மூன்றாவது முறையாக ஒலிம்பிக்
ஒரே நகரத்தில் நடப்பது பெரும் கவுரவம். அந்த பெருமையை அடைந்திருக்கும் ஒரே நகரம்
லண்டன். ஏதென்ஸ் நகரம் இந்த பெருமைக்கு உரியதாக இருந்தாலும் 1906-ம் ஆண்டு நடந்த
விளையாட்டுப் போட்டி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையான ஒலிம்பிக்-ஆக அதன் நிர்வாக
கமெட்டி அறிவிக்கவில்லை.
ஒலிம்பிக்-யின் தாயகம் லண்டன்
தான் என புதுசாக கொடி தூக்குகிறார்கள் சிலர். காரணம் பழைய இங்கிலிஷ் கிராமமான மூச்
வென்லாக் என்ற இடத்தில் 1866-ம் ஆண்டு ஒலிம்பிக் முன் மாதிரியான விளையாட்டுப்
போட்டி நடத்தப்பட்டது. நவீன ஒலிம்பிக்கின் தந்தை இது. 1896-யில் பிறகு ஏதென்ஸில்
நடந்த ஒலிம்பிக்-யைத்தான் வரலாறு கொண்டாடுகிறது என்பதில் ஏகப்பட்ட வருத்தம்
இங்கிலாந்து வாசிகளுக்கு. 2012 லண்டன் ஒலிம்பிக்கை வென்லாக் விளையாட்டுப் போட்டி
என அழைத்து ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள்.
டாக்டர் வில்லியம் பென்னி
புரோக்ஸ் என்பவர் முதல் ஒலிம்பிக் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு, இண்டர்நேசனல்
ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். 1994-ம் ஆண்டு ஐஒசி-(இண்டர் நேசன்ல் ஒலிம்பிக்
கமிட்டி)-யின் பிரசிடெண்ட் ஆக இருந்த ஜியேன் ஆண்டோனியோ சம்ரஞ்ச் என்பவர் டாக்டர்
பென்னி புரோக்ஸ்-க்கான மரியாதையை செய்து, அவர்தான் ஒலிம்பிக் கமெட்டியை நிறுவினார்
என உலகம் அறியச் செய்தார்.
பிரிட்டன் ஒலிம்பிக்
வரலாற்றில் முதல் பதக்கம் பெற்றுத் தந்த அரிஸ்டோகிராட் இந்தியாவில் பிறந்தவர்.
கிழக்கிந்திய கம்பெனி சார்பாக இந்தியா வந்து குடியேறியவர்களில் இவர்களது
பெற்றோரும் அடக்கம்.
லயூன்செஸ்ட்ன் எலியாட்
என்பவர் ஒற்றைக் கையால் பளு தூக்கும் போட்டியில் 1986-ம் ஆண்டு ஏதென்ஸில் வெற்றி
பெற்றார். 1955-ம் ஆண்டு ஒலிம்பிக் பற்றி வந்த முதல் கலர் பொழுதுபோக்கு
திரைப்படமான ஜியார்டி, இவரைக் கருவாக வைத்துதான் உருவாக்கப்பட்டது..
ஒலிம்பிக் துவக்க விழா 27-ம்
தேதி ஜீலை 2012 அன்று நடந்தது. சரியாக நூறு வருடங்களுக்கு முன் 1912ம் ஆண்டு
ஸ்வீடனில் இதே நாளில் தான் ஒலிம்பிக் நிறைவுற்றது. நூற்றாண்டு வித்தியாசத்தை
அறிவிக்கும் வகையில் அதே தேதியில் இந்த முறை துவக்கமானது.
ஒலிம்பிக் நிகழ்ச்சிக்காக
அங்கிகாரம் பெற்ற விளம்பரதாரர்கள் தவிர, வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர் வேறு
பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் நடந்து கொண்டாலோ, அல்லது
சுயவிளம்பரத்துக்காக ஆடையின்றி மைதானத்துக்குள் யாரேனும் வந்தாலோ இருபதாயிரம்
பவுண்ட்ஸ் வரை அபராதம் என அறிவித்திருக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. (இந்திய
மதிப்பில் 1720000ரூபாய்).
