

:)

மங்குனி அமைச்சர் said...

ullen teacher

க.பாலாசி said...

//நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது//

எல்லாத்தையும் படிச்சப்ப கூட நான் இப்டி விழுந்து விழுந்து சிரிக்கல... ஆனா கடைசியா போட்டியே ஒரு மேட்டரு... அய்யோ.. முடியல....

அதுசரி எல்லாமே தமிழ்படத்துல மட்டும்தான் வருதா?

பிரேமா மகள் said...

தமிழ் அமுதன் said...
//இப்போ தேட்டர்ல படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஹீரோ வெளிநாடு போக போறார்..! விசா அப்ளை பண்ணி இருக்கார் விசா கிடைக்க ஒரு வாரம் ஆகும் அதனால படம் பாக்குரவங்க எல்லாம் போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வந்து மீதி படம் பாருங்கன்னு சொன்னா என்ன செய்ரது..?//

இல்லைங்க.. அவர் விசா-வுக்கு அப்பிளை பண்ணற மாதிரியாவது ஒரு நிமிட சீன் வைக்கலாமே?

பிரேமா மகள் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இப்பதான் குருவி படம் கலைஞர் டிவி-ல ஒடிட்டு இருக்கு. அதுல எதுனாச்சும் டவுட்டு இருக்கா//

சாரி.. நான் இன்னும் குருவி படம் பார்க்கலை.. பார்த்திட்டு என் டவுட்டை கேக்கறேன்..

பிரேமா மகள் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான்
அதனால்தான் .நாம் இதுபோன்ற காட்சிகளை திரையரங்குகளில் சென்று பார்க்கிறோம் . நீங்கள் சொல்வதுபோல் உண்மையாக எல்லோருக்கும் இது போன்று காதல் வந்துவிட்டால் ஒருவரும் சினிமாவே பார்க்க மாட்டாங்களே//

அப்புறம் ஏங்க, இந்த பயபுள்ளங்க இப்படி சினிமா எடுக்குது?

பிரேமா மகள் said...

அக்பர் said...
எல்லாத்துக்கும் டைரக்டர்தாங்க காரணம்.//

இல்லங்க, ரசிகர்களோட டேஸ்ட் இப்படித்தான்ன்னு தப்பு கணக்கு போட்டிருக்காங்க..

பிரேமா மகள் said...

நசரேயன் said...
ரெம்பவே வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க போல//


அதே தான் பாஸ்.. தெலுங்கு படம் ஹிந்தி படம்-ன்னு எதையும் விட்டு வைக்கிறது இல்லை.

ஈரோடு கதிர் said...

|| வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?
||

இனிமே இப்படி இடுகை எழுதினா...

உங்க அப்பா அம்மா கடத்திடுவேன் ஆமா

பிரேமா மகள் said...

ℛŐℳΣŐ ♥ said...
//ஏய் யார்பா அந்தாண்ட .. இந்த பொண்ணுக்கு ஏதாவது வேலை குடுத்து எங்களை காப்பாத்துங்க ப்ளீஸ்.. //

இன்னும் கொஞ்சம் சத்தமா பேசுங்க.. அப்பத்தான் லண்டன் வரைக்கும் கேக்கும்..

பிரேமா மகள் said...

♥ ℛŐℳΣŐ ♥ said...
//லண்டன்ல இருக்குறதுநாள ஆட்டோ வராதுன்னு நினைக்காதிங்க .. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ஈரோடு பக்கம் தான் வந்து ஆகணும்//

நாங்க பிளைட்டில் வந்து இடிச்சிடுவோம்..

பிரேமா மகள் said...

சின்ன அம்மிணி said...
//நம்ம ஊர் படம் பாக்கறதை விட்டுட்டு இப்ப இருக்கற ஊர் படம் பாருங்க. வேற மாதிரி டவுடு வரும்.//

அதுக்கு நமக்கு இங்கிலீஷ் புரியணும்-ல.... அது தான மேட்டரு?

பிரேமா மகள் said...

மங்குனி அமைச்சர் said...
//ullen teacher//

அட.. இந்த டவுட்டுக்கு எதுக்குங்க இவ்வளவு மரியாதை?

பிரேமா மகள் said...

