Sunday, November 20, 2011

பத்திரிக்கையில் வந்த என் ஆர்டிக்கிள்

நினைக்கும் போதே கோபம் எல்லை மீறி வருகிறது. எழுத உட்கார்ந்தால் இன்னும் இன்னும் டென்ஷன் தான் எகிறுகிறது. எல்லாம் இந்த தமிழ் சினிமாவின் விளைவுதான்.



சமீபத்தில் நான் பார்த்த படங்கள்தான் இந்த கடிதம் எழுதக் காரணம். அவன் இவன் படம் பார்த்த எல்லா பெண்களுக்கும் மனசில் முள்ளாய் குத்திய விசயம் அதில் வரும் ஒரு வசனம். ஹீரோவான விஷால், `பெண்களுக்கு பேண்டில் ஜிப் இருக்கா? அப்படி இருந்தா அந்த ஜிப் எதற்கு?`` என ஹீரோயின் ஜனனி ஐயரைப் பார்த்து கேட்பார். உடனே ஹீரோயினுக்கு வெட்கம் வந்து கூடவே காதலும் வரும். நியாயமாய் இப்படி ஒரு கேள்வி கேட்டவனை காலில் கிடப்பதை கழட்டி அடித்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு காதல் வருகிறது. இத்தனைக்கும் அந்த ஹீரோயினுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம்.

போலீஸ் யூனிபார்ம் போட்ட பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், வேறு என்னத்தைச் சொல்லுவது? அடுத்து தேநீர் விடுதி என்ற படம். அதில் ஹீரோ, `பருவமடைந்த பெண்களுக்கு உண்டான அடையாளம் உன்னிடம் இல்லை` என ஹீரோயின் யிடம் சொல்வார். என்ன அந்த அடையாளம் என அந்தப் பெண் கேட்கும் போது, கேவலமான கமெண்ட் அடிப்பார். அந்த வெட்கத்தில் ஹீரோயினுக்கு காதல் வருகிறது.


இந்த தமிழ் சினிமாக்கள் ஏன் பெண்களை இப்படி சித்தரிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் `ஈவ் டீசிங்` குற்றத்துக்குள் வர வேண்டியது. ஆனால் அந்த கதாநாயகிகளுக்கு காதல் வந்தது போல் காட்சி அமைத்திருக்கிறார்கள்.


அப்போ, ஈவ் டீசிங் செய்வதாலும், பெண்ணை கேவலப்படுத்தி கமெண்ட் அடிப்பதாலும் ஒரு பெண்ணுக்கு காதல் வருமா? என்ன கொடுமை இது?


எம்.ஜீ.ஆர், சிவாஜி காலத்தில் ஹீரோ தன் பாட்டுக்கு இருப்பார். ஹீரோயின்கள் தேடிப் போய் காதலித்தார்கள். ரஜினி, கமல் காலத்தில் ஹீரோயின் மனதைக் கவர, `கண் தெரியாதவர்களுக்கு உதவுவது, சிறு பிள்ளைகளுடன் விளையாடுவது, ஹேண்ட் பேக் திருடியவனை ஓடிப் பிடிப்பது` என காட்சிகள் வரும்.


விஜய், அஜீத் வருகை சமயங்களில், ஒரு முறை தெரியாமல் ஹீரோவும் ஹீரோயினும் இடித்துக் கொண்டாலே காதல் வந்து மலேசியாவுக்கு டூயட் பாடப் போனார்கள். தனுஷ், சிம்புவும் திரைக்கு வந்த போது, வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவனையும், நடு ரோட்டில் நாலு பேரை போட்டு அடிப்பவனையும் ஹீரோயின்கள் காதலித்தார்கள். இப்போ ஈவ் டீசிங் காலமாயிற்று. வாழ்க தமிழ் சினிமா.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, யாரேனும் சினிமாக்காரர், `அதெப்படி சமூதாயத்தில் நடக்கிறத்தைத் தான் நாங்க சொல்லறோம். மத்த மொழி சினிமாவைப் பார்த்தீங்கன்னா?` என்று பேச ஆரம்பித்தால் நானும் பக்கம் பக்கமாய் பேசுவேன்.


தமிழ் சினிமாவைப் பார்த்துதான், இந்த சமுதாயம் சில விஷயங்களை பின்பற்றுகிறது. உடை, ஹேர்ஸ்டைல், நண்பர்களை அழைக்கும் விதம், வீட்டில் பொய் சொல்லும் விதம் என பல அம்சங்களில் இளைஞர்களுக்கு சினிமாதான் முன்னோடியாக இருக்கிறது. காதல் என்னும் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் சினிமாதான் அவர்களுக்கு வழிகாட்டி.

இந்த நிலையில், பொறுக்கித்தனம் செய்பவனையும், முகம் முழுக்க தாடியுடன், அழுக்கு லுங்கியில், கையில் சிகரெட்டுடன் திரிபவன் மீது கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு காதல் வருகிறது என்றால், தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.


ஆக ரவுடியைத்தான் இந்த காலத்துப் பெண்கள் விரும்புகிறார்களா? குடிகாரன் ஒருவன் ரோட்டில் வம்பு இழுத்தால், ஒன்று ஒதுங்கி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் `பளார்` என அறைய வேண்டும். அதை விடுத்து அவன் மேல் மையல் வருவதாக காட்சி அமைப்பதன் மூலம் தமிழ் சினிமா சொல்ல விரும்புவது என்ன? இல்லை இப்படி பொறுக்கிகளை தேடிப் பிடித்து காதலிக்கும் அளவுக்கு முட்டாள்களா இன்றைய பெண்கள்? படித்த பெண்களின் ரசனை இந்த அளவுக்கா கீழ் இறங்கி விட்டது?