ஆர்டிஸ்டிக் டைரக்டர்
எனப்படும் டோனி பயல் பிரிட்டன் சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கத்தில்
துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தது. அவருடைய ஸ்லம்டாக் மில்லினியர் படம் ஆஸ்கர்
விருதுகளையும் எக்கச்சக்க புகழையும் அள்ளித் தந்தது. அப்படத்துக்கு இசை அமைத்த
ஏ.ஆர் ரஹ்மான் க்கும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. அந்த நட்பின்
அடிப்படையில் துவக்க விழாவில் ரஹ்மான் கலை நிகழ்ச்சி இருக்கும் என இந்தியர்களோடு
உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மீடியாக்களும் இதை உறுதி செய்தன. ஆனால்
ரஹ்மான் நிகழ்ச்சி இடம் பெறாமல் போனதுக்கான காரணம் ஒலிம்பிக் கமிட்டி மட்டுமே
அறியும்.
ஒலிம்பிக் போட்டி வர்ணனைகள்
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் இரு மொழிகளிலும் நடந்தது. பிரிட்டனில் போட்டி நடப்பதால்
ஆங்கில உச்சரிப்பு. சரி பிரெஞ்ச் எதற்கு என்று கேட்கிறீர்களா? சுவிட்சர்லாந்தில்
அமைந்திருக்கும் இண்டர்நேசனல் ஒலிம்பிக் கமிட்டியின் அலுவக மொழி பிரெஞ்ச். இப்போது
புரிந்ததா?
அதிகாரபூர்வமான
அறிவிப்பின்படி 7500 தன்னார்வலர் தொண்டு பணியாளர்கள் துவக்க விழா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர். விழா அமைப்பு இவர்களுக்கு தெரிந்தால் வெளியே கசிந்து
நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் இவர்கள் அனைவரைக்கும்
தனித்தனியாக பயிற்சி தரப்பட்டது. மொத்தம் 284 முறை இவர்கள் பிராக்டிஸ் செய்து
பழகியிருக்கின்றனர். இவர்களோடு சேர்ந்து 89 விலங்குகளும் துவக்க விழாவில் கலை
நிகழ்ச்சியில் சிறப்பித்திருக்கின்றன,
துவக்க விழாவில் பலரையும்
அதிசியக்க வைத்த நிகழ்வு பிரிட்டன் அரசின் இலவச மருத்துவ சேவையான என்.ஹெச்.எஸ்
(national health service) நடத்திய கலை நிகழ்ச்சிதான். 25 பள்ளிகளில் இருந்து 170
மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 9 நிஜ நோயாளிகளும் கலந்து கொண்டதோடு 3 டாக்டர்களும்
கலந்து கொண்டனர். உலகம் ரசித்த இந்த நிகழ்ச்சிக்கு 600 பேரின் உழைப்பு
தேவைப்பட்டிருக்கிறது.
துவக்க விழாவில் 500-க்கும்
மேற்பட்ட ஸ்பிக்கர்கள் மற்றும் 50 டன் எடை கொண்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
ஒலிம்பிக்-யில் ஒவ்வோரு
நிகழ்வும், போட்டியும் எப்போது நடக்க வேண்டும் என கார்பன் பிரிண்ட் காப்பி போல
ஏற்கனவே ஒத்திகை பார்த்து செயல்படுத்துகிறது லண்டன் கமிட்டி. இது ஒலிம்பிக்
வரலாற்றில் முதல்முறை.
ஒற்றைக் கையால் தேம்ஸ்
நதியில் படகு செலுத்தியபடி ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த பிரபல கால்பந்து வீரரும்
முன்னால் கேப்டனுமான டேவிட் பெக்கம், தீபத்தை பிரிட்டனின் கிரேட்டஸ்ட் ஒலிம்பியன்
என அழைக்கப்படும் ஸ்டீவ் ரெட்கிரேவ்-யிடம் ஒப்படைத்தார். துவக்க விழா நடைபெறும்
ஸ்டேடியத்துக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வரும் வாய்ப்பு இவருக்குத்தான்
தரப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வளரும் ஒலிம்பிக் வீரர்களாக ஏழு
இளைஞர்கள் கையில் தீபத்தைத் தர அவர்கள் ஸ்டேடியத்தை சுற்றி வந்து தீபமேற்றியது
ஒட்டுமொத்த பார்வையார்களுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கே ஆச்சர்யம்.
