Wednesday, June 9, 2010

அன்றிலிருந்து பூக்கள் பிடிக்கவில்லை


காலையில வாசல் தெளிக்கவும்
மணமணக்கும் பூவோடுதான்
லட்சுமி அத்தை வருவாள்!

முதல் குழந்தை பெத்துக்க
டவுன் ஆஸ்பத்திரிக்கு போனப்ப
மறக்காம பூ வெச்சிக்கிட்டாள்!

‘நீ வாக்கப்பட்டது
என் மகனுக்கா? இல்லை
மல்லிகை செடிக்கான்னு?
கேலியா பாட்டி கேட்பாள்!

பூ வாங்கன்னு போன
துரை மாமா, ராக்காயி கூட
ஓடினதால மல்லிகை புடிக்கலை.
‘இந்தியாவின் தேசிய பூ
தாமரை-ன்னு சொன்னது
பாரதி டீச்சர்தான்!

தண்ணீரில் ஒட்டாத தாமரை
இலையாட்டம், குடிகார புருஷனை
விலகி வந்தாங்க டீச்சர்.

அடம் புடிச்சு அழுதேன்னு
தஞ்சாவூரிலிர்ந்து பத்து ரூபாய்க்கு
ரெண்டு பூ வாங்கித் தந்தாங்க!

விபத்துக்கு டீச்சர் பலியாகி,
இறுதி ஊர்வலத்துல பார்த்ததுல
தாமரை பூவை புடிக்கலை! பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!

நேரு மாமா கணக்கா
சட்டையில பூ தைச்சு திரிவேன்
பள்ளிக் கூடம் போறப்ப!

ஒரு லட்சம் காசிருந்தாலும்
ரோசா பூவா வாங்கிருவான்னு
சிநேகிதக்காரங்க சொல்லுவாங்க!

காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
 மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதுல ரோசா புடிக்கலை...

31 comments:

க ரா said...

நல்லா இருக்குங்க.

S Maharajan said...

ஆஹா இது குட்டி பிசாசு
எழுதுய கவிதைய?
சுபி கவிதா ரொம்ப நல்ல இருங்குங்க

ப்ரியமுடன் வசந்த் said...

///காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதிலிர்ந்து ரோசா புடிக்கலை...
///

சீரியாசா படிச்சுட்டு வந்தேனுங்க கட்சீல இப்டி சிரிப்பு வர வச்சுட்டீங்களே...

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்களும் , அதற்குத்தகுந்த வார்த்தைகள் தொடுப்பும் அருமை !

prince said...

எனக்கும் புடிக்கலங்க ...............பூக்களை பிடிக்கலைன்னு சொல்றது ............பாவம் அதுக என்ன தப்பு செய்தது...மன்னிச்சு திரும்பவும் கூட்டணி வச்சுக்குங்க....இல்லன்ன அதுக மனசு வருத்தப்படும்......எய்தவன் அங்கிருக்க அம்பை குறை சொன்ன கதையா இல்ல இருக்கு ????

Chitra said...

அப்போ எந்த பூவு தான் பிடிக்குமுங்க? :-)

*இயற்கை ராஜி* said...

oru poovuku poo pidikathaaaa..:-) enna kodumai subi ithu?

VELU.G said...

//Blogger ப்ரின்ஸ் said...

எனக்கும் புடிக்கலங்க
//

எனக்கும் தாங்க

Radhakrishnan said...

பிடிக்காம போனதற்கான காரணங்கள் சோகமாகவே இருக்கும் எனும் அழகிய தத்துவம் சொல்லும் நல்ல கவிதை.

ரோகிணிசிவா said...

//
பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!//
ennanu solluvwen , enga poi solluven , inth kodumaiya kekka yaarumae illaiyaa ,

ஈரோடு கதிர் said...

சுபி...
கவிதை நல்லாயிருக்கு

//*இயற்கை ராஜி* said...
oru poovuku poo pidikathaaaa..:-) //

ராஜி இது... ரொம்ப ஓவர்..

வால் பையன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

settaikkaran said...

மல்லிகை பிடிக்காதா? ஆனா, கவிதை நல்லாயிருக்குங்கோ! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்போ எந்த பூவு தான் பிடிக்குமுங்க? :-)

//

நட்பூ,சிரிப்பூ

பிரேமா மகள் said...

இராமசாமி கண்ணண் said...