க.பாலாசி said...
//அதுசரி எல்லாமே தமிழ்படத்துல மட்டும்தான் வருதா?//

தமிழன் தமிழனைத்தானே குத்தம் சொல்ல முடியும்..

Anonymous said...

ஏம்மா உன் டவுட்டுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா?

RASSI said...

வணக்கமுங்க! விமர்சனமும் விதண்டாவாதங்களும் ஒருத்தருக்கு எந்தளவுக்கு தெறியுமோ! அந்தளவுக்கு ஈசிங்க,


உங்கள் டவுட்டுக்கான பதில் உங்களுக்கே தெரிந்திருக்கிறதல்லவா?
இது சினிமாவை உருவாக்கும் எங்களுக்கும் தெரியும்.

நீங்க எல் கே ஜி பொண்ணுன்னு சொன்னதால்! இந்த விடயம் ரொம்ப அழகுங்க..

அபி அப்பா said...

\\ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதான் குருவி படம் கலைஞர் டிவி-ல ஒடிட்டு இருக்கு. அதுல எதுனாச்சும் டவுட்டு இருக்கா? \\

சனி மாலை குருவி படம் போறதா போட்ட விளம்பரங்கள் பார்த்த போதே எனக்கும் இது போல டவுட் எல்லாம் வந்துச்சு. அந்த பாதிப்புல தான் பதிவே போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சரியா?

அன்புடன் நான் said...

மொழி தெரியாட்டியும் பரவாயில்ல.... ரெண்டு மூனு சீன மொழிப்படம் பாருங்க..... விசா இல்லாம இல்ல விமானமே இல்லாம பறந்தே போவாங்க....

அன்புடன் நான் said...

”தமிழ்ப்படம்” அப்படின்னு ஒரு தமிழ்ப்படம் இருக்கு அத பாருங்க... சில விடைகள் கிடைக்கும்... மிக சிரிப்பாவும் இருக்கும்.

அன்புடன் நான் said...

ஏந்தளத்தில ஒரு படம் போட்டிருக்கேன் .... வெட்டியாத்தான இருக்கிங்க அத பாருங்க.

பா.ராஜாராம் said...

டவுட் நெ:1
இல்லை, ஆனா இருக்கு.

டவுட் நெ: 2
ஏன்னா, கடப்பாரை நீச்சு மாதிரி படிக்கட்டு நீச்சு தெரியல.

டவுட் நெ: 3
எப்படி ரெண்டு வில்லன் குடும்பத்தை மெயிண்டன் பண்ண முடியும் ஒரு ஹீரோவால்?

டவுட் நெ: 4
அது அப்படித்தான்.

டவுட் நெ:5
ரெண்டுமே கொடுமை. அதிலும் ரெண்டாவது மகா கொடுமை. :-)

போதும் சுபி. அடுத்த செமஸ்ட்டரில் பார்துக்கரலாம்.

சௌந்தர் said...

இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா//
இது தான் அதி பயங்கர காமெடி.

எனக்கு ஓரு டவுட் விஜய்க்கு செஸ் விளையாட தெரியுமா....

மாதேஸ் said...

ada pavigalla...

ipdi kooda doubt kekalama??

Prema magal (unga peru thana??).. neenga intha concept-lam use pannaama oru tamil padam yedunga...

1st show 'theatre full' aagum!!!

1 doubt... theatre-la yen 'house full'-nu board poduranga?? 'theatre full'-nu board podalamla??

சசிகுமார் said...

//இப்போ தேட்டர்ல படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஹீரோ வெளிநாடு போக போறார்..! விசா அப்ளை பண்ணி இருக்கார் விசா கிடைக்க ஒரு வாரம் ஆகும் அதனால படம் பாக்குரவங்க எல்லாம் போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வந்து மீதி படம் பாருங்கன்னு சொன்னா என்ன செய்ரது. //

ரிப்பீட்டேய்

பிரேமா மகள் said...

திரவிய நடராஜன் said...
ஏம்மா உன் டவுட்டுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா?//


சொல்லுங்க சார்..

பிரேமா மகள் said...

திரவிய நடராஜன் said...
ஏம்மா உன் டவுட்டுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா?//


சொல்லுங்க சார்..

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...
|| வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?
இனிமே இப்படி இடுகை எழுதினா...