இனி இளைய தலைமுறை ஒலிம்பிக் பயணத்தை தொடரட்டும் என ஸ்டீவ் சொல்லும் போது மீடியா
ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனது.
ஒலிம்பிக் துவக்க
நிகழ்ச்சியில் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் எனப்படும் நடிகர் டேனியர் கிரேக் பக்கிங்கம்
அரண்மணைக்குச் சென்று, எலிசபெத் ராணியை அழைத்துவரும் காட்சி ஒளிபரப்பானது.
ஹெலிஹாப்டரில் பறந்து வரும் இருவரும் ஸ்டேடியத்துக்குள் பாராசூட் மூலம் குதிப்பது
போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. டேனியல் கிரேக் சினிமாவில் நடித்து அனுபவம்
இருக்கும். ஆனால் 60 வயது ராணி எப்படி பாராசூட்டில் பறந்து குதித்தார் என உலகமே
ஆச்சர்யமாய் பார்த்தது. பிறகுதான் ஹாலிவுட் காமெடி நடிகர் கேரி கேனரி பாராசூட்
மூலம் குதித்தார் என இக்காட்சியை படமாக்கிய பி.பி.சி மீடியா அறிவித்தது.
போட்டியில் கலந்து கொள்ள
வரும் வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை பிடித்து வருவதுதான் மரபு. ஆனால் இந்த லண்டன்
2012-யில் நான்கு வீரர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. தெற்கு சூடானில்
இருந்து வந்த அகதி ஒருவர் மற்றும் முன்னால் டச் மேற்கிந்திய தீவினர் மூன்று
பேரும். ஒலிம்பிக்-யின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை ஏந்தி வந்தனர். ஒலிம்பிக் கமிட்டி
சார்பாக, கொடியை ஏந்தி வந்தவர் ஐ.நா சபை தலைவர் பான் கீ மூன்.
முதல் தங்கப்பதக்கத்தை தாங்கள்தான் வாங்குவோம் என எதிர்பார்த்திருந்த
அமெரிக்காவிற்கு சீனா முதல் தங்கப்பதக்கத்தை வாங்கியவுடன் தாங்க முடியவில்லை.
மகளீர் பிரிவின் 400 மீட்டர் நீச்சல் பிரிவில் 16 வயதே ஆன சீன வீராங்கனை யே ஷிவான்
தங்கம் பதக்கம் வெல்ல இன்னும் அமெரிக்காவில் வயிற்றெரிச்சலை கிளப்பியதோடு, ஊக்க
மருந்து புகாரையும் கிளப்பியது. உடனே தன் நாட்டு மீடியாவை சீனாவுக்கு அனுப்பி,
ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சின்ன வயதில் இருந்தே விளையாட்டு வீரர்களை
சித்தரவதை செய்து பயிற்சி அளிக்கிறார்கள் என பரப்பரப்பு செய்தியையும்
தொலைக்காட்சியில் வெளியிட்டது. சிறுவர் சிறுமியர்களின் கை கால்களை முறுக்கியும்
கால்களை இழுத்து வளைத்தும், குச்சியால் அடித்தும் மிரட்டும் புகைப்படங்கள்
மீடியாக்களில் வர பார்வையாளர்கள் சீனாவை திட்டித் தீர்க்கின்றனர்.
லண்டன் 2012-யில் 204-
நாடுகளில் இருந்து சுமார் 10000 விளையாட்டு வீரர்கள் 302 வகையாக போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.
4 comments:
அட பாருங்கய்யா...
பதிவெல்லாம் போடுறாங்க... :-)))
Good Informations- But edho paadhi-yila mudinja maadhiri irukke? Innum irundhaalum ezhudhunga
அகல்விளக்கு:
ரொம்ப நாள் கழிச்சு வந்தால், பக்கமே மாறிப் போயிருக்கு..... புது போஸ்ட் எப்படி போடுறதுன்னு கூட தெரியலை..
பிரதீபா;
இது பத்திரிக்கைக்கு தருவதற்காக சும்மா தகவல்களை மட்டும் திரட்டி எழுதியது....
Post a Comment