//நல்லா இருக்குங்க.//

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//புகைப்படங்களும் , அதற்குத்தகுந்த வார்த்தைகள் தொடுப்பும் அருமை !//

V.Radhakrishnan said...

// அழகிய தத்துவம் சொல்லும் நல்ல கவிதை//

வெறும்பய said...

//நல்லா இருக்குங்க.//

சேட்டைக்காரன் said...

//கவிதை நல்லாயிருக்குங்கோ! //

உங்க நல்ல மனசுக்கு...எப்படி பாராட்டறதுன்னு தெரியலையே?

பிரேமா மகள் said...

ப்ரியமுடன்...வசந்த் said...

//சீரியாசா படிச்சுட்டு வந்தேனுங்க கட்சீல இப்டி சிரிப்பு வர வச்சுட்டீங்களே...//

எங்க சங்கத்தோட நோக்கமே அது தானே?

பிரேமா மகள் said...

ப்ரின்ஸ் said...
//பாவம் அதுக என்ன தப்பு செய்தது...மன்னிச்சு திரும்பவும் கூட்டணி வச்சுக்குங்க....//


யோசிச்சு நாளைக்கு சொல்லட்டா?

பிரேமா மகள் said...

Chitra said...

//அப்போ எந்த பூவு தான் பிடிக்குமுங்க? :-)//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்போ எந்த பூவு தான் பிடிக்குமுங்க? :-)

பு-ன்னகை... சரிங்களா?

பிரேமா மகள் said...

இயற்கை ராஜி* said...

//oru poovuku poo pidikathaaaa..:-) enna kodumai subi ithu?//

உன் நல்ல மனசு தெரியாம இத்தனை நாள் உங்க பதிவுக்கு மொக்கையா கமெண்ட் போட்டேனே?

சாரி.. இனி உங்க பதிவுக்கு மூணு ஓட்டு போடறேன்,...

பிரேமா மகள் said...

VELU.G said...

//Blogger ப்ரின்ஸ் said...

எனக்கும் புடிக்கலங்க


//எனக்கும் தாங்க//

ஏம்ப்பா.. ஏன் இப்படி கூட்டு சேர்ந்து குழி பறிக்கிறீங்க?

பிரேமா மகள் said...

ரோகிணிசிவா said...
//
பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!

ennanu solluvwen , enga poi solluven , inth kodumaiya kekka yaarumae illaiyaa//

உண்மையை சொன்னா, ஒத்துக்கணும்.. அதை விட்டு இப்படி புலம்பக் கூடாது...

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...


//*இயற்கை ராஜி* said...
oru poovuku poo pidikathaaaa..

ராஜி இது... ரொம்ப ஓவர்..

வால் பையன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

ஏன் அங்கிள் இந்த கொலை வெறி?

RASSI said...

பூவுக்கு புன்னகை உண்டு, ஆனால் பூவுக்கு பொய் சொல்ல தெரியும்னு எனக்கு தெரியாது.
இந்த பொய்யில் பூ பூவை ரசிப்பது நான் கானும் மெய்.

தாராபுரத்தான் said...

நல்ல சிந்தனை..பூ க்கே பூவை பிடிக்கலை..

க.பாலாசி said...

நல்லாயிருக்குதாயீ... ஆமா மொத்தமே மூணு பூ மட்டும்தான் புடிக்காதா... இல்ல இன்னும் இருக்கா..

//இயற்கை ராஜி* said...
oru poovuku poo pidikathaaaa..:-) enna kodumai subi ithu?//

இந்த கொடும வேறயா.. ஏற்கனவே யாரும் கும்மலையேன்னு வெறியில இருக்கேன்..

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
மேற்கொண்ட பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

யுக கோபிகா said...

பூ பிடிக்காத பூவையரும் உண்டா ?
கவிதை அருமை ..

அன்புடன் நான் said...

இதனாலத்தான்..... பூ ஒன்னு புயலாச்சா?

பா.ராஜாராம் said...

சுபி,

மிக அருமையான கவிதை இது. பேச்சு போலான மொழி மிக நெருக்கம். இதை நீங்க சீரியசாய் பார்க்காத குறை.

but, i love this as poyem!

priyamudanprabu said...

காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதுல ரோசா புடிக்கலை...
////////

கவிதை பூ பிடிச்சிருக்கு

அன்புடன் அருணா said...

அச்சச்சோ பூ பிடிக்காமப் போச்சா!??

சந்தனமுல்லை said...

:-) or :-(

இப்போ ஒன்லி டேஃபடில்ஸ்தானா?!