எம்பது-க்கும் முந்தைய கால சினிமாக்களில், வேலை பார்த்து குடும்பத்தையும் கவனித்த ஹீரோவும் ஹீரோயினும் காதலித்தார்கள். தொன்னூறு சமயத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் காதலித்தார்கள். இப்போது மீசை முளைக்காமல் அரை டவுசரில் சுற்றுபவனும், குழந்தைத்தனம் மாறாத பதிமூன்று வயதுப் பெண்ணும் காதலிக்கிறார்கள்.
படம் பார்க்கும் போதே, இந்த காதல் தேவையா, டைரக்டர் இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுங்க` என தியேட்டருக்குள்ளேயே கத்த தோன்றுகிறது.

நிஜம் வேறு, நிழல் வேறு.. நீங்கள் ஏன் சினிமாவை பார்த்து வாழ்க்கையோடு குழப்பிக் கொள்கிறீர்கள் என கேட்க்கலாம். இன்றைய இளசுகள் சினிமாவில் வரும் சில காட்சிகளின் அடிப்படையில் தவறான பாதையில் செல்கிறார்கள் என்பது அன்றாடம் வரும் செய்தித்தாள்கள் காட்டுகின்றன. ஊர் அறிந்ததே இத்தனை இருக்கும் போது, வெளியே தெரியாதது எவ்வளவு இருக்கும்?

ஏழைகளுக்கு உதவுவது, ஊனமுற்றோரை மதிப்பது, படிக்க இல்லாதவருக்கு பீஸ் கட்டுவது என எத்தனையோ நல்ல விஷயங்களை சினிமாக்காரர்களைப் பார்த்துதான் பொது மக்களும் செய்கிறார்கள். இதில் பெண்களில் ரசனையை கேலி செய்து அவர்களை முட்டாளாகக் காட்டுவதில் யாருக்கு என்ன லாபம்?
சினிமாவில் கோலோச்சும் பெண்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.



6 comments:

அகல்விளக்கு said...

Hats off...

Muthu Rathinam said...

" முற்றிலும் உண்மை , இந்த முட்டாப்பசங்களை திருத்த முடியாது ,

என் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் பையன் , சினிமாவில் வந்த " எப்படி, எப்படி

சமைஞ்சது எப்படி ? - என்ற பாட்டைக் கேட்டு , அவன் அப்பாவிடம்

" அப்பா , சமைஞ்சது எப்படி -அப்படின்னா என்னப்பா ?-எனக் கேட்டான் .

அவருக்கு முகம் பேய் அறைந்தது போல ஆகி விட்டது .

பிறகு அவர் " டேய் , அது சமைஞ்சது இல்லடா , சமைப்பது எப்படி ,

அப்படின்னு பாடுறாங்க -என சமாளித்தார்.

நான் கேட்கிறேன் -இதையே அந்த பாட்டை எழுதிய கபோதியிடம் ,

மகனோ , அல்லது மகளோ கேட்டாள் என்ன பதில் சொல்லியிருப்பான்.?

--
muthu_rathinam@blogspot.com
mr.muthurathinam@rediffmail.com
00966-563396648

Muthu Rathinam said...

" முற்றிலும் உண்மை , இந்த முட்டாப்பசங்களை திருத்த முடியாது ,

என் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் பையன் , சினிமாவில் வந்த " எப்படி, எப்படி

சமைஞ்சது எப்படி ? - என்ற பாட்டைக் கேட்டு , அவன் அப்பாவிடம்

" அப்பா , சமைஞ்சது எப்படி -அப்படின்னா என்னப்பா ?-எனக் கேட்டான் .

அவருக்கு முகம் பேய் அறைந்தது போல ஆகி விட்டது .

பிறகு அவர் " டேய் , அது சமைஞ்சது இல்லடா , சமைப்பது எப்படி ,

அப்படின்னு பாடுறாங்க -என சமாளித்தார்.

நான் கேட்கிறேன் -இதையே அந்த பாட்டை எழுதிய கபோதியிடம் ,

மகனோ , அல்லது மகளோ கேட்டாள் என்ன பதில் சொல்லியிருப்பான்

muthu_rathinam@blogspot.com
mr.muthurathinam@rediffmail.com
00966-563396648

VELU.G said...

ஐயோ அம்மா நானில்லைங்கோ உட்ருங்கோ

Sivaranjani said...

U r right, Its my view on Tamil cinema,
http://theblossomingsoul.blogspot.com/2011/12/blog-post.html

Yoga Computers said...

உங்கள் கோபம் போல எனக்கும் உண்டு. இங்கே காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்ய ஒரு கும்பல் உண்டு. சினிமாவிலும் அப்படித்தான். நேற்றைய சினிமா இன்றைய வரலாறு. இன்றைய சினிமா நாளைய வரலாறு இதை புரிந்துகொள்ளாமல், இல்லாத நிகழ்வுகளை படமாக்கி வருங்கால சந்ததிகளுக்கு தப்பான எண்ணத்தை உருவாக்கிட போறாங்க.