உங்க அப்பா அம்மா கடத்திடுவேன் ஆமா//

இப்ப என்ன நீங்க ஹீரோ-ன்னு சொல்லவர்றீங்க.. அதை நாங்க ஒத்துக்கணும்.. அப்படித்தானே?

பிரேமா மகள் said...

ரசிகரன் said...
வணக்கமுங்க! விமர்சனமும் விதண்டாவாதங்களும் ஒருத்தருக்கு எந்தளவுக்கு தெறியுமோ! அந்தளவுக்கு ஈசிங்க,
உங்கள் டவுட்டுக்கான பதில் உங்களுக்கே தெரிந்திருக்கிறதல்லவா?
இது சினிமாவை உருவாக்கும் எங்களுக்கும் தெரியும்.
நீங்க எல் கே ஜி பொண்ணுன்னு சொன்னதால்! இந்த விடயம் ரொம்ப அழகுங்க..//

அப்படிங்களா? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரசிகரன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இத்தனை நாள் இங்க இருந்துட்டு அங்க போய் டிவிடில பாக்கரப்ப டவுட்டு வருதாங்க.

வால்பையன் said...

//எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது..//

லண்டன் பாவம்!

லகுட பாண்டி said...

கேள்வி நெ 11: வேலை வெட்டி உங்களுக்கு இல்லை. சரி!!!!! ஆனால் எங்களுக்கும் இல்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

பிரேமா மகள் said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//இத்தனை நாள் இங்க இருந்துட்டு அங்க போய் டிவிடில பாக்கரப்ப டவுட்டு வருதாங்க.//

அங்க தியேட்டர்-ல காசு குடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தோம். இங்க ஓ.சியில பார்க்கறம்ல.. அப்ப வாய் பேசத்தானே வேணும்?

பிரேமா மகள் said...

வால்பையன் said...
//எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.

லண்டன் பாவம்//

வேற எதாச்சு, சொல்லுங்க பாஸ்..

பிரேமா மகள் said...

laguda paandi said...
கேள்வி நெ 11: வேலை வெட்டி உங்களுக்கு இல்லை. சரி!!!!! ஆனால் எங்களுக்கும் இல்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்//

ஹலோ.. நான் கேள்விதானே கேட்டேன்.. உங்களையும் படம் பார்க்க சொன்னேனா? ஏங்க ஒரு சின்ன புள்ளையை கஷ்டப்படுத்தறீங்க?

VELU.G said...

உங்க கேள்வியெல்லாம் நல்லாதாங்க இருக்கு ஆனா

laguda paandi said...

கேள்வி நெ 11: வேலை வெட்டி உங்களுக்கு இல்லை. சரி!!!!! ஆனால் எங்களுக்கும் இல்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

Repeatttttttttttttt

KARTHIK said...

நட்பு சென்னைவர்ர ஹீரோவுக்கு எல்லா இடத்துக்கும் வழிகேக்காமா போக தெரியுது அது தான் எனக்கு பெரிய ஆச்சர்யமா இருக்கும் :-))

பிரேமா மகள் said...

கார்த்திக் said...
நட்பு சென்னைவர்ர ஹீரோவுக்கு எல்லா இடத்துக்கும் வழிகேக்காம போக தெரியுது அது தான் எனக்கு பெரிய ஆச்சர்யமா இருக்கும் :-))//

அது கூட பரவாயில்லை.. சரியா அவர்க்கிட்டதான் சிட்டியிலேயே பெரிய தாதா மோதுவாரு..

'பரிவை' சே.குமார் said...

என்னங்க ... இப்ப்டியெல்லாம் சந்தேகம்..?

உங்கள் டவுட்டுக்கான பதில் உங்களுக்கே தெரிந்திருக்கிறதல்லவா?

vinu said...

hope you did a detailed research ok ok now i agree you don't have any occupation[as you mentioned on your profile]

சி.பி.செந்தில்குமார் said...

pls write how to make 50 coments instead of having 10 members.hi hi just for fun.dont take serious

தாராபுரத்தான் said...

டி்.வி பெட்டி முன்னாலேயே உட்கார வேண்டாம் அப்படின்னு சொன்னா கேட்டாத்தானே..

பவள சங்கரி said...

அடடா, எதுக்கு திட்டோனும்? கூல்.....

Unknown